புதிய AY.4. வைரஸ் எப்படி இருக்கும்? நிபுணர்கள் கருத்து என்ன?
டெல்லி: புதிய AY.4.2 எனும் உருமாறிய கொரோனா வைரஸ் டெல்டாவை விட அதிக பரவும் தன்மை இருக்காது என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளார்கள்.
Recommended Video
இந்தியாவில் கொரோனாவின் முதல் அலை, இரண்டாவது அலை என வந்துவிட்டது. இந்த இரண்டாவது அலையின் போது இந்தியாவில் டெல்டா வகை வேரியண்ட் எனும் புதிய உருமாறிய கொரோனா வைரஸ் பரவி வந்ததால் இரண்டாவது அலையின் தாக்கம் அதிகமாகவே காணப்பட்டது.

தற்போது மூன்றாவது அலையானது எப்போது வேண்டுமானாலும் பரவும் அளவுக்கு "தயார் நிலையில்" இருக்கிறது. 2ஆவது அலையின் போது மருத்துவமனையில் படுக்கைகள் கிடைக்காமல், ஆக்ஸிஜன் படுக்கைகளுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டது. 2ஆவது அலையின் போது நிறைய பேர் பாதிக்கப்பட்டனர். மேலும் உயிரிழப்புகளும் அதிகமாக இருந்தன.
இந்த நிலையில் மூன்றாவது அலை எப்படி இருக்கும் என மக்கள் அச்சமடைந்தனர். மேலும் இரண்டாவது அலையின் போது டெல்டா வேரியண்ட் எனும் உருமாறிய வைரஸ் பரவியதால் அது தீவிரமடைந்தது. அது போல் மூன்றாவது அலை தீவிரமடைய மற்றொரு வேரியண்ட் வந்தால் மட்டுமே அது நடக்கும் என மருத்துவ நிபுணர்கள் தெரிவித்தனர்.
ஆனால் தற்போது புதிய வேரியண்டான AY 4.2 என்பது வேகமாக பரவி வருகிறது. இதை மத்திய அரசும் உறுதிப்படுத்தியது. AY.4.2 எனப்படும் SARS-CoV2 கொரோனா வகையின் சுமார் 17 மாதிரிகள் இந்தியாவில் அடையாளம் காணப்பட்டுள்ளன. இது டெல்டாவின் உருமாறிய வகையாகும். இதுதான் தற்போது இந்தியாவில் பரவி வருகிறது.
இதுகுறித்து நிபுணர்கள் கூறுகையில் டெல்டா வேரியண்டை விட அதிக அளவில் AY 4.2 பரவும் என்பதற்கான எந்தவித ஆதாரமும் இல்லை. மத்திய பிரதேச மாநிலத்தில் இந்தூரில் 6 பேருக்கு இதன் பாதிப்பு ஏற்பட்டது. இந்த 6 பேரும் இரு தவணை தடுப்பூசிகளை செலுத்தி கொண்டவர்கள். இவர்கள் சிகிச்சைக்கு பிறகு குணமாகினர். A.Y.4.2 புதிய வேரியண்ட் அல்ல. 39,283 சாம்பிள்கள் எடுக்கப்பட்டதில் 4,143 சாம்பிள்களில் AY சீரிஸ் இருப்பது தெரியவந்துள்ளது.
இந்த புதிய வகை உருமாறிய கொரோனாவானது அமெரிக்காவிலும் பிரிட்டனிலும் பரவி வருகிறது என்றும் மருத்துவ நிபுணர்கள் தெரிவித்தனர்.
-
நடுக்கடலில் தத்தளித்த இந்தியர்கள்.. அடுத்த நொடி அமெரிக்க செய்த காரியம்.. மீண்டும் மீண்டுமா.! -
ஒரு சொட்டு கூட பெட்ரோல் இருக்காது.. ஆனாலும் வண்டி பட்டாசாக ஓடும்.. அதென்ன E100 எரிபொருள்? -
வளைகுடா போர் நிறுத்தத்தால் மிடில் கிளாஸ் மக்களுக்கு என்ன லாபம்? சத்தமில்லாமல் மாற போகும் 5 மேட்டர் -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு! -
இந்தியாவை சூழும் புதிய பிரச்சனை! 64% நிலைமை மோசம்! சாட்டிலைட் படங்களில் தெரிய வந்த அதிர்ச்சி -
100% எத்தனால் எரிபொருள்.. கிரீன் சிக்னல் கொடுத்த மத்திய அரசு! பெரிய பிரச்சனை.. மக்களே உஷார்! -
ஹார்முஸை பத்திரமாக கடந்த முதல் இந்திய டேங்கர் திஷா.. அமைதி ஒப்பந்தம் வந்தவுடனேயே நடந்த மாற்றம்! -
இந்தியாவே இந்த 4 மாநிலத்தை தான் நம்பியிருக்கு.. உபி, பீகார் நிலைமை ரொம்ப மோசமா இருக்கே..! -
இந்தியர்கள் உட்பட வெளிநாட்டினருக்கு மட்டும் தடை.. AI வைத்து அமெரிக்கா ஆடும் கேம்? பின்னணி -
60 எச்சரிக்கை.. 8 முறை விமானம் மூலம் வார்னிங்.. அமெரிக்கா தாக்குதலில் இந்தியர்கள் பலியானது எப்படி? -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை












Click it and Unblock the Notifications