ஓ இதுதான் மேட்டரா..! உலகின் டாப் நாடுகளும் சாட்டிலைட்களை ஏவ இந்தியாவிடம் வர என்ன காரணம் தெரியுமா
டெல்லி: உலகின் பல டாப் நாடுகளும் தங்கள் சாட்டிலைட்களை அனுப்ப இந்தியாவை தேடி வருகின்றனர். இதற்கு உண்மையில் என்ன காரணம் என்பது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
சந்திரயான் 3 சாட்டிலைட் வெற்றிகரமாக இப்போது நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கியுள்ளது. நிலவின் தென் துருவத்தில் இதுவரை எந்தவொரு நாடும் தரையிறங்காத நிலையில், முதல்முறையாகச் சந்திரயான் 3 சாட்டிலைட் நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கியுள்ளது.

அமெரிக்கா, சோவியத் ஒன்றியம், சீனா நாடுகளுக்குப் பிறகு வெற்றிகரமாகத் தரையிறங்கிய முதல் சாட்டிலைட் என்ற பெருமையையும் இந்தியா பெற்றுள்ளது. இதன் முக்கியமான ஒரு சாதனையாகவே பார்க்கப்படுகிறது.
இஸ்ரோ: நிலவின் தென் துருவம் குறித்து எந்தவொரு ஆய்வும் இதுவரை செய்யப்படாத நிலையில், சந்திரயான் 3 அங்குத் தரையிறங்கியுள்ளது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. அடுத்த 14 நாட்களுக்குச் சந்திரயான்-3 ரோவர் நிலவின் தென் துருவத்தில் பல்வேறு இடங்களுக்குச் சென்று ஆய்வு செய்ய உள்ளது. சந்திரயான்-3 மட்டுமின்றி இஸ்ரோ கை வைக்கும் அனைத்து திட்டங்களும் இப்போது வெற்றிகரமாகவே இருந்துள்ளது.
உலகின் பல்வேறு நாடுகளும் தங்கள் சாட்டிலைட்களை அனுப்ப அவர்கள் இந்தியாவிடம் வருகிறார்கள். அதற்கு என்ன காரணம் என்பது குறித்து நாம் பார்க்கலாம். பொதுவாக ஒரு விண்கலம் சுற்றுப்பாதையில் செலுத்தப்பட்டால், அது விரைவாகப் பூமியைச் சுற்றிச் சுழல ஆரம்பிக்க வேண்டும். இல்லையென்றால் பூமியின் ஈர்ப்பு விசையால் அது கீழே இழுக்கப்படும் வாய்ப்புகள் மிக அதிகம்..
பூமத்திய ரேகை: ஒரு ராக்கெட் மேலே செல்ல அதற்கு போதுமான அளவு உந்துதல் கிடைக்க வேண்டும்.. இந்த வேகத்தைப் பூமியின் சுற்றுவதும் ராக்கெட்டிற்கு அளிக்கும். பூமத்திய ரேகையில் பூமியின் மேற்பரப்பில் இருக்கும் பொருட்கள் மணிக்கு 1670 கிலோமீட்டர் வேகத்தில் நகரும்..
பூமி தன்னை தானே சுற்றிக் கொண்டு சூரியனைச் சுற்றி வருவது அனைவருக்கும் தெரியும்.. அப்படி தன்னை தானே சுற்றும் போது இரு துருவங்களைக் காட்டிலும் பூமத்திய ரேகை அருகே இது வேகமாகச் சுழலும்.. இதன் காரணமாகவே பூமியின் மேற்பரப்பில் உள்ள வேறு எந்த இடத்தையும் விடப் பூமத்திய ரேகையில் நிலம் வேகமாக நகர்கிறது. அதேபோல மற்றொரு காரணமும் இருக்கிறது.
கடலோரம்: விண்வெளிக்கு சாட்டிலைட்களை ஏவுவதற்குக் கடற்கரை அருகில் தான் எப்போது ஏவுதளம் அமைக்கப்படும். இது ஏன் தெரியுமா.. ராக்கெட் ஏவும் போது பூமியின் சுழற்சியும் அதில் முக்கிய பங்கு வகிக்கிறது. கடலோர ஓரத்தில் இருந்து ஏவுவது குறிப்பிட்ட சாட்டிலைட்களுக்கு பல விதங்களில் நன்மையைக் கொடுக்கும்.. இது குறிப்பிட்ட சாட்டிலைட் சுற்றுப்பாதைகளை எளிதாக அடைய அனுமதிக்கிறது.. பூமியின் சுழற்சி வேகத்தைப் பயன்படுத்தி ராக்கெட் எளிதாக மேலே செல்லும்.
சாட்டிலைட்களை ஏவும் தளம் கடற்கரைக்கு அருகிலேயே அமைய இதுவும் ஒரு முக்கிய காரணம். மேலும், ராக்கெட் ஏவுவது என்பது ஈஸியான வேலை இல்லை. ராக்கெட் ஏவும் போதில் அதில் பல விஷயங்கள் தவறாகப் போக வாய்ப்புள்ளது. அப்போது அது வெடித்துச் சிதறும் போது கீழே ராக்கெட் பாகங்கள் வெடித்து விழும்.. அதுவும் ராக்கெட் ஏவுதளங்கள் கடற்கரைக்கு அருகே அமைய முக்கிய காரணமாகும்.
இந்த இரண்டும் இந்தியாவில் ஒரு சேர அமைந்துள்ள நிலையில், இதன் காரணமாகவே உலகின் பல நாடுகளும் தங்கள் சாட்டிலைட்களை அனுப்ப இந்தியாவிடம் வருகிறது.












Click it and Unblock the Notifications