வாஜ்பாய் தலைமையிலான பாஜக கூட்டணி அரசை 'எக்ஸ்போஸ்' செய்தது IC814 வெப்சீரிஸ்? எதிர்ப்பின் பின்னணி!- 2
(முதல் பகுதி: வாஜ்பாய் தலைமையிலான பாஜக கூட்டணி அரசை 'எக்ஸ்போஸ்' செய்தது IC814 வெப்சீரிஸ்? எதிர்ப்பின் பின்னனி!- 1)
நேபாளத்தின் தலைநகர் காத்மாண்டுவில் 'ரா' அதிகாரியாக பணியாற்றும் நபர், இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் IC 814 புறப்படுவதற்கு முன்னதாக டெல்லிக்கு 'சந்தேக நபர்கள்' அதில் பயணம் செய்கிறார்கள் என தகவல் அனுப்பி இருக்கிறார். அத்துடன் அந்த விமானம் புறப்படுவதைத் தடுக்கவும் முயற்சித்திருக்கிறார். ஆனால் அனைத்தும் தோல்வியில் முடிகிறது
இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் IC 814 கடத்தப்பட்ட விவகாரமே ரா, ஐபி என டெல்லி அதிகாரிகளுக்கு 'பத்திரிகையாளர்' ஒருவர் சொல்லித் தெரிந்து கொள்ளும் நிலைமை இருந்திருக்கிறது. அப்போதுதான் நேபாளத்தில் இருந்து ரா அதிகாரி முன்னரே அனுப்பிய உளவுத் தகவல் கேட்பாரற்று கிடந்ததையும் டெல்லி ரா, ஐபி உயர் அதிகாரிகளே ஒப்புக் கொள்கிற காட்சியும் இடம் பெற்றிருக்கிறது.

இப்படி இந்திய குடிமக்கள் பயணம் செய்த இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம், பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட போது என்ன முடிவு எடுப்பது என தெரியாமல் அன்றைய பிரதமர் வாஜ்பாயும் அன்றைய உள்துறை அமைச்சர் அத்வானியும் காலம் கடத்திக் கொண்டே இருந்தனர் என்கிறது வெப் சீரிஸ். அத்துடன் இல்லாமல் 'கூட்டணி' கட்சிகள் தயவில் ஆட்சி நடப்பதால் என்ன செய்வது என விழிபிதுங்கி கையாலாகாத நிலையில் அன்றைய அரசு இருந்தது என்பதையும் வசனங்களாலும் காட்சிகளாலும் விவரிக்கிறது இந்த வெப்சீரிஸ்.
ஒருவழியாக பயங்கரவாதிகள் கடத்திய விமானம் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் எரிபொருள் நிரப்ப வந்திறங்குகிறது. அப்போது டெல்லி ரா, ஐபி அதிகாரிகள் கமாண்டோ படை மூலம் தாக்குதல் நடத்தவும் தயாராகின்றனர். பஞ்சாப் போலீஸ் கமாண்டோ படையும் தயார் நிலையில் இருக்கிறது. ஆனால் இதில் கொடுமை என்னவெனில், அமிர்தசரஸ் விமான நிலையத்தில் பயணிகள் விமானத்துக்குள் நுழைந்து கமாண்டோ படை தாக்குதல் நடத்தி பயங்கரவாதிகளை அழிக்கும் நடவடிக்கை எந்த மேலிடமும் ஒப்புதலே தராமல் போனதுதான்.. இத்தனைக்கும் இந்த நடவடிக்கையை மேற்கொள்வதற்கான கால அவகாசம் கிடைத்தும் கூட அன்றைய வாஜ்பாய் தலைமையிலான அரசு எந்த முடிவையும் எடுக்காமல் கையை பிசைந்து கொண்டு வேடிக்கை பார்த்தது என்பதை தோலுரித்துக் காட்டிவிட்டது இந்த வெப்சீரிஸ்.
அமிர்தசரஸில் தேவையற்ற தாமதம் காட்டப்படுவதை பயங்கரவாதிகள் உணர்ந்து கொண்ட நிலையில்தான் அங்கிருந்து லாகூருக்கு புறப்பட்டு எரிபொருள் நிரப்பிக் கொண்டு துபாய் சென்று அங்கிருந்து ஆப்கானிஸ்தானின் கந்தஹார் சென்றது நடந்த சம்பவம். அதை அப்படியே பகிரங்கமாக பதிவு செய்திருக்கிறது இந்த வெப்சீரிஸ். (அடுத்த பகுதியில் நிறைவடையும்)
-
நீங்க கிளம்புங்க அண்ணாச்சி.. நயினாருக்கு டெல்லி தந்த ஷாக்! நாற்காலிக்கு சண்டை போடும் தாமரை சொந்தங்கள் -
திராவிட நடுக்கம்! அண்ணாமலையின் வலையில் விழும் திமுக, அதிமுக புள்ளிகள்.. களமிறங்கும் மாஜி IAS, IPS! -
அண்ணாமலையின் ஸ்கெட்ச்.. பாஜகவுக்கு இல்லை! அதிமுகவுக்குதான்! எடப்பாடி பழனிசாமி ஷாக்! -
தமிழக பாஜகவை செதில் செதிலாக உடைத்த அண்ணாமலை ஆர்மி.. 2 நாட்களில் தரமான சம்பவம்.. பெரும் நிலநடுக்கம்! -
பாஜகவில் இருந்து விலகிய கரு நாகராஜன்.. அண்ணாமலை தொடங்கிய இயக்கத்தில் இணைந்தார்! -
Annamalai: பாஜகவில் இருந்து விலகி தனிக்கட்சி ஆரம்பித்தவர்கள்.. அரசியலில் ஜொலித்தார்களா? சறுக்கினரா? -
சோனம் வாங்சுக் மத்திய கல்வி அமைச்சராக பொறுப்பேற்க வேண்டும்! கரப்பான் பூச்சி ஜனதா கட்சி வலியுறுத்தல்! -
10 மணி நேரத்தில் 10 லட்சத்தை தாண்டியது.. குவிந்த ஆதரவு.. உற்சாகத்துடன் அண்ணாமலையே போட்ட பதிவு -
பாஜக ஓவர்.. ஆட்டத்தை ஆரம்பித்த அண்ணாமலை! 20 மணி நேரத்தில் இத்தனை உறுப்பினர்களா! அதிரும் அரசியல் களம் -
பாஜகவில் இருந்து விலகிய பெண் பிரபலம்! கை - தலையில் கட்டு போட்டு.. சிரிச்சே ஃபேமஸானாரே! அவரே தான்! -
"நான் முதலில் தமிழன்.." பாஜகவில் இருந்து விலகிய முதல் நாளே அண்ணாமலை சொன்ன வார்த்தை! நோட் பண்ணுங்க -
சென்னை திரும்பிய அண்ணாமலை.. விமான நிலையத்தில் திரண்டு வந்து ஆதரவாளர்கள் கொடுத்த ‘மாஸ்’ வரவேற்பு!












Click it and Unblock the Notifications