பிரதமர் மோடி எவ்ளோ சிம்பிள், ஹம்பிள்.. இந்த ஒரு வீடியோ போதுமே!.. செம வைரல்
டெல்லி: வாரணாசியில் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி நாற்காலியில் அமருவதை விடுத்து தொழிலாளர்களுடன் அமர்ந்த வீடியோ வைரலாகி வருகிறது.
Recommended Video
காசி விஸ்வநாதர் கோயிலில் பல கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட்ட உள்கட்டமைப்புகளை சில தினங்களுக்கு முன்னர் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். இந்த நிகழ்வின் போது தனக்காக போடப்பட்ட நாற்காலியில் அமராமல் கட்டமைப்பு பணிகளில் ஈடுபடும் தொழிலாளர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி அமர்ந்தார்.

வாரணாசி தொகுதி
பிரதமர் நரேந்திர மோடி தனது சொந்த எம்பி தொகுதியான உத்தரப்பிரதேசத்தில் இருக்கும் வாரணாசிக்கு கடந்த 13 ஆம் தேதி 2 நாட்கள் பயணமாக சென்றிருந்தார். அப்போது ரூ 339 கோடி மதிப்பில் காசி விஸ்வநாதர் கோயில் வளாகத்தில் சில திட்டங்களை மக்களுக்கு அவர் அர்ப்பணித்தார்.

பிரதமர் நரேந்திர மோடி
காசி விஸ்வநாதர் ஆலய வளாகத்தை திறந்து வைத்த பிரதமர் நரேந்திர மோடி அங்கு தீபாராதனை செய்து வழிபாட்டிலும் பிரதமர் ஈடுபட்டார். இதையடுத்து மாலை கங்கை நதியில் புனித நீராடி அங்கு நடைபெற்ற ஆரத்தி நிகழ்ச்சியிலும் அவர் கலந்து கொண்டார். ஆலய கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஒன்றாக அமர்ந்து உணவு அருந்தினார்.

பிரதமர் மோடி
ஆலய கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களுடன் உரையாடுவதற்கு பிரதமர் நரேந்திர மோடி அமர்வதற்காக நாற்காலி வசதி போடப்பட்டது. நிகழ்வு நடைபெறும் இடத்திற்கு வந்த போது பாதுகாப்பு பணியிலிருந்த ஒருவர் நாற்காலியை எடுத்து பிரதமருக்கு போட்ட போது அந்த நாற்காலியில் அமர மறுத்தார்.

நெருக்கம்
அதே பாதுகாப்பு படை அதிகாரியிடம் நாற்காலியை திருப்பிக் கொடுத்துவிட்டு கட்டட பணியில் ஈடுபட்ட தொழிலாளர்களுடன் அவர்களுள் ஒருவராக தரையில் அமர்ந்தார். அவருடன் தொழிலாளர்களையும் நெருக்கமாக அமருமாறு பணித்தார். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் இந்த ஒரு செயல், லட்சக்கணக்கான வார்த்தைகளுக்கு சமம் என தெரிவித்துள்ளார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications