மத்திய அரசின் செயல் அபத்தம்.. இது சிறப்பு கூட்டத்தொடரா? இல்லை வழக்கமானதா? காங்கிரஸ் பாய்ச்சல்
டெல்லி: சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடரில் இவ்வளவு மசோதாக்களை நிறைவேற்ற அரசு திட்டமிட்டுள்ளது அபத்தமானது என்று காங்கிரஸ் சாடியுள்ளது.
ஜி20 நாடுகளின் மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடித்த கையோடு தற்போது நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடரை மத்திய அரசு நடத்த இருக்கிறது. இன்று தொடங்கி வரும் 22ம் தேதி வரை நடைபெறும் இந்த கூட்டத் தொடரின் முதல்நாள் நிகழ்வு பழைய நாடாளுமன்ற கட்டிடத்திலும், இரண்டாம் நாள் முதல் கூட்டத்தொடரின் கடைசி நாள் நிகழ்வு வரை புதிய நாடாளுமன்ற கட்டிடத்திலும் நடைபெறுகிறது.

முன்னதாக இந்த கூட்டத் தொடரின் நிகழ்ச்சி நிரல் குறித்த அறிவிப்பு வெளியிடப்படாமல் இருந்த நிலையில் எதிர்க்கட்சிகள் விமர்சித்திருந்தன. இதனிடையே, அரசியல் நிர்ணய சபை தொடங்கப்பட்டது முதல் நாடாளுமன்றத்தின் 75 ஆண்டுக்கால பயணம் வரை இந்த கூட்டத்தொடரில் விவாதிக்கப்படும் என்றும், வழக்கறிஞர்கள் திருத்த மசோதா, அஞ்சல் அலுவல் மசோதா உள்ளிட்ட மசோதாக்கள் அறிமுகப்படுத்தப்படும் என்றும் மத்திய அரசு கூறியது.
அதேபோல ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டமும் இந்த கூட்டத் தொடரில் கொண்டு வரப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பல மறைமுக திட்டங்களை வைத்து இருப்பதாக மத்திய அரசு மீது எதிர்க்கட்சிகள் சாடி வருகிறது. இத்தகைய பரபரப்புக்கு மத்தியில் நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் இன்று கூட உள்ளது. இதனிடையே, சிறப்புக்கூட்டத்தொடரில் இவ்வளவு மசோதாக்களை நிறைவேற்ற அரசு திட்டமிட்டு இருப்பது அபத்தமானது என்று காங்கிரஸ் சாடியுள்ளது.
நாடாளுமன்ற சிறப்புக்கூட்டத்தொடர் குறித்து காங்கிரஸ் மக்களவை குழு தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி செய்தியாளர்களிடம் கூறியதாவது:- சிறப்பு நடாளுமன்ற கூட்டத்தொடரில் இவ்வளவு மசோதாக்களை நிறைவேற்ற அரசு திட்டமிட்டுள்ளது அபத்தமானது. இது குறித்து மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும். சிறப்பு அஜெண்டா கொண்டு வரப்பட்டு அது குறித்து விவாதிக்கவே வழக்கமாக சிறப்பு கூட்டத்தொடர் கூட்டப்படும்.
இது சிறப்பு கூட்டத்தொடரா அல்லது வழக்கமான கூட்டத்தொடரா என்பது பற்றி அரசிடம் தெளிவு இல்லை அரசின் உண்மையான நோக்கம் எங்களுக்கு கவலை அளிக்கிறது. நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பேசுவதில் எங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை. நேற்று நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் எங்கள் கட்சி முன் வைத்த 9 விவகாரங்களையும் நான் எழுப்பியிருக்கிறேன்.
-
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி!












Click it and Unblock the Notifications