சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு இருந்தாலும்.. சண்டிகர் மேயர் பதவியை ஆம் ஆத்மியால் காப்பாற்ற முடியாது! ஏன்
டெல்லி: சண்டிகர் மேயர் தேர்தல் விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட ஆம் ஆத்மி- காங்கிரஸ் கூட்டணிக்குச் சாதகமாக வாக்களித்தாலும் கூட மேயர் பதவியைக் காப்பது கஷ்டம்தான் என்று கூறப்படுகிறது.
கடந்த மாதம் சண்டிகரில் மேயர் தேர்தல் நடந்த நிலையில், அதில் ஆம் ஆத்மி- காங்கிரஸ் இணைந்து வேட்பாளரை நிறுத்தியது. எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி சார்பில் குல்தீப் குமார் களமிறக்கப்பட்ட நிலையில், அவருக்கு எதிராக பாஜக மனோஜ் போட்டியிட்டார்.

இதில் தேவையான ஆதரவு இருப்பதால் இந்தியா கூட்டணி வெல்லும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தேர்தல் முடிவுகள் அனைவருக்கும் ஷாக் தருவதாக இருந்தது. ஏனென்றால் பாஜக வேட்பாளர் மனோஜ் சோங்கர் வென்றதாக அறிவிக்கப்பட்டது.
சண்டிகர் தேர்தல்: ஏனென்றால் ஆம் ஆத்மி கட்சி கவுன்சிலர்கள் 8 பேரின் வாக்குகள் செல்லாது என அறிவிக்கப்பட்டது. இதனால் பாஜக வேட்பாளர் மனோஜ் சோங்கர் 4 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றதாகத் தேர்தல் நடத்தும் அதிகாரி அனில் மசிஹ் அறிவித்தார். இருப்பினும், தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட கொஞ்ச நேரத்திலேயே தேர்தல் அதிகாரி அனில் மசிஹ் வாக்குச்சீட்டில் ஏதோ திருத்தம் செய்வது போன்ற வீடியோ வெளியாகி பகீர் கிளப்பியது.
இதையடுத்து தேர்தலில் முறைகேடு நடந்ததாக ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் கட்சிகள் கூறிய நிலையில், இது தொடர்பாக குல்தீப் குமார் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட் முக்கியமான தீர்ப்பை வழங்கியது. அதாவது தேர்தல் அதிகாரி அனில் மசிஹ் அறிவித்த தேர்தல் முடிவை ரத்து செய்த சுப்ரீம் கோர்ட், ஆம் ஆத்மி மேயர் வேட்பாளர் குல்தீப் குமார் வென்றதாக உத்தரவிட்டது.
சிக்கல்: ஆனால் சண்டிகர் மேயர் தேர்தலில் ஆம் ஆத்மி வேட்பாளர் குல்தீப் குமார் வெற்றி பெற்றதாக சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்துள்ள போதிலும், அங்கே இந்தியா கூட்டணிக்கான சிக்கல் இன்னும் முழுமையாகத் தீரவில்லை. அடுத்தகட்டமாகப் பெரும்பான்மையை நிரூபிப்பதில் இந்தியக் கூட்டணிக்குச் சிக்கல் இருக்கும் என்றே கூறப்படுகிறது. ஏனென்றால் இந்த விவகாரம் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு முன்னதாக தான் சண்டிகரில் உள்ள 3 ஆம் ஆத்மி கவுன்சிலர்கள் பாஜகவில் ஐக்கியமானார்கள்.
கடந்த ஜன. 30இல் நடந்த சண்டிகர் மேயர் தேர்தலில் பாஜகவுக்குத் தனித்தே அவர்களின் 14 கவுன்சிலர்கள் வாக்குகள் கிடைத்தன. இது தவிர ஷிரோமணி அகாலி தளத்தின் இரண்டு கனவுன்சிலர்கள் வாக்கு, ஒரு பாஜக எம்.பி.யான கிரோன் கெர் என்பவரின் வாக்கும் பாஜகவுக்கு விழுந்தது.. இந்தச் சூழலில் பூனம் தேவி, நேஹா முசாவத் மற்றும் குர்சரண் கலா ஆகிய மூன்று ஆம் ஆத்மி கவுன்சிலர்கள் பாஜகவில் இணைந்ததன் மூலம், 36 உறுப்பினர்களைக் கொண்ட சண்டிகர் கவுன்சிலில் அவர்களின் ஆதரவு 19ஆக உள்ளது.
நம்பர் கேம்: மறுபுறம் மேயர் தேர்தலில் ஆம் ஆத்மி-காங்கிரஸ் கூட்டணி 20 வாக்குகள் கிடைத்தன. அதில் தான் 8 வாக்குகள் செல்லாது எனத் தேர்தல் அதிகாரி அறிவித்தார். இருப்பினும், இப்போது அந்த எட்டு வாக்குகள் செல்லுபடியாகும் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ள நிலையில், இந்தியக் கூட்டணியின் எண்ணிக்கை 17ஆக உள்ளது. ஏனென்றால் 3 கவுன்சிலர்கள் பாஜகவில் ஐக்கியமாகிவிட்டனர்.
தற்போதைய சூழலில் சண்டிகர் கவுன்சிலில் ஆம் ஆத்மி-காங்கிரஸ் கூட்டணியின் பலம் 17ஆகவும் பாஜகவின் பலம் 19ஆகவும் இருக்கிறது. இந்தியா கூட்டணிக்கு இப்போது இரண்டு வாக்குகள் குறைவாக இருப்பதால், பெரும்பான்மையை நிரூபிக்குமாறு பாஜக கோரலாம். அப்படிச் செய்தால் மேயர் பதவியைக் காப்பாற்றுவது கஷ்டம் என்றே சொல்லப்படுகிறது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications