டென்ஷன்.. தேசிய அரசியலை புரட்டி போட்ட திமுக! மோடி போகும் இடமெல்லாம் தாக்க என்ன காரணம்? அந்த 3 விஷயம்
சென்னை: பிரதமர் மோடி செல்கிற மாநிலங்களில் எல்லாம் தமிழ்நாட்டில் ஆளும் திமுகவை விமர்சனம் செய்து வருகிறார். அவரின் தொடர் பேச்சுகள் விமர்சனங்களுக்கு பின் 3 முக்கிய காரணங்கள் உள்ளன.
பிரதமர் மோடி தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத் பகுதியில் பேசுகையில், தமிழ்நாட்டில் கோவில்கள் நிர்வகிக்கப்படும் விதம் பற்றி விமர்சனங்களை முன்வைத்தார். தமிழ்நாடு அரசு இந்து கோவில்களை ஆக்கிரமித்துள்ளதாகவும், அதுபோல் சிறுபான்மையினரின் வழிபாட்டுத் தலங்களின் நிர்வாகத்தை கையில் எடுக்க முடியுமா என்றும் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலடி தந்த முதல்வர் ஸ்டாலின், கோயில்களை தமிழ்நாடு அரசு அபகரித்து வைத்துள்ளதாக குற்றம்சாட்டிய பிரதமர் மோடிக்கு பதிலடி கொடுத்தார். பிரதமர் யாருக்காக பேசுகிறார்? யாருடைய குரலை எதிரொலிக்கிறார்?; கடந்த 2 ஆண்டுகளில் 1,000 கோயில்களுக்கு குடமுழுக்கு விழா நடத்தி இருக்கிறோம்; இது தவறா?; வரலாற்று சிறப்புமிக்க 112 கோயில்களை சீர்செய்ய 7100 கோடி ஒதுக்கீடு செய்தது தவறா?; 2 ஆண்டுகளில் | T3,500 கோடி மதிப்பிலான கோயில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன ம.பி., அந்தமான், தெலங்கானா என எங்கு போனாலும் தமிழ்நாட்டை பற்றித்தான் பேசுகிறார்; பிரதமரால் மறக்க முடியாத மாநிலமாக தமிழ்நாடு உள்ளது என்று பதிலடி கொடுத்தார்.

மோடி விமர்சனங்கள்; தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத் பகுதியில் பகுதியில் மட்டும் மோடி இப்படி பேசவில்லை. மோடி இதற்கு முன்பே திமுகவை கடுமையாக விமர்சனம் செய்தார். முன்னதாக பெங்களூரில் எதிர்க்கட்சிகள் கூட்டம் நடந்த போது அந்தமானில் போர்ட் பிளேயர் விமான நிலையத்தின் புதிய ஒருங்கிணைந்த முனையக் கட்டிடத்தைத் திறந்து வைத்த பிரதமர் மோடி திமுகவை கடுமையாக விமர்சனம் செய்தார். எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் 24 கட்சிகள் கலந்து கொள்ளும் நிலையில் திமுகவை மட்டும் குறிப்பிட்டு தனியாக தாக்கி பிரதமர் மோடி விமர்சனம் செய்தார்.
( இனியும் நான் பொறுக்கமாட்டேன்.. வெடித்து பொங்கிய ஸ்டாலின்.. அப்படியே ஸ்டன் ஆன திமுக.. திக் விசாரணை )
அதில், எதிர்க்கட்சிகள் தங்களின் தனிப்பட்ட ஆதாயங்களில் மட்டுமே ஆர்வம் காட்டுகின்றன என்று குறிப்பிட்ட பிரதமர் மோடி, பெங்களூருவில் ஊழல்வாதிகளின் கூட்டம் நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் ஊழல் வழக்குகள் இருந்தபோதிலும் எதிர்க்கட்சிகள் அனைத்தும் திமுகவுக்கு நற்சான்றிதழை கொடுத்துள்ளன. அரசு என்பது குடும்பத்திற்காக குடும்பம் மூலம் நடத்தப்படுவது என்பதே இவர்களின் முழக்கம். ஊழல்வாதிகளைப் பாதுகாக்க இப்போது எதிர்க்கட்சிகள் ஒன்றிணைகின்றன.. அவர்களுக்கு குடும்பம் தான் முதன்மையானது, தேசம் ஒன்றும் இல்லை, என்று திமுகவை தாக்கி பேசி உள்ளார்.
ஸ்டாலினுக்கு எதிராக டிரெண்ட்: பீகாரில் முதல்கட்ட கூட்டம் நடந்த போதும் சரி, இரண்டாம் கட்டமாக பெங்களூரில் கூட்டம் நடந்த போதும் சரி.. ஸ்டாலினுக்கு எதிராக பாஜக தலைவர்கள் தீவிரமாக பேசினர். அதேபோல் சமூக வலைத்தளங்களில் ஸ்டாலினுக்கு எதிராக கடுமையான டிரெண்ட் செய்யப்பட்டது.

என்ன காரணம்? : திமுகவை இப்படி தாக்க 3 காரணங்கள் உள்ளன. காரணம் 1: திமுகவின் வாக்குறுதிகள் தேசிய அரசியலில் காங்கிரசுக்கு உதவுகிறது. உதாரணமாக இலவச பேருந்து, பெண்களுக்கு மாதம் 1000 ரூபாய் வாக்குறுதி திமுக கொண்டு வந்தது. இது காங்கிரஸ் கர்நாடகா, இமாச்சல பிரதேசம் மாநிலம் ஆகிய மாநிலங்களில் வெற்றிபெற முக்கிய காரணமாக அமைந்தது. அதேபோல் இப்போது தெலுங்கானா, மத்திய பிரதேசம், ராஜஸ்தானிலும் கூட காங்கிரசுக்கு ஆதரவாக மாறி உள்ளது.
இதற்கு பதிலடி கொடுக்கவே மகளிர் இடஒதுக்கீடு கொண்டு வர பாஜக சட்டம் நிறைவேற்றியது. ஆனால் இந்த சட்டம் கூட பாஜகவிற்கு உதவுமா என்ற சந்தேகம் உள்ளது. காரணம் 2: எதிர்கட்சிகளை ஒன்றிணைப்பதில் திமுக பங்கு வகிக்கிறது.தமிழ்நாட்டில் உள்ள கூட்டணி பார்முலாவை தேசிய அளவில் கொண்ட செல்ல திமுக நினைக்கிறது.
( இங்கே ஸ்டாலின்.. மத்தியில் மோடி.. 2 பேருமே கிளீன் ஸ்வீப்தான்! தேர்தல் சர்வே சொன்ன 10 ஷாக் பாயிண்ட்ஸ்)
காரணம் 3: கொள்கை ரீதியாக பாஜகவை பெரிதாக கட்சிகள் எதிர்க்காத நிலையில் திமுகவின் கொள்கை பாஜகவின் கொள்கைக்கு அப்படியே எதிராக உள்ளது. சனாதனம் தொடங்கி . மாநில சுயாட்சி என்ற கொள்கையை பல மாநிலங்களுக்கு கடத்துகிறது.. இதுவே மோடி திமுகவை எதிர்க்க முக்கிய காரணமோ என்ற கேள்வி எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications