மோடி செய்த ஒரே டிவிட்.. எல்லோரின் 'போகஸும்' பாபா ராமதேவ் மீதுதான்.. ஏன்? முக்கிய அறிவிப்பு வருகிறதா?
பிரதமர் மோடி சமூக வலைத்தளங்களை விட்டு செல்வதாக டிவிட் செய்த நிலையில் தற்போது எல்லோரின் கவனமும் பதஞ்சலியின் நிறுவனர் பாபா ராம்தேவ் மீதுதான் திரும்பி உள்ளது.
டெல்லி: பிரதமர் மோடி சமூக வலைத்தளங்களை விட்டு செல்வதாக டிவிட் செய்த நிலையில் தற்போது எல்லோரின் கவனமும் பதஞ்சலியின் நிறுவனர் பாபா ராம்தேவ் மீதுதான் திரும்பி உள்ளது.
Recommended Video
பிரதமர் மோடி சமூக வலைத்தளங்களை விட்டு செல்வதாக அறிவித்து இருப்பது இணையம் முழுக்க பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நேற்று இரவில் இருந்து டிவிட்டரில் இதுதான் டிரெண்டாகி வருகிறது. மோடியின் இந்த முடிவிற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை.
நேற்று பிரதமர் மோடி தனது டிவிட்டில், வரும் ஞாயிற்றுக்கிழமை பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம், யூட்யூப் போன்ற அனைத்து வகையான சமூக வலைதளங்களில் இருந்தும் வெளியேறுவதற்கு யோசித்து வருவதாக பிரதமர் மோடி நேற்று ஒரு ட்வீட்டர் பதிவு வெளியிட்டிருந்தார். அவரின் இந்த டிவிட்டர் பதிவு பெரிய வைரலாகி உள்ளது.

மோடி எப்படி
பிரதமர் மோடியின் இந்த டிவிட்டை தொடர்ந்து சமூக வலைத்தளம் முழுக்க வைக்கப்பட்ட ஒரே கேள்வி, இந்தியா தனக்கென்று ஒரு சமூக வலைத்தளத்தை உருவாக்குகிறதா என்பதுதான். அதாவது டிவிட்டர், பேஸ்புக் போன்ற அமெரிக்க தயாரிப்புகளை துறந்துவிட்டு , இந்தியாவிற்கு என்று ஒரு சமூக வலைத்தளத்தை மத்திய அரசு உருவாக்க திட்டமிடுகிறது என்று கேள்விகள் எழுந்தது. மத்திய அரசு இதற்கான திட்டங்களை வகுக்கலாம் என்று பலரும் சந்தேகம் எழுப்பினார்கள்.

பதஞ்சலி எப்படி
இந்த நிலையில் பலரும் தற்போது பலரும் பதஞ்சலியின் நிறுவனர் பாபா ராம்தேவ் மீது கவனம் செலுத்த தொடங்கி உள்ளனர். இதற்கு பின் நிறைய காரணங்கள் இருக்கிறது. தற்போது மொபைல் பயனாளிகளை, இளைஞர்களை பதஞ்சலி நிறுவனம் குறி வைத்துள்ளது. இதற்காக ஆண்ட்ராய்ட் ஆப்களை வெளியிட திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே பிஎஸ்என்எல் நிறுவனத்துடன் இணைந்து 'சுதேசி சம்ரிதி' என்கிற பெயரில் சிம் கார்டை அறிமுகப்படுத்தியது.

திட்டம்
அதன்பின் இன்னும் வரிசையாக நிறைய ஆண்ட்ராய்ட் ஆப்களை வெளியிட திட்டமிட்டுள்ளது. அதேபோல்தான் கடந்த 2018ம் வருடம் பதஞ்சலி நிறுவனம் வாட்ஸ் ஆப் நிறுவனத்திற்கு போட்டியாக கிம்போ என்ற ஆண்ட்ராய்ட் செயலியை வெளியிட்டது. பார்க்க இந்த கிம்போ அச்சு அசலாக மருவைத்த வாட்ஸ் ஆப் போலவே இருந்தது. இதை சிலர் நூறு பேர் டவுண்லோடும் செய்தனர். வந்த முதல்நாளே பல காரணங்களால் வைரலானது.

பிளே ஸ்டோர்
ஆனால் அதன்பின் இந்த ஆப் கூகுள் பிளே ஸ்டோர் தளத்தில் இருந்து நீக்கப்பட்டது. கிம்போ என்றால் சமஸ்கிருதத்தில் வாட்ஸ் ஆப் என்று பொருள்படும். ஆனால் இந்த கிம்போ இரண்டு நாட்களுக்குள் ''அம்போ'' என்று பிளே ஸ்டோர் இயங்குதளத்தில் இருந்து நீக்கப்பட்டது. வாட்ஸ் ஆப்பின் மாடலை காப்பியடித்தது, பயனாளிகளுக்கு போதுமான பாதுகாப்பு வழங்காதது என்று வரிசையாக பல காரணங்கள் கூறப்பட்டதால் உடனடியாக நீக்கப்பட்டது.

ஆண்டிராய்டு அப்
இந்த நிலையில் மீண்டும் இவர் புதிய ஆண்டராய்ட் சமூக வலைதள பக்கங்களை வெளியிட திட்டமிட்டு வருகிறார். மத்திய அரசு இதற்கு ஆதரவு அளிக்க கூட வாய்ப்புள்ளது. அதன் ஒரு கட்டமாகத்தான் தற்போது மோடி டிவிட்டரை விட்டு வெளியேற திட்டமிட்டுள்ளார் என்கிறார்கள். இன்னும் சிலர் பாபா ராம்தேவ் வரும் ஞாயிற்றுக்கிழமை முக்கிய அறிவிப்பை வெளியிடலாம் என்றும் கூறுகிறார்கள்.

புதிய ஆப்
அதாவது தனது புதிய ஆப் குறித்த அறிவிப்பை இவர் வெளியிட வாய்ப்புள்ளது. அல்லது வேறு யாராவது தொழிலதிபர் முக்கிய அறிவிப்பை வெளியிட வாய்ப்புள்ளது. மத்திய அரசு தனக்கென்று ஆப் ஒன்றை வெளியிட வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள். இதனால் பிரதமர் மோடி வரும் ஞாயிற்றுக் கிழமை என்ன அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications