உலகம் பூரா போயிருக்காரு.. இதுவரை பிரதமரின் பாதுகாப்பில் குளறுபடியே நடந்ததில்லை! கிளம்பும் விவாதங்கள்
டெல்லி: பஞ்சாப் சென்ற பிரதமர் நரேந்திர மோடியின் பாதுகாப்பில் குளறுபடி இல்லை என்றால் பெரோஸ்பூர் காவல் துறை அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டது ஏன் என்ற கேள்வி முன் வைக்கப்பட்டுள்ளது.
Recommended Video

பஞ்சாப் மாநிலம் பெரோஸ்பூரில் ரூபாய் 42,750 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்ட இருந்தார். இதற்காக அவர் பஞ்சாப் செல்ல முற்பட்டார்.
அப்போது மோசமான வானிலை நிலவியதால் பஞ்சாப்பிற்கு செல்லும் ஹெலிகாப்டர் பயணத்தை பிரதமர் மோடி தவிர்த்தார். இதையடுத்து சாலை மார்க்கமாக பெரோஸ்பூருக்கு சென்று கொண்டிருந்தார்.

பஞ்சாப் பயணம் ரத்து
அப்போது ஹூசைனிவாலா பகுதியில் உள்ள பாலம் ஒன்றில் விவசாயிகள் சிலர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து பிரதமரின் பஞ்சாப் பயணம் ரத்து செய்யப்பட்டு அவர் மீண்டும் விமான நிலையம் சென்றார். அப்போது அங்கிருந்த அதிகாரிகளிடம் விமான நிலையம் வரை என்னை உயிருடன் அனுப்பியதற்கு நன்றி கூறுமாறு பிரதமர் நரேந்திர மோடி கூறியிருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பாதுகாப்பு குறைபாடு
பிரதமரின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டதற்கு உள்துறை அமைச்சகம், பாதுகாப்புத் துறை அமைச்சகம் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து பஞ்சாப் அரசிடம் விரிவான அறிக்கை கேட்கப்பட்டது. இந்த நிலையில் இதுகுறித்து பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி விளக்கம் அளிக்கையில், பிரதமரின் வருகையின் போது எந்தவித பாதுகாப்பு குறைபாடும் இல்லை. எனது செயலாளருக்கு கொரோனா பாதிப்பு இருந்ததால் பிரதமரை வரவேற்க என்னால் செல்ல முடியவில்லை.

ஹெலிகாப்டர் பயணம்
பிரதமர் வருகையையொட்டி அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன. பிரதமரின் ஹெலிகாப்டர் பயணம் ரத்தாகி கடைசி நேரத்தில் சாலை பயணத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மோசமான வானிலை மற்றும் போராட்டம் காரணமாக பயணத்தை ரத்து செய்யுமாறு நாங்கள் ஏற்கெனவே கூறியிருந்தோம். இதை பாஜக அரசியலாக்குவதாக தெரிவித்தார்.

உலகம் முழுவதும் பிரதமர் பயணம்
நாட்டின் பிரதமர் அவரது பாதுகாப்பில் இத்தனை குளறுபடியா என்ற கேள்வி எழுகிறது. இதுதொடர்பாக ஊடகங்களில் விவாதங்கள் நடத்தப்பட்டன. அதில் சிறப்பு விருந்தினர்கள், உலகம் மற்றும் இந்தியா முழுவதும் பிரதமர் நரேந்திர மோடி பயணம் செய்துள்ளார். சில இடங்களில் அவருக்கு பிடித்தமானவர்கள் இருப்பார்கள். சில இடங்களில் அவருக்கு பிடிக்காதவர்கள் இருப்பார்கள். ஆனால் இதுவரை பாதுகாப்பு குளறுபடி என்பது ஏற்பட்டதே இல்லை.

பெரோஸ்பூர் எஸ்எஸ்பி
பஞ்சாப் முதல்வர் சன்னி சொல்லுவதை போன்று பாதுகாப்பில் குறைபாடு இல்லாமல் இருந்திருந்தால் எதற்காக பெரோஸ்பூர் எஸ்எஸ்பி எந்த வித விசாரணையுமின்றி சஸ்பெண்ட் செய்யப்பட வேண்டும்? தங்கள் மாநிலத்துக்கு வரும் பிரதமருக்கு பாதுகாப்பு கொடுப்பது காவல் துறையின் கடமையாகும். அவ்வாறிருக்கும் போது பிரதமர் செல்லும் பாதை என தெரிந்தும் அங்கு போராட்டக்காரர்களுக்கு அதுவும் 1000-க்கும் மேற்பட்டோருக்கு எப்படி அனுமதி கொடுக்கப்பட்டது.

டிவி விவாதங்கள்
முதல்வர் சன்னி சொல்வது போல் கடைசி நேரத்தில் பிரதமரின் வான்வழி பயணம் ரத்து செய்யப்பட்டு சாலை மார்க்கமான பயணத்திற்கு மாற்றியிருந்தால் அது பாதுகாப்பு அதிகாரிகளுக்கு மட்டுமே தெரிந்திருக்கும். ஆனால் அந்த இடத்திற்கு போராட்டக்காரர்கள் எப்படி வந்தார்கள்? என தொலைகாட்சிகளில் விவாதங்கள் நடத்தப்பட்டது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications