தொகுதி மறுவரையறை சட்டம் கொண்டு வர முயன்றது ஏன்... கேள்வி பதில் வடிவில் மத்திய அரசு விளக்கம்
டெல்லி: தொகுதி மறுவரையறை மசோதா, மகளிர் இடஒதுக்கீடு விவாகரம் தொடர்பாக எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு மத்திய அரசு கேள்வி பதில் வடிவில் விளக்கம் அளித்துள்ளது. அந்த கேள்வி பதிலில் ஒரு இடத்தில், அனைத்து மாநிலங்களுக்கும் ஒரே மாதிரியாக 50 சதவீத தொகுதிகள் அதிகரிக்கும். தென்மாநிலங்களுக்குப் பிரதிநிதித்துவம் குறையாது. உதாரணமாக, தமிழ்நாட்டின் தொகுதிகள் எண்ணிக்கை 59 ஆக அதிகரிக்கும் என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
தொகுதி மறுவரையறை மசோதா, மகளிர் இடஒதுக்கீடு இரண்டையும் மத்திய அரசு நிறைவேற்ற விரும்பியது.இதற்காக நாடாளுமன்றத்தில் அண்மையில் சிறப்பு கூட்டத்தொடரை கூட்டியது. ஆனால் இந்த சட்டம் நிறைவேற்ற மூன்றில் இரண்டு பங்கு மெஜாரிட்டி வேண்டும். இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஒத்துழைத்தால் தான் சாத்தியம். இதன் காரணமாக இந்த சட்டம் நிறைவேறவில்லை. தோல்வி அடைந்தது. தொகுதி மறுவரைறை என்ற பெயரில் தென்மாநிலங்கள் மற்றும் சிறிய மாநிலங்களின் தொகுதிகளின் எண்ணிக்கை குறையும் என்று கூறி எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்த காரணத்தால் தான் மசோதா தோல்வி அடைந்தது. இந்நிலையில் தொகுதி மறுவரைறை சட்டம் கொண்டுவர முயன்றது ஏன் என கேள்வி பதில் வடிவில் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. அதனை அப்படியே பார்ப்போம்.

கேள்வி: இப்போது 3 மசோதாக்களைத் தாக்கல் செய்தது ஏன்?
பதில்: 2026-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்புக்குப் பிறகு நடக்கும் தொகுதி மறுவரையறை அடிப்படையில்தான் மகளிர் இடஒதுக்கீட்டை அமல்படுத்த முடியும். அதற்கு மத்திய அரசு காத்திருந்தால், 2029-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு கிடைக்காது. எனவே, அந்த நிபந்தனையை நீக்குவதற்காக மசோதா கொண்டுவருவது அவசியமாகிவிட்டது.
தொகுதிகள் உயர்த்தப்படுவது ஏன்
கேள்வி: இந்த மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டால், என்னென்ன நன்மைகள் கிடைக்கும்?
பதில்: அவை நிறைவேற்றப்பட்டால், 2029-ம் ஆண்டிலேயே பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு கிடைத்திருக்கும்.
கேள்வி: ஏன் தொகுதி மறுவரையறையுடன் மகளிர் இடஒதுக்கீடு இணைக்கப்பட்டது? தொகுதி எண்ணிக்கை ஏன் உயர்த்த திட்டமிடப்பட்டது?
பதில்: தொகுதி மறுவரையறை என்பது தொகுதிகளின் எல்லையை இறுதி செய்வது. மகளிர் இடஒதுக்கீட்டை அமல்படுத்த அது அவசியம். 1976-ம் ஆண்டு, மக்களவை தொகுதிகள் எண்ணிக்கை 550 ஆக நிர்ணயிக்கப்பட்டது. 1971-ம் ஆண்டு, மக்கள்தொகை 54 கோடியாக இருந்தது. இன்று 140 கோடியாக உள்ளது.
எனவே, தொகுதி எண்ணிக்கையை 850 ஆக உயர்த்துவது அவசியம். அப்போதுதான் நியாயமான பிரதிநிதித்துவம் கிடைக்கும்.
இப்போது நடக்கும் தேர்தல் பாதிக்கப்படாது
கேள்வி: தொகுதி மறுவரையறை ஆணைய சட்டத்தை மாற்றியமைக்க முயற்சி நடந்ததா? அது தற்போதைய 5 மாநில சட்டசபை தேர்தலை பாதிக்குமா?
பதில்: எந்த மாற்றமும் திட்டமிடப்படவில்லை. தற்போதைய சட்டசபை தேர்தல்கள் பாதிக்கப்படாது. 2029-ம் ஆண்டுவரை தற்போதைய முறையிலேயே தேர்தல் நடக்கும்.
கேள்வி: மக்களவை தொகுதிகளை 850 ஆக உயர்த்துவது ஏன்?
பதில்: விகிதாசார விரிவாக்க அணுகுமுறை அடிப்படையில் திட்டமிடப்பட்டது. அனைத்து மாநிலங்களுக்கும் ஒரே மாதிரியாக 50 சதவீத தொகுதி உயர்த்தப்படும். தற்போதைய 543 தொகுதிகளுக்கு அக்கொள்கையைப் பயன்படுத்தினால், தொகுதி எண்ணிக்கை 815 ஆக உயரும். எனவே, தற்போதைய உச்சவரம்பு 550-ல் இருந்து 850 ஆக அதிகரிக்கப்பட்டது.
தமிழ்நாடு தொகுதிகள் உயரும்
கேள்வி: தென்மாநிலங்களோ, சிறிய மாநிலங்களோ பாதிக்கப்படுமா?
பதில்: அனைத்து மாநிலங்களுக்கும் ஒரே மாதிரியாக 50 சதவீத தொகுதிகள் அதிகரிக்கும். தென்மாநிலங்களுக்குப் பிரதிநிதித்துவம் குறையாது. உதாரணமாக, தமிழ்நாட்டின் தொகுதிகள் எண்ணிக்கை 59 ஆக அதிகரிக்கும். தென்மாநிலங்களின் பிரதிநிதித்துவம் 23.76 சதவீதத்தில் இருந்து 23.87 சதவீதமாக உயரும்.
கேள்வி: மக்கள்தொகையை கட்டுப்படுத்திய மாநிலங்களுக்குப் பாதகமாக அமையுமா?
பதில்: இல்லை. அனைத்து மாநிலங்களிலும் ஒரே மாதிரியாகத் தொகுதிகள் அதிகரிப்பதால், ஒன்று மாற்றமின்றி இருக்கும் அல்லது உயரும்.
சாதிவாரி கணக்கெடுப்பு
கேள்வி: பட்டியல், பழங்குடியினத்தினரின் பிரதிநிதித்துவம் பாதிக்கப்படுமா?
பதில்: இல்லை. அவர்களின் பிரதிநிதித்துவம் அதிகரிக்கும்.
கேள்வி: இந்த மசோதாவால் சாதிவாரி கணக்கெடுப்பு தாமதம் ஆகுமா?
பதில்: இல்லை. ஏற்கனவே சாதிவாரி கணக்கெடுப்புக்காக காலமுறையிலான திட்டம் தொடங்கப்பட்டுவிட்டது.
கேள்வி: முஸ்லிம் பெண்களுக்கு ஏன் இடஒதுக்கீடு இல்லை?
பதில்: அரசியலமைப்பு சட்டம், மத அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்கவில்லை. சமூக, பொருளாதார அடிப்படையில்தான் இடஒதுக்கீடு கொள்கை வகுக்கப்பட்டுள்ளது" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications