உஷார் மக்களே.. கொரோனா தடுப்பூசி போட்ட சர்டிபிகேட்டை சோஷியல் மீடியாவில் போடாதீங்க.. ஏன் தெரியுமா?
டெல்லி: கொரோனா தடுப்பூசி போட்டுவிட்டு அந்த சான்றிதழை சோஷியல் மீடியாவில் ஷேர் செய்து மகிழும் மனநிலையில் உள்ளீர்களா. அப்போ இந்த தகவல் உங்களுக்குத்தான்.
நீங்கள் சமீப காலமாகவே இதுபோன்ற நிறைய போஸ்ட்களை பார்த்திருப்பீர்கள். "நான் தடுப்பூசி போட்டுவிட்டேன்.. அப்போ நீங்க.." என்பதை போல தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் தங்கள் சர்டிபிகேட்டை பேஸ்புக்கிலும், டுவிட்டரிலும், வாட்ஸ்அப் ஸ்டேடசிலும் வைத்திருப்பார்கள்.
பிறருக்கு இது ஊக்கம் தரும் என அவர்கள் நினைத்திருக்கலாம். ஆனால், வெறுமனே ஊசி போட்டதை சொன்னால் ஓகேதான். சான்றிதழை பதிவேற்றம் செய்வதுதான் சிக்கல்.

டுவிட்டரில் எச்சரிக்கை
சமூக வலைத்தளங்கள், ஆன்லைன் தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்த மத்திய உள்துறை அமைச்சகத்தால் உருவாக்கப்பட்டுள்ள டுவிட்டர் அக்கவுண்ட் Cyberdost. இதில்தான் இந்த விழிப்புணர்வு தகவல் படத்தோடு வெளியிடப்பட்டுள்ளது.

தனிப்பட்ட தகவல்கள்
கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் போட்டுக் கொண்டதுமே சான்றிதழ் வழங்கப்படும். அதில், உங்கள் பெயர், உங்கள் அடையாள அட்டையின் கடைசி நான்கு எண்கள், வேக்சின் பெயர் உள்ளிட்ட பல தனிப்பட்ட தகவல்கள் இடம் பெற்றிருக்கும். அதை பார்த்து, ஆன்லைன் மோசடி நடைபெற வாய்ப்பு உள்ளது. எனவே இப்படிச் செய்யாதீர்கள் என்று கேட்டுக்கொண்டுள்ளது இந்த டுவிட்டர் பக்கம்.

வெளியே சொல்லுங்கள்
எனவே, நீங்களும் இனிமேல், சர்ட்டிபிகேட்டை ஷேர் செய்யாதீர்கள். அதேநேரம், தடுப்பூசி செலுத்திய தகவலை கம்பீரமாக சொல்லவும் மறக்காதீர்கள்.

ஏன் இப்படி?
சீனா, ஜப்பான் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட பல நாடுகள், எதிர்காலத்தில் தடுப்பூசி சான்றிதழ் இருந்தால்தான் தங்கள் நாட்டுக்குள் அந்த பயணிகளை அனுமதிக்கப்போகின்றன. எனவே, இந்த சான்றிதழ்களிலுள்ள தகவல்கள் பிறரால் காப்பியடிக்கப்பட வாய்ப்புள்ளது என்பதுதான் இந்த எச்சரிக்கைக்கு காரணமாம்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications