எல்லா தலைவர்களும் இருக்க.. அயோத்தி நிகழ்வில் அமித்ஷா மட்டும் மிஸ்ஸிங்! ஓ பின்னணியில் இப்படியொரு காரணமா
டெல்லி: இன்று நடந்த ராமர் கோயில் பிரதிஷ்டை விழாவில் பல்வேறு தலைவர்கள் கலந்து கொண்ட போதிலும் இதில் அமித் ஷா மட்டும் கலந்து கொள்ளவில்லை. அதற்கான காரணத்தை நாம் பார்க்கலாம்.
ராமர் பிறந்ததாக நம்பப்படும் அயோத்தியில் பிரம்மாண்டமாகக் கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலில் இன்று பிரதிஷ்டை விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பிரதமர் மோடி ராமர் சிலைக்குச் சிறப்புப் பூஜைகளையும் செய்தார்.

இந்த நிகழ்வில் பல்வேறு தலைவர்கள், திரை பிரபலங்கள் கலந்து கொண்டனர். இதனால் அயோத்தி நகர் முழுக்க போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. ஏற்கனவே பஸ் பெற்றவர்கள் மட்டுமே கோயிலில் அனுமதிக்கப்பட்டனர்.
கலந்து கொள்ளவில்லை: அதேநேரம் இந்த நிகழ்வில் சில முக்கிய பாஜக தலைவர்கள் கலந்து கொள்ளவில்லை, அவர்களில் முக்கியமானவர் பாஜக மூத்த தலைவர் அத்வானி, அயோத்தி ராமர் கோயில் இயக்கத்தில் அத்வானி பங்கு முக்கியமானது. அப்படியிருக்கும் போது அவர் இந்த நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை. அதேபோல மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் இந்த நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை.
இந்த அயோத்தி பிரதிஷ்டை நிகழ்வில் சுமார் 7,000 பேர் கலந்து கொண்டுள்ளனர். இருப்பினும். அத்வானி மற்றும் அமித் ஷா உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொள்ளவில்லை. இது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர்கள் கலந்து கொள்ளாமல் இருந்தது ஏன் என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
என்ன காரணம்: மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா தனது குடும்பத்தினருடன் பிர்லா கோயிலில் இருந்தவாறு ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை நேரலையில் கண்டு ரசித்தார். இதன் காரணமாகவே அவர் நேரடியாக ராமர் கோயில் பிரதிஷ்டை நிகழ்வில் அவர் கலந்து கொள்ளவில்லை. அதேபோல பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா டெல்லியில் உள்ள ஜாண்டேவாலன் உள்ள கோயிலில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.
அதேபோல அயோத்தியில் கடும் குளிர் நிலவுகிறது. அத்வானி உள்ளிட்ட சில மூத்த தலைவர்களை இந்த கடும் குளிர் தான் அயோத்தி பிரதிஷ்டை விழாவில் கலந்து கொள்ள விடாமல் தடுத்துள்ளன. இருப்பினும், இந்தத் தலைவர்கள் வரும் நாட்களில் அயோத்தி ராமர் கோயிலுக்கு வந்து வழிபடுவார்கள் என்றே கூறப்படுகிறது.
ராமர் கோயில்: அயோத்தியில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள இந்த ராமர் கோயில் நாகரா பாணியில் கட்டப்பட்டுள்ளது. 380 அடி நீளம், 250 அடி அகலம், 161 உயரத்தில் கட்டப்பட்ட இந்த ராமர் கோயிலில் மொத்தம் 392 தூண்கள் மற்றும் 44 கதவுகள் உள்ளன. மொத்தம் மூன்று தளங்களைக் கொண்ட இந்த கோயிலில் உள்ள தூண்களில் இந்து தெய்வங்களின் சிற்பங்களைச் செதுக்கப்பட்டுள்ளன. அயோத்தியில் உள்ள இந்த ராமர் கோயில் ராமர் பிறந்த இடமாக நம்பப்படுவதால் இங்கோ கருவறையில், ராமரின் குழந்தை வடிவ சிலை வைக்கப்பட்டுள்ளது.
இந்த கோயிலின் பிரதான நுழைவாயில் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது.. இங்கே நிருத்ய மண்டபம், ரங் மண்டபம், சபா மண்டபம், பிராத்தன மண்டபம் மற்றும் கீர்த்தனை மண்டபம் என மொத்தம் 5 மண்டபங்கள் இருக்கிறது. ராமர் கோயில் வளாகத்தின் தென்மேற்குப் பகுதியில் சிவன் கோயில் ஜடாயுவின் சிலையும் நிறுவப்பட்டுள்ளன.
-
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு!












Click it and Unblock the Notifications