இனியும் நான் பொறுக்கமாட்டேன்.. வெடித்து பொங்கிய ஸ்டாலின்.. அப்படியே ஸ்டன் ஆன திமுக.. திக் விசாரணை
சென்னை: சமீபத்தில் திமுக மா.செ.க்களுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்திய முதல்வர் மு.க.ஸ்டாலின். இதில் பல அதிரடி உத்தரவுகளை ஸ்டாலின் பிறப்பித்தார். முக்கியமாக 40 தொகுதிகளையும் வென்றாக வேண்டும்.
எந்தவொரு தனிமனிதரையும் விட இயக்கமும்- இயக்கம் அடைய வேண்டிய வெற்றியும் தான் முக்கியம். தேர்தலில் தோல்வி அடைந்தால் மாவட்ட செயலாளர்களுக்கு எதிராக ஆக்சன் எடுப்பேன். அவர்களின் பதவி நீக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் கடுமையாக எச்சரித்தார்.
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் முதல்வர் ஸ்டாலின் நடத்திய இந்த மீட்டிங் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. நாடு முழுக்க லோக்சபா தேர்தலுக்காக பாஜக தீவிரமாக தயாராகி வருகிறது. இன்னொரு பக்கம் காங்கிரஸ் - திமுக ஆகியவை சேர்ந்து பிரம்மாண்டமாக இந்தியா என்ற கூட்டணியை தேசிய அளவில் உருவாக்கி உள்ளது. இந்த கூட்டணிக்கான ஆதரவு நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்கிறது. கிட்டத்தட்ட 26 கட்சிகள் இந்த கூட்டணியில் இடம்பெற்று உள்ளன.

கடந்த சில நாட்களாக வரக்கூடிய கருத்து கணிப்பு செய்திகளும் கூட இந்த கூட்டணி கட்சிகளுக்கு ஆதரவாகவே வந்து கொண்டு இருக்கிறது. 40க்கு 40 இடங்களில் வெல்ல வேண்டும் என்று டார்கெட் வைத்து திமுக தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த தேர்தல் பணிகள் திமுகவிற்கு பெரிய அளவில் பலன் கொடுக்கும் என்றும் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த லோக்சபா தேர்தலில் தமிழ்நாட்டில் திமுக 38 இடங்களில் வென்றது. புதுச்சேரியில் 1 இடத்தில் வென்றது. இதே வெற்றியை இந்த முறை தமிழ்நாட்டில் பதிவு செய்வதற்கான தீவிரமான பணிகளை திமுக முன்னெடுத்து வருகிறது,.
( இங்கே எடப்பாடி இறங்கும் முன்பே.. அங்கே கச்சிதமாக "கதையை" முடித்த ஸ்டாலின்.. விவசாயிகள் செம ஹாப்பி!)
ஸ்டாலின் பேச்சு: இந்த நிலையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின், நாடாளுமன்ற தேர்தலில் 100 சதவீத வெற்றியை நமக்குத் தர மக்கள் நினைக்கின்றனர். ஆனால், அந்த நினைப்பு மாவட்ட செயலாளர்களிடம் இல்லை. மக்களின் முடிவை நம் பக்கம் கொண்டு வரும் முயற்சியில் பல மாவட்ட செயலாளர்கள் அக்கறைக் காட்டவில்லை. இனியும் நான் பொறுக்கமாட்டேன்.
எந்த தொகுதியில் நாம் தோற்றாலும் அந்த மாவட்ட செயலாளரின் பதவியை பறித்துவிடுவேன். இதில் சீனியர், ஜூனியர் என்றெல்லாம் நான் பார்க்க மாட்டேன்'' என்றெல்லாம் கடுமையாக எச்சரிக்கை செய்திருந்தார். மாவட்ட செயலாளர்கள் பலர் மீது ஸ்டாலினுக்கு இருக்கும் அதிருப்தி அந்த ஆலோசனைக் கூட்டத்தில் வெடித்தது. 7 மா.செ. க்களின் பெயரைச் சொல்லியே விமர்சித்திருந்தார் ஸ்டாலின். இந்த நிலையில், மா.செ.க்கள் பலரும், தங்கள் மாவட்டத்தில் உள்ள எம்.பி. தொகுதிக்குள் அடங்கும் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதி வாரியாக அலசி வருகின்றனர்.
கடும் விசாரணை: திமுகவுக்கான அசைக்க முடியாத வாக்குகள் எவை ? அதிமுகவுக்கான வோட் பேங்க் என்ன? நடுநிலையாளர்களின் வாக்குகள் எந்த பக்கம் போகும்? என்றெல்லாம் ஆராயத்தொடங்கியுள்ளனர். இதைத் தவிர, பூத் கமிட்டி நிர்வாகிகளையும், தொகுதி பொறுப்பாளர்களையும் அழைத்து கள நிலவரம் குறித்து விவாதித்துள்ளனர். அவர்களின் தேவைகள் என்னவென்று தெரிந்து அதனை நிறைவேற்றி வருகின்றனர். இத்தகைய நடவடிக்கைகள், மா.செ. க்களாக இருக்கும் அமைச்சர்களையும் தொற்றிக்கொண்டிருக்கிறது.
( பிரதமர் மோடியால் தமிழ்நாட்டை மறக்கவே முடியல.. எங்க போனாலும் நம்மள பத்திதான் பேச்சு: சீண்டிய ஸ்டாலின்)
இது ஒரு புறம் இருக்க, காணொலி காட்சி மூலம் 7 மா.செ.க்களை ஸ்டாலின் எச்சரித்த நிலையில், அந்த மா.செ.க்களின் ஆதரவாளர்கள், ''என்னண்ணே, தலைவர் இப்படி எச்சரிக்கிறார்? தோத்துட்டோம்னா பதவி போய்டுமா? '' என்று கேட்க, ''நம்ம மாவட்டத்துல கட்சியை நல்லாத்தானே வெச்சிருக்கோம்? நாம் ஏன், கவலைப்படணும்? அதுவும், தலைவர் எச்சரிக்கிறது இது முதல் முறையா என்ன? அதையெல்லாம் நீங்க மண்டையில ஏத்திக்க வேண்டாம்? தேர்தல் வேலையைப் பாருங்க'' என்று சொல்லியிருக்கிறார்கள் அந்த மா.செ.க்கள். இதற்கிடையே ஸ்டாலின் எச்சரிக்கையை சீனியர்கள் சிலர் சீரியசாக எடுத்துக் கொள்ளவில்லையாம்.












Click it and Unblock the Notifications