Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

காணாமல் போன தாஜ் மஹால்! சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்! அடடே என்ன இப்படி ஆகிடுச்சு! என்ன மேட்டர் தெரியுமா

Subscribe to Oneindia Tamil

டெல்லி: காதல் சின்னமாக அறியப்படும் தாஜ்மஹால் திடீரென மாயமாகி இருக்கும் சூழலில், இதனால் சுற்றுலாப் பயணிகள் கடும் ஏமாற்றமடைந்துள்ளனர்.

இந்தியாவில் இருக்கும் முக்கியமான சுற்றுலா தளங்களில் ஒன்று தாஜ் மஹால். இது தனது காதலி மும்தாஜின் நினைவாக ஷாஜஹான் கட்டியது. முழுக்க முழுக்க வெள்ளை மார்பிள்களால் இது கட்டப்பட்டுள்ளது.

 Why Taj Mahal got disappeared as air pollution reaches high in Agra and surrounding areas

காதலர்களின் முக்கியமான சின்னமாக இது கருதப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் தாஜ் மஹாலை நோக்கிப் படையெடுக்கும் பல லட்சம் சுற்றுலாப் பயணிகளே இது எந்தளவுக்குப் புகழ் பெற்றதாக இருக்கிறது என்பதற்குச் சாட்சி.

தாஜ் மஹால் மாயம்: இப்படி காதல் சின்னமாக இருக்கும் தாஜ் மஹால் திடீரென மாயமானது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? கிட்டத்தட்ட அப்படியொரு சம்பவம் தான் இப்போது நடந்துள்ளது. டெல்லி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வரலாறு காணாத வகையில் காற்று மாசு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கே வசிக்கும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, டெல்லியில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் பல கட்டுப்பாடுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதற்கிடையே காற்று மாசு அங்கே உச்சமடைந்துள்ள நிலையில், இதனால் பல இடங்களில் பனிப் படலம் போலக் காற்று மாசு சூழ்ந்துள்ளது. இதனால் சில மீட்டர் தொலைவில் இருக்கும் பொருட்கள் கூட சுத்தமாகத் தெரியாத சூழலே உருவாகியுள்ளது. தாஜ் மஹால் இருக்கும் ஆக்ராவிலும் மிகக் கடுமையான காற்று மாசு ஏற்பட்டுள்ள நிலையில், தாஜ் மஹால் இந்த காற்று மாசால் மறைந்து போய் உள்ளது.

சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்: பொதுவாக வளாக நுழைவாயிலில் இருந்து பார்த்தாலே தாஜ் மஹால் தெளிவாகத் தெரியும். ஆனால், இப்போது காற்று மாசு உச்சத்தில் இருக்கும் நிலையில், அருகே சென்று பார்த்தாலும் கூட தாஜ் மஹால் தெரிவதில்லை. தாஜ் மஹால் செல்லும் சுற்றுலாப் பயணிகள் அனைவருமே அதன் அருகே நின்று போட்டோ எடுத்துக் கொள்ள வேண்டும் என்றே விரும்புவார்கள். ஆனால், காற்று மாசால் ஏற்பட்ட இந்த புகை மூட்டத்தால் போட்டோவிலும் கூட தாஜ் மஹால் தெரிவதில்லை. இதனால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

அங்கே காற்று மாசு உச்சத்தில் இருந்தாலும் கூட இது மட்டுமே தாஜ் மஹால் மறைந்து போக காரணம் இல்லை என்று மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. காற்று மாசு முக்கிய காரணம் என்றாலும் கூட திறந்தவெளியில் உள்ள மூடுபனி மற்றும் ஈரப்பதம் ஆகியவையும் தான் இப்படி தாஜ் மஹால் மாயமாகக் காரணம் என்று மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

என்ன காரணம்: இருப்பினும், இதைத் தனியார் வல்லுநர்கள் மறுக்கிறார்கள், அப்படிப் பார்த்தால் கொரோனா சமயத்தில் ஊரடங்கு இருந்த போது தாஜ் மஹால் நன்றாகத் தானே தெரிந்தது என்பது அவர்கள் வாதம். இப்போது தாஜ் மஹால் அமைந்துள்ள ஷாஜகான் கார்டன் அருகே காற்று மாசு 294ஆக மோசம் என்ற நிலையில் இருக்கிறது. மதிய நேரங்களில் காற்று மாசு சுற்று குறைந்தாலும் பெரும்பாலும் இதே நிலை தான் இருக்கிறது. மேலும், தாஜ் மஹாலின் வெள்ளை மார்பிளின் நிறமும் இதனால் மாற தொடங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.

இது குறித்து வல்லுநர்கள் கூறுகையில், "வாகனங்களில் இருந்து வெளி வரும் மாசுதான் இந்த நிலைக்குக் காரணம்.. 1996இல் உச்ச நீதிமன்ற உத்தரவின்படி இந்தப் பகுதியில் தொழிற்சாலைகள் மூடப்பட்டன. ஆனால் மாசு அளவு குறையவே இல்லை. வாகன எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதே இந்தப் பகுதியில் காற்று மாசு உச்சத்தில் இருக்கக் காரணம்.

மேலும், எப்போதும் இந்த அக்டோபர்-நவம்பர் மாதங்களில், காற்றின் வேகம் குறையும். இதனால் தூசி துகள்கள் மாசு பொருட்கள் ஒரே இடத்தில் அதிக நேரம் இருக்கும். ஒவ்வொரு நாளும் கூடுதலாக மாசு பொருட்கள் சேரும் போது அது மோசமான பாதிப்பை ஏற்படுத்துகிறது" என்று அவர் தெரிவித்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+