மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் இலங்கை பயணம் திடீர் ரத்து-சீனா ஆதரவு சிங்களர் போராட்ட 'சதி' எதிரொலி?
டெல்லி: மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் இலங்கை பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. இலங்கை செல்ல திட்டமிட்டிருந்த ராஜ்நாத் சிங்குக்கு எதிராக சிங்களர் போராட்டங்களை நடத்த சதித் திட்டம் தீட்டியிருந்ததால் இந்த பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக இலங்கை ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இலங்கை பயணம் தொடர்பாக மத்திய அரசு ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தது. அதில், பாதுகாப்பு அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங் 2023 செப்டம்பர் 02 மற்றும் 03 ஆகிய தேதிகளில் இலங்கைக்கு பயணம் மேற்கொள்கிறார். இந்தப் பயணத்தின் போது ராஜ்நாத் சிங் இலங்கை அதிபரும், பாதுகாப்பு அமைச்சருமான ரணில் விக்கிரமசிங்க மற்றும் அந்நாட்டு பிரதமர் தினேஷ் குணவர்தன ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார் . இலங்கையுடன் இந்தியாவின் பாதுகாப்பு உறவுகள் குறித்து இந்த சந்திப்பின் போது ஆலோசனை மேற்கொள்ளப்படவுள்ளது. இலங்கையின் மத்தியப் பகுதியில் உள்ள நுவரெலியா மற்றும் அந்நாட்டின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள திருகோணமலை ஆகிய இடங்களுக்கும் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

ராஜ்நாத் சிங்கின் இந்தப் பயணம், இலங்கையுடன் தற்போதுள்ள நட்புறவை மேம்படுத்துவதில் இந்தியாவின் தொடர்ச்சியான நிலைப்பாட்டை மீண்டும் உறுதிசெய்யும். இரு நாடுகளுக்கும் இடையிலான வலுவான நட்புறவை மேம்படுத்துவதில் இது ஒரு முக்கியமான மைல் கல்லாக அமையும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் தற்போது இந்த பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக செய்தி வெளியிட்டுள்ள இலங்கை ஊடகங்கள், சிங்களர் தரப்பில் ராஜ்நாத்சிங்குக்கு எதிராக பல போராட்டங்கள் நடத்த திட்டமிட்டிருந்ததால் இப்பயணம் ரத்து செய்யப்பட்டிருக்கலாம் என தெரிவித்துள்ளன.
இலங்கைக்கு சீனா ஆராய்ச்சிக் கப்பல் என்ற போர்வையில் உளவு கப்பலை அனுப்புகிறது. இந்த உளவு கப்பல் கொழும்பு துறைமுகத்தில் நிறுத்தப்படுவதற்கு ரணில் அரசாங்கம் அனுமதி தந்தது. இதற்கு இந்தியா தரப்பில் கடும் அதிருப்தி தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த கோபத்தில்தான் சீனா ஆதரவு சிங்கள சக்திகள், ராஜ்நாத்சிங்குக்கு எதிரான போராட்ட அறிவிப்புகளை வெளியிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications