Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அவசரமாக கருத்து கேட்கும் மத்திய அரசு! பல மாநிலங்களில் ஆட்சி கலைக்க வாய்ப்பு என பரவும் தகவல் பின்னணி

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஒரே நாடு ஒரே தேர்தலை அமல்படுத்துவது பற்றி மக்கள் தங்களின் கருத்துகளை ஜனவரி 15ம் தேதிக்குள் தெரிவிக்கலாம் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த செயல்முறை அமலுக்கு வந்தால் பல மாநில சட்டசபைகள் கலைக்கப்படும் என்ற தகவல் பரவி வரும் நிலையில் எதிர்க்கட்சிகள் தற்போது வரை எதிர்ப்பை காட்டாமல் மவுனமாக உள்ளன. இந்நிலையில் தான் அடுத்து என்ன நடக்கும்? என்பது பற்றிய முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.

இந்தியாவில் சட்டசபை தேர்தல்கள் மற்றும் நாடாளுமன்ற தேர்தல்கள் தனித்தனியே நடந்து வருகிறது. இந்நிலையில் தான் சட்டசபை தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்த ‛ஒரே நாடு ஒரே தேர்தல்' திட்டத்தை மத்திய அரசு கையில் எடுத்துள்ளது.

Why opposition parties silence on One Nation One Election row? 2 main reasons here

இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. ஒரே நாடு ஒரே தேர்தல் கொண்டு வருவதில் பல நடைமுறை சிக்கல்கள் உள்ளன. இதனால் மத்திய அரசு இந்த திட்டத்தை கைவிட வேண்டும் என தொடர்ந்து எதிர்க்கட்சிகள் குரல் கொடுத்து வருகின்றன.

ஆனால் மத்திய அரசு விடுவதாக இல்லை. ஒரே நாடு ஒரே தேர்தலை இந்தியாவில் அமல்படுத்துவதில் உறுதியாக இருக்கிறது. ‛ஒரே நாடு ஒரே தேர்தல்' குறித்து ஆய்வு செய்ய மத்திய சட்டத்துறை அமைச்சர் 8 பேர் கொண்ட குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது.

இதன் தலைவராக முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் குழுவில் மத்திய அமைச்சர் அமித் அஷா, காங்கிரஸ் எம்பியும், லோக்சபா காங்கிரஸ் குழு தலைவருமான ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, குலாம் நபி ஆசாத், என்கே சிங், சுபாஷ் சி. காஷ்யப், ஹரிஷ் சால்வே, சஞ்சய் கோதாரி உள்ளிட்டோரும் இடம்பெற்றிருந்தனர். இதில் காங்கிரஸ் கட்சியின் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி விலகுவதாக அறிவித்தது.

இதையடுத்து ராம்நாத் கோவில் தலைமையிலான குழு தொடர்ந்து ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டசபை தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்த சாத்தியம் உள்ளதா? அப்படி செய்தால் பாதுகாப்பு பணி, தேர்தல் பணி உள்ளிட்டவற்றில் எந்த மாதிரியான நடைமுறையை கொண்டு வர வேண்டும். செலவு குறையுமா? அதிகரிக்குமா? என்பது உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

இந்த குழு இறுதி அறிக்கையை மத்திய அரசிடம் தாக்கல் செய்யும். அதன்பிறகு ஒரே நாடு ஒரே தேர்தலை கொண்டு வருவது தொடர்பாக இறுதி முடிவு எடுக்கப்படும். இதற்கிடையே தான் நாட்டில் ஒரே நேரத்தில் சட்டசபை, நாடாளுமன்றத்துக்கு தேர்தல் நடத்துவதாக தொடர்பாக பொதுமக்கள் தங்களின் ஆலோசனைகளை தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி ஜனவரி 15க்குள் பொதுமக்கள் தங்களின் கருத்துகளை தெரிவிக்கலாம் என ஒரே நாடு. ஒரே தேர்தல் குழு செயலாளர் தரப்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி பொதுமக்கள் தங்களின் கருத்துகளை https://onoe.gov.in என்ற இணையதளம் அல்லது sc-hic@ gov.in என்ற மின்னஞ்சலில் அனுப்பலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பு இன்று வெளியான நிலையில் ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறை இந்தியாவில் கொண்டு வரப்பட்டால் பல மாநிலங்களின் ஆட்சிகள் கலைக்கப்படும் என்ற தகவல்கள் பரவி வருகிறது. இருப்பினும் கூட தற்போது வரை எதிர்க்கட்சிகள் தரப்பில் எந்தவித எதிர்ப்புகளும் தெரிவிக்கப்படாமல் உள்ளது. ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை தொடர்ந்து எதிர்க்கட்சிகள் எதிர்த்து வந்த நிலையில் இன்றைய தினம் மக்கள் கருத்து கேட்பு பற்றிய அறிவிப்பு வந்தாலும் எதிர்வினையை காட்டவில்லை.

இந்நிலையில் தான் தற்போது இன்னொரு தகவல் வெளியாகி உள்ளது. அதாவது ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக வெளிப்படையாக எதிர்க்கட்சிகள் எதிர்ப்பை காட்டாமல் தங்களின் கட்சி தொண்டர்கள் மூலம் இணையதளம் மற்றும் மின்னஞ்சல் வழியாக எதிர்ப்பை பதிவு செய்யலாம் என கூறப்படுகிறது. பொதுமக்களிடம் கருத்து கேட்பு நடத்துவதன் மூலம் எத்தனை பேர் ஆதரவு, எதிர்ப்பு தெரிவித்தனர் என்பது பற்றிய விபரத்தை வெளியிட வேண்டி இருக்கும். அப்படி வெளியிடும்போது ஆதரவை காட்டிலும் எதிர்ப்பு அதிகமாக பதிவு செய்யப்பட்டால் மக்களின் விருப்பத்தை முன்வைத்து ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை எதிர்க்கட்சிகள் எதிர்க்கலாம் என அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் தற்போதைய சூழலில் இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் என்பது இன்னும் 4 மாதத்தில் நடைபெற உள்ளது. இப்படி இருக்கும்போது மத்திய அரசு எப்படி முயன்றாலும் கூட வரும் நாடாளுமன்ற தேர்தலுடன் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை அமல்படுத்திவிட முடியாது. இப்படியான சூழலில் நாடாளுமன்ற தேர்தல் நடந்து பாஜக வென்றால் உடனே ஆட்சியை கலைத்து சட்டசபை, நாடாளுமன்றத்துக்கு தேர்தல் நடத்த அந்த கட்சி விரும்பாது. அதேபோல் எதிர்க்கட்சிகள் ஆட்சிக்கு வந்தால் இந்த திட்டம் முழுமையாக கைவிடப்படும். இதனால் ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது வரும் நாடாளுமன்ற தேர்தலின்போது அமலுக்கு வர வாய்ப்பில்லை என்பதால் எதிர்க்கட்சிகள் மவுனமாக இருப்பதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+