"தாயின் சாதி அடிப்படையில் ஏன் சாதி சான்றிதழை தரலாமே?" புதுச்சேரி பெண்ணுக்கு உச்சநீதிமன்றம் அனுமதி
டெல்லி: இந்தியாவில் பொதுவாகத் தந்தையின் சாதியைப் பொறுத்தே குழந்தைகளுக்குச் சாதிச் சான்றிதழ் வழங்கப்படுகிறது. இதற்கிடையே ஒரு சிறுமியின் கல்வி எதிர்காலத்தைப் பாதுகாக்கும் விதமாக, தாயின் சாதியின் அடிப்படையில் பட்டியல் சாதி (எஸ்.சி) சான்றிதழ் வழங்க உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை அனுமதி அளித்துள்ளது. இது தொடர்பாக நாம் விரிவாகப் பார்க்கலாம்.
நமது நாட்டில் சாதி அடிப்படையில் பல நூறு ஆண்டுகளாக ஏற்றத்தாழ்வு இருந்து வருகிறது. அதைக் கருத்தில் கொண்டே இங்குச் சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. மேலும், நமது நாட்டில் பொதுவாகத் தந்தையின் சாதியைப் பொறுத்தே குழந்தைகளுக்குச் சாதிச் சான்றிதழ் வழங்கப்படுகிறது. இருப்பினும், இந்த விதிக்கு எதிராகப் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.

தாய் சாதி அடிப்படையில் சான்றிதழ்
இதற்கிடையே ஒரு சிறுமியின் கல்வி எதிர்காலத்தைப் பாதுகாக்கும் விதமாக தாயின் சாதியின் அடிப்படையில் பட்டியல் சாதிச் சான்றிதழ் வழங்க உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. புதுச்சேரியைச் சேர்ந்த அந்தச் சிறுமிக்குப் பட்டியல் சாதிச் சான்றிதழ் வழங்கும்படி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
அதை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்ட நிலையில், அந்த உத்தரவில் தலையிட உச்ச நீதிமன்ற அமர்வு மறுத்துவிட்டது.
இது தொடர்பான வழக்கைத் தலைமை நீதிபதி சூர்ய காந்த் மற்றும் நீதிபதி ஜாய்மால்யா பக்ஷி ஆகியோரின் அமர்வு விசாரித்தது.
சிறுமியின் கல்வி பாதிக்கப்படுவதைத் தடுப்பதற்காகவே இந்தக் குறிப்பிட்ட உத்தரவைப் பிறப்பிப்பதாகவும் நீதிபதிகள் தெரிவித்தர்.
அதேநேரம் சட்டப்படி எது சரியானது என்பது குறித்து இன்னும் விசாரணை நடக்கவே செய்கிறது என்று அவர் தெரிவித்தார்.
முக்கிய கருத்து
இந்த வழக்கில் தலைமை நீதிபதி சொன்ன பல கருத்துகள் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
இது தொடர்பாகத் தலைமை நீதிபதி, "இப்போது காலம் வேகமாக மாறி வருகிறது.. ஏன் ஒரு தாயின் சாதியின் அடிப்படையில் சாதிச் சான்றிதழ் வழங்கப்படக்கூடாது?" என்று கேள்வி எழுப்பினார். தலைமை நீதிபதியின் இந்தக் கருத்தே இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
சாதிச் சான்றிதழ் வழங்கப்பட்டால்.. பட்டியல் சாதியைச் சேர்ந்த தாய்மார்களுக்கும், முன்னேறிய சாதியைச் சேர்ந்த தந்தைகளுக்கும் பிறந்து, எஸ்சி அல்லாத குடும்பச் சூழலில் வளர்க்கப்பட்ட குழந்தைகள் பட்டியல் சாதிச் சான்றிதழ்களைக் கோர முடியும் என நெட்டிசன்கள் கருத்து கூறுகிறார்கள். இருப்பினும், இது தொடர்பான வழக்கு நிலுவையிலேயே உள்ளது குறிப்பிடத்தக்கது.
பின்னணி
அந்தச் சிறுமியின் தாய் தனது மூன்று குழந்தைகளுக்கும் எஸ்சி சாதிச் சான்றிதழ் கோரியுள்ளார். தான், இந்து ஆதி திராவிடர் சமூகத்தைச் சேர்ந்தவள் என்றும் திருமணத்திற்குப் பிறகு கணவரும் தனது பெற்றோர் வீட்டிலேயே வாழ்ந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். மேலும், தனது பெற்றோரும், தாத்தா பாட்டிகளும் எஸ்.சி சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் குறிப்பிட்டார். இதனால் தனது மகள்களுக்கு எஸ்சி சாதிச் சான்றிதழ் கோரினார்.
ஏன் முக்கியம்
தற்போதைய விதிகளின்படி, ஒருவரின் தந்தையின் சாதி அடிப்படையிலேயே சாதிச் சான்றிதழ் வழங்கப்படுகிறது. உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவு, இந்தக் குறிப்பிட்ட வழக்கிற்கு மட்டுமே பொருந்தும் என்று தெளிவுபடுத்தப்பட்டாலும், தலைமை நீதிபதி சொன்ன கருத்து எதிர்காலத்தில் இந்த விதிகளில் மாற்றத்தை ஏற்படுத்தவும் வாய்ப்பு இருக்கிறது
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications