புல்லரிக்குதே.. நாட்டுக்காக கல்வானில் வீரமரணம் அடைந்த கணவன்! துணிச்சலோடு ராணுவத்துக்கு வந்த மனைவி
டெல்லி: சீன ராணுவம் உடனான கல்வான் பள்ளத்தாக்கில் நடைபெற்ற மோதலில் வீரமரணம் அடைந்த வீரரின் மனைவி தற்போது இந்திய ராணுவத்தில் இணைந்து இருப்பது பலரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.
இந்தியாவில் லடாக், அருணாச்சல பிரதேசம், சிக்கிம் எல்லையோர பகுதிகளை சீனா தொடர்ந்து உரிமை கோரி வருவதுடன் பல்வேறு அத்துமீறல்களிலும் ஈடுபட்டு உள்ளது. இதில் குறிப்பாக லடாக் எல்லை விவகாரம் தொடர்ந்து பதற்றமாக உள்ளது.

கடந்த 2020 ஆம் ஆண்டு லடாக்கின் சீன எல்லையை ஒட்டி அமைந்து உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் சீன படையினர் ஊடுருவ முயன்றனர். சீனாவின் அந்த ஊடுருவலை தடுக்க முயன்ற இந்திய பாதுகாப்பு படையினருக்கும் சீன ராணுவத்தினருக்கும் கடுமையான மோதல் ஏற்பட்டதில் இரு தரப்பிலும் உயிரிழப்புகள் ஏற்பட்டதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின. இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்ததாக கூறப்பட்டது.
இதனால் ஏற்பட்ட தாக்கம் இதுவரை குறையவில்லை. அதை தொடர்ந்து இந்தியா - சீனா ராணுவ படைகள் இரு நாட்டு தலைவர்கள் பேச்சுவார்த்தைக்கு பின்னர் மெல்ல மெல்ல தாக்குதல் நடத்தப்பட்ட பகுதிகளில் இருந்து விலக்கிக் கொள்ளப்பட்டன. இதனை சரியாக பயன்படுத்தி இந்திய எல்லை பகுதிகளில் கட்டுமானங்களை சீனா ஏற்படுத்தி வருகிறது.
அருணாச்சல பிரதேச மாநிலத்தை போன்றே லடாக்கில் உள்ள இந்திய எல்லையோர கிராமங்களையும் சீனா உரிமை கோரி வருகிறது. இந்திய எல்லைக்கு உட்பட்ட லடாக்கின் பேன்காங் சோ பகுதியிலும் சீனா வேகமாக ராணுவ நகரம் ஒன்றை உருவாக்கி வருகிறது. உலகையே உலுக்கியா இந்தியா - சீனா ராணுவ வீரர்கள் இடையேயான கல்வான் மோதலில் இந்தியாவுக்காக உயிர் தியாகம் செய்தவர்களில் ஒருவர் தீபக் சிங்.
இவருக்கு வீர சக்ரா விருதும் வழங்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் கணவர் தீபக் சிங் மரணத்தால் அப்போது சோகத்தின் உச்சத்துக்கு சென்ற மனைவி ரேகா, தானும் இந்திய ராணுவத்தில் இணைந்து பணியாற்றினார். அதன் தொடர்ச்சியாக ராணுவ மையத்தில் இணைந்து பயிற்சி செய்தார் ரேகா. இந்த நிலையில் அவர் அனைத்திலும் தகுதிபெற்று இந்தியாவின் ராணுவ அதிகாரியாகி இருக்கிறார்.
பயிற்சியை தொடர்ந்து ராணுவ அதிகாரியான ரேகாவை தற்போது லடாக்கின் கிழக்கு பகுதியில் பணி அமர்த்தப்பட்டு இருக்கிறார். ராணுவ பணியில் கணவர் இழந்த மனைவி, தானும் நாட்டுக்காக பாடுபட ராணுவத்தில் இணைந்து இருக்கும் சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.












Click it and Unblock the Notifications