‛‛2 மேட்டர்’’.. ஜி20 தலைவர்களுக்கு கைத்தறி துண்டை மோடி அணிவித்தது ஏன்? அட இது தெரியாம போச்சே!
டெல்லி: ஜி20 உச்சி மாநாட்டில் வந்த வெளிநாட்டு தலைவர்கள் இன்று டெல்லி ராஜ்காட்டில் மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர். இந்த வேளையில் வெளிநாட்டு தலைவர்களுக்கு பிரதமர் மோடி கைத்தறியில் தயாரான கதர் துண்டை அணிவித்த நிலையில் அதன் பின்னணியில் உள்ள 2 சூப்பரான மேட்டர் வெளியாகி உள்ளது.
இந்தியா தலைமையேற்று டெல்லியில் நடத்தி ஜி20 அமைப்பின் உச்சிமாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான், பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக், கனடா பிரதமர் ஜஸ்ட்டின் உள்பட ஏராளமானவர்கள் வெளிநாட்டு தலைவர்கள் பங்கேற்றனர்.

நேற்று தொடங்கிய ஜி20 உச்சி மாநாடு இன்று முடிவடைந்தது. நேற்று முதல் நாள் மாநாட்டில் உக்ரைன் மீதான ரஷ்யா தொடர்ந்துள்ள போரை நிறுத்த வேண்டும். இந்தியா உள்பட உலக நாடுகள் அனைத்தும் அமைதியை விரும்புகிறது. இதனால் ரஷ்யா பிரச்சனையை பேசி தீர்க்க வேண்டும் என மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.
அதன்பிறகு இன்று 2நாள் மாநாடு நடந்து முடிந்தது. இதையடுத்த ஜி20 உச்சி மாநாட்டுக்கான தலைமை பொறுப்பை பிரதமர் நரேந்திர மோடி பிரேசிலில் ஒப்படைத்தார். இதன்மூலம் அடுத்த ஆண்டு ஜி20 உச்சி மாநாடு பிரேசிலில் நடைபெற உள்ளது. முன்னதாக இன்று காலையில் 8.30 மணியளவில் உலகத் தலைவர்கள் டெல்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.
ராஜ்காட்டுக்கு வந்த உலகத் தலைவர்களை பிரதமர் மோடி வரவேற்றார். உலக தலைவர்களுக்கு கதர் துண்டு அணிவித்து பிரதமர் மோடி வரவேற்றார். பின்னர் டெல்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். இந்நிலையில் தான் வெளிநாட்டு தலைவர்களின் கழுத்தில் பிரதமர் மோடி கதர் துண்டு அணிவித்தன் பின்னணியில் உள்ள முக்கிய 2 விஷயம் பற்றிய தகவல் வெளியாகி உள்ளது.

அதாவது கைத்தறி துணிகளுக்கும், மகாத்மா காந்திக்கும் இடையே நெருங்கிய தொடர்பு உள்ளது. ஒரு காலத்தில் இந்தியா ஆங்கிலேயர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது. அப்போது மகாத்மா காந்தி சுதந்திரத்துக்காக போராடினார். இந்த வேளையில் அந்திய பொருட்களை புறக்கணிக்கும் வகையில் சுதந்திர இயக்கம் மூலம் கைத்தறி ஆடை பயன்படுத்துவதை தொடங்கி பெரிய புரட்சியை ஏற்படுத்தினார். இந்த மகாத்மா காந்தியின் இந்த புரட்சியை நினைவுப்படுத்தும் வகையில் பிரதமர் மோடி கைத்தறி முறையில் உற்பத்தி செய்யப்பட்ட கதர் துண்டை வெளிநாட்டு தலைவர்களின் கழுத்தில் அணிவித்தார்.
2வது விஷயம் என்னெவென்றால் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு தற்போது சுயசார்பு இந்தியா என்ற கொள்கையை வகுத்து செயல்பட்டு வருகிறது. அதாவது பிற நாடுகளை நம்பி இருப்பதை படிப்படியாக குறைத்து அனைத்து துறைகளிலும் உள்நாட்டு உற்பத்தியை மேம்படுத்தும் நோக்கத்தில் அதற்கான திட்டங்களை செயல்படுத்தி ஊக்குவித்து வருகிறது. இதற்கு அடையாளமாக மகாத்மா காந்தி கையில் எடுத்த கைத்தறி கதர் துணி புரட்சியை சுட்டிக்காட்டி பிரதமர் மோடி உலக தலைவர்களுக்கு அதனை அணிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.












Click it and Unblock the Notifications