இங்கே எடப்பாடி இறங்கும் முன்பே.. அங்கே கச்சிதமாக "கதையை" முடித்த ஸ்டாலின்.. விவசாயிகள் செம ஹாப்பி!
சென்னை: திருவாரூரில் 610 ஏக்கர் பயிர்கள் பாதிப்பு அடைந்துள்ளதாக வேளாண் துறை அறிக்கை வெளியிட்டு உள்ளது. இந்த நிலையில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் இழப்பீடு வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
ஒரு ஹெக்டேருக்கு 13,500 இழப்பீடு வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்து உள்ளார். இன்று டெல்டா மாவட்டங்களில் அதிமுக சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளது. காவிரி விவகாரத்தில் திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பாக ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளது.

அதிமுக போராட்டம் அறிவிப்பு: ஏக்கர் ஒன்றுக்கு 35,000/- ரூபாயை நிவாரண தொகையாக உடனடியாக வழங்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளது. தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களிலும், கடலூர் மாவட்டம், சிதம்பரம் வருவாய் கோட்டத்திலும் இன்று கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்த உள்ளது. அதிமுக இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தும் முன்பே.. இங்கே ஆளும் திமுக சார்பாக இழப்பீடு அறிவிக்கப்பட்டு உள்ளது.
காவிரி நடுவர் மன்ற தீர்ப்பாயத் தீர்ப்பின்படி, மேட்டூர் அணையில் தண்ணீர் குறைய ஆரம்பித்தவுடன், மே, ஜூன், ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களுக்கான நமது பங்கு நீரை சட்டப்படியும், அரசியல் அழுத்தத்தோடும் அந்தந்த மாதங்களிலேயே பெற்றிருக்க வேண்டும். கடந்த மே மாதத்தில் நடைபெற்ற, கர்நாடக காங்கிரஸ் அரசின் முதலமைச்சர் பதவியேற்பு விழாவில், விடியா திமுக அரசின் முதலமைச்சர் திரு. ஸ்டாலின் கலந்துகொண்டபோது, மே மற்றும் ஜூன் மாதங்களில் கர்நாடகா தமிழகத்திற்கு தரவேண்டிய நீரை கேட்டுப் பெற்றிருக்க வேண்டும்.
அதேபோல், இண்டியா (I.N.D.I.A.) கூட்டணிக் கூட்டம் பாட்னாவில் கூடியபோது, டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி, தன் மாநில மக்கள் நலனில் அக்கறைகொண்டு, எவ்வாறு நிபந்தனை அடிப்படையில் கூட்டணியில் அங்கம் வகிக்க சம்மதித்ததோ, அதேபோன்று, காவிரியில் காங்கிரஸ் அரசு தண்ணீரைத் திறந்துவிட்டால்தான் கூட்டணியில் அங்கம் வகிப்போம் என்ற நிபந்தனையை விதித்திருக்கலாம். என் மாநில மக்கள் நலனே முக்கியம் எனவும், "நானும் ஒரு டெல்டாகாரன்தான்" எனவும் தெரிவித்து, திரு. ஸ்டாலின், பெங்களூருவில் நடைபெற்ற இண்டியா (I.N.D.I.A.) கூட்டணிக் கூட்டத்தில் கலந்துகொண்டதைத் தவிர்த்திருக்கலாம்.
கடந்த செப்டம்பர் மாதம், திருக்குவளை அடுத்த திருவாய்மூர் பகுதியில், சுமார் 15 ஏக்கரில் குறுவை சாகுபடி செய்திருந்த முன்னோடி விவசாயி எம்.கே. ராஜ்குமார் என்பவர், போதிய தண்ணீர் இல்லாததால் நீரின்றி காய்ந்து கருகிய குறுவை நெற்பயிர்களை 'தான் பெற்ற பிள்ளையை தானே அழிப்பது போல்', விவசாயி ராஜ்குமார் அவர்களே டிராக்டர் மூலம் அழிக்கும்போது ஏற்பட்ட மனவேதனையில், தன்னுடைய நிலத்திலேயே மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
குறுவை பயிர்கள் போதிய தண்ணீரின்றி கருகிய பிறகு, 'கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம்' என்பதுபோல், நாங்கள் பலமுறை எச்சரித்த பிறகும், காலம் கடந்து பெயரளவிற்கு மத்திய அரசுக்கு கடிதம் எழுதுவது; மத்திய அமைச்சரை நேரில் பார்ப்பது; காவிரி மேலாண்மை ஆணையத்திடம் முறையீடு செய்வது மற்றும் உச்சநீதிமன்றத்திற்குச் செல்வது என்று அனைத்து நடவடிக்கைகளையும் காலதாமதமாக மேற்கொண்டது இந்த விடியா திமுக அரசு, இதை கண்டித்து இன்று ஆர்ப்பாட்டம் செய்யப்படும் என்று அதிமுக அறிவித்துள்ளது.
போராட்டத்திற்கு சிக்கல்: இந்த போராட்டத்தில் அதிமுக களமிறங்கும் முன்பே.. திமுக தற்போது இழப்பீடு அறிவித்துள்ளது. திருவாரூரில் 610 ஏக்கர் பயிர்கள் பாதிப்பு அடைந்துள்ளதாக வேளாண் துறை அறிக்கை வெளியிட்டு உள்ளது. இந்த நிலையில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் இழப்பீடு வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
ஒரு ஹெக்டேருக்கு 13,500 இழப்பீடு வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்து உள்ளார். இன்று டெல்டா மாவட்டங்களில் அதிமுக சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளது. காவிரி விவகாரத்தில் திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பாக ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளது.












Click it and Unblock the Notifications