ஓஹோ.. இதுதான் காரணமா.. ஸ்டாலின் நேற்று ஆவேச பேட்டி.. மோடி இன்று ஆப்சென்ட்.. ஆமா, ராகுல் எங்கே?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: டெல்லி திமுக தலைமை அலுவலக திறப்பு விழாவுக்கு வருகை தருமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று அழைப்பிதழ் வழங்கியும் அவர் வரவில்லை. இதற்கான காரணம் வெளியாகியுள்ளது.

திமுகவின் தலைமை அலுவலகமான அண்ணா கருணாநிதி அறிவாலயம் டெல்லியில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ளது. சுமார் 3 தளங்களை கொண்ட அந்த கட்டடத்தின் திறப்பு விழா இன்று நடைபெற்றது.

இதில் பங்கேற்க முதல்வர் ஸ்டாலின் டெல்லிக்கு வருகை தந்துள்ளார். அங்கு பிரதமர் நரேந்திர மோடி , உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட தலைவர்களையும் அவர் சந்தித்தார்.

பிரதமர் நரேந்திர மோடி

பிரதமர் நரேந்திர மோடி

அப்போது பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோருக்கு திமுக அலுவலக திறப்பு விழாவுக்கான அழைப்பிதழை முதல்வர் ஸ்டாலின் வழங்கியிருந்தார். இந்த நிலையில் இன்றைய தினம் திமுக தலைமை அலுவலகம் ஜரூராக கட்டப்பட்டு திறப்பு விழா நடந்து முடிந்தது. இந்த விழாவில் காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி கலந்து கொண்டார்.

இடதுசாரிகள்

இடதுசாரிகள்

இந்த விழாவில் இடதுசாரி தலைவர்களான சீதாராம் யெச்சூரி, டி ராஜா, காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவர்களான ப சிதம்பரம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன், எம்பி பரூக் அப்துல்லா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். திமுக கூட்டணி கட்சியை சேர்ந்தவர்கள் பெரும்பாலானார் இந்த
விழாவுக்கு வருகை தந்தனர்.

பாஜக தலைவர்களுக்கு அழைப்பு

பாஜக தலைவர்களுக்கு அழைப்பு

ஆனால் பாஜக தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டும் அவர்கள் ஒருவர் கூட இந்த விழாவில் கலந்து கொள்ளவில்லை. அது போல் நேரில் பத்திரிகை வைத்தும் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் ஒருவர் கூட வரவில்லை.

பிரதமர் மோடி வரவில்லை

பிரதமர் மோடி வரவில்லை


இதற்கான காரணம் தற்போது தெரியவந்துள்ளது. நேற்று இரவு பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு முதல்வர் ஸ்டாலின் ஒரு பேட்டியை அளித்தார். அப்போது திமுக தேசிய அளவில் முக்கியமான கட்சி, நாடாளுமன்றத்தில் 3ஆவது பெரிய கட்சி. நாட்டின் பிரதமரையும் குடியரசுத் தலைவரையும் முடிவு செய்யும் கட்சி.

பாஜகவுக்கு எதிரான பேட்டி

பாஜகவுக்கு எதிரான பேட்டி

பாஜகவுக்கு எதிரான மனநிலையில் உள்ள காங்கிரஸ், இடதுசாரிகள், மாநிலக் கட்சிகள் அனைத்தும் இணைந்து பாஜகவை எதிர்த்து தேசிய அளவில் போராட வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் அழைப்பு விடுத்திருந்தார். இவ்வாறு இவர் பேட்டி கொடுத்ததால் பிரதமர் மோடி வரவில்லையா என்பது தெரியவில்லை.

ராகுல் வரவில்லை

ராகுல் வரவில்லை

ஆனால் பிரதமர் மோடி விழாவிற்கு வரமாட்டார் என தெரிந்தே முதல்வர் ஸ்டாலின் பாஜகவுக்கு எதிராக பேசியுள்ளது தெரிகிறது. அது போல் ஆச்சரியத்திலும் ஆச்சரியம் - ராகுல் காந்தி இந்த நிகழ்ச்சிக்கு வராதது ஏன் என தெரியவில்லை. ராகுல் காந்திதான் A Dravidian journey என்ற ஜெயரஞ்சன் எழுதிய புத்தகத்தை பெறுவார் என்று இன்று மதியம் வரை விவரம் அறிந்த வட்டாரங்கள் கூறின.

ராகுல் ஏன் வரவில்லை

ராகுல் ஏன் வரவில்லை

ஆனால் ராகுல் வரவில்லை. அவர் வராததற்கான காரணம் தெரியவில்லை. சென்னையில் நடந்த உங்களில் ஒருவன் புத்தக வெளியீட்டு விழாவுக்கு வருகை தந்த ராகுல் காந்தி டெல்லியில் இருந்தும் டெல்லியிலேயே நடந்த கூட்டணி கட்சியின் விழாவுக்கு ராகுல் வருகை தராதது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+