Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வாஜ்பாய் தலைமையிலான பாஜக கூட்டணி அரசை 'எக்ஸ்போஸ்' செய்தது IC814 வெப்சீரிஸ்? எதிர்ப்பின் பின்னணி!- 1

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டுள்ள IC814 கந்தஹார் வெப்சீரிஸ், 1999-ல் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானக் கடத்தல் சம்பவத்தின் போது ஆட்சியில் இருந்த வாஜ்பாய் தலைமையிலான பாஜக கூட்டணி அரசின் 'இயலாமை'யை வெளிப்படுத்தியிருப்பதுதான் மத்திய பாஜக அரசின் எதிர்ப்புக்கு காரணம் எனவும் கூறப்படுகிறது. இதனால்தான் நெட்பிளிக்ஸ் நிறுவனத்துக்கு மத்திய அரசு சம்மன் அனுப்பியது என்கின்றன டெல்லி தகவல்கள்.

மத்தியில் ஆளும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக கூட்டணி அரசானது நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியான IC-814 கந்தஹார் வெப்சீரிஸ் குறித்த அச்சத்தையும் பதற்றத்தையும் பகிரங்கமாக வெளிப்படுத்தியது. இதனாலேயே நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தை விசாரணைக்கும் அழைத்தது. இதற்கு காரணமாக சொல்லப்பட்ட ஒற்றை காரணம் "இந்தியன் ஏர்லைன்ஸ் IC-814" விமானத்தை ஆப்கானிஸ்தானின் கந்தஹாருக்கு 1999-ல் கடத்திய தீவிரவாதிகளுக்கு 'இந்து' பெயர்கள் வைத்ததுதான் என்பதாகும். உண்மையில் இதுமட்டும்தானா மத்திய பாஜக அரசின் IC-814 வெப்சீரிஸ் எதிர்ப்புக்கு காரணம்?

ic 814 hijack bjp 814

IC-814 வெப்சீரிஸ் முழுமையாக பார்த்துவிட்டுதான் நாம் இதை எழுதுகிறோம். 1999-ம் ஆண்டு என்பது இந்த கட்டுரையை எழுதுகிற என்னுடைய பத்திரிகை துறையின் தொடக்க காலம். ஆகையால் IC-814 வெப்சீரிஸில் இடம் பெற்றுள்ள நிகழ்வுகள் சுட்டிக்காட்டுகிற சம்பவங்களை எளிதாக புரிந்து கொள்ள முடிகிறது. அதனைத்தான் வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.

இந்தியாவின் பொதுக் கருத்து: முதலில் இந்தியன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் IC-814 கந்தஹாருக்கு கடத்தப்பட்டது தொடர்பாக இன்றைய இந்தியர்களிடம் பதிந்திருக்கும் பொதுக் கருத்து என்ன? நமது இந்தியன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகளால் கடத்தப்பட்டது. இந்த பயணிகளை விடுவிக்க பயங்கரவாதி மவுலானா மசூத் அசார் உள்ளிட்ட தீவிரவாதிகள் விடுவிக்கப்பட்டனர் என்பது மட்டும்தான். இந்த பொதுக் கருத்தின் அடிப்படையில் பார்த்தால் IC-184 வெப்சீரிஸ், ஓஹோ நடந்த சம்பவத்தை பதிவு செய்திருக்கிறார்கள் என்பதாக மட்டுமே கடந்து சென்றுவிட முடியும்.

வெப்சீரிஸ் வெளிப்படுத்தியதிருப்பது என்ன?:

ஆனால் IC-814 இந்தியன் ஏர்லைன்ஸ் விமானக் கடத்தலுக்கு

- முந்தைய 'ரா' உளவுத் தகவல்கள்
- இந்த முன்னெச்சரிக்கையான உளவுத் தகவல்களை 'டெல்லிவாலா'க்கள் எப்படி அலட்சியமாக கையாண்டனர்
-பயணிகளுடன் விமானத்தைக் கடத்திய பயங்கரவாதிகளை சுற்றி வளைக்க கிடைத்த 'அமிர்தசரஸ்' வாய்ப்பை அப்போது மத்தியில் ஆட்சியில் இருந்த வாஜ்பாய் அரசு 'கோழைத்தனமான' 'செயலற்ற' தன்மையால் பறிகொடுத்த உச்சகட்ட தோல்வி
- வேறுவழியே இல்லாமல் மவுலானா மசூத் அசார் போன்ற பயங்கரவாதிகளை விடுவித்தது
- அன்றைக்கு விடுவிக்கப்பட்ட மசூத் அசார் இன்றைக்கும் இந்தியாவுக்கு எதிரான மிகப் பெரும் ஒற்றை அச்சுறுத்தலாக விஸ்வரூபமாக நிற்பது

என பல்வேறு 'அரசியல் விவகாரங்களை' ஆணித்தரமான ஆதாரங்களுடன் அன்றைய வீடியோ பதிவு காட்சிகளுடனேயே துணிச்சலாகவே 'சம்பவமாக' அம்பலப்படுத்தி இருக்கிறது என்பதுதான் உண்மை. இத்தனை அம்சங்களையும் 'இந்து பெயர்களை' பயங்கரவாதிகளுக்கு சூட்டிவிட்டனர் என்ற ஒற்றை ஜால்சாப்பு மூலம் மூடிவிடலாம் என மத்திய பாஜக அரசு தரப்பும் கடந்து செல்ல முயன்று கொண்டே இருக்கிறது.

வாசகர்களுக்காக: நாம் மேலே சொன்ன அத்தனை அம்சங்களையும் விவரிப்பது என்பது ஒட்டுமொத்தமான வெப்சீரிஸ் ஸ்கிரிப்ட்டை நாம் எழுதுவதாகவே அமையும். ஆகையால் ஆகக் கூடுமானவரை வாசகர்கள் உண்மை அறியும் வகையில் சுருக்கமான தகவல்களுடன் இந்தத் தொடரை பதிவு செய்கிறோம். ஏனெனில் இந்திய அரசியல் வரலாறு நாம் வாழும் காலத்திலேயே நம் கண் முன்னேயே திரித்துவிடப்படாமல் நடந்ததை நடந்தபடியே விவரித்திருக்கிறது இந்த வெப்சீரிஸ் என்பதுதான் பாராட்டுக்கும் ஆறுதலுக்கும் உரியதாக இருக்கிறது. அடுத்த பகுதிகளில் IC 814 வெப்சீரிஸ் என்ன சொல்லி இருக்கிறது என்பதை பார்ப்போம்

2-வது பகுதி: வாஜ்பாய் தலைமையிலான பாஜக கூட்டணி அரசை 'எக்ஸ்போஸ்' செய்தது IC814 வெப்சீரிஸ்? எதிர்ப்பின் பின்னணி!- 2

3-வது பகுதி: வாஜ்பாய் தலைமையிலான பாஜக கூட்டணி அரசை 'எக்ஸ்போஸ்' செய்தது IC814 வெப்சீரிஸ்? எதிர்ப்பின் பின்னணி!- 3

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+