விஜய் உடன் கூட்டணியா? தவெக பற்றிய கேள்விக்கு அமித் ஷாவின் ரியாக்ஷன் இதுதான்!
டெல்லி: எதிர்வரும் தமிழக சட்டமன்ற தேர்தலில் நடிகர் விஜய்யின், தமிழக வெற்றிக் கழகம் கட்சியை என்டிஏ கூட்டணியில் இணைத்துக்கொள்கிறீர்களா? என்கிற கேள்விக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பதிலளித்துள்ளார்.
தினத்தந்தி செய்தி நாளிதழுக்கு பேட்டியளித்திருந்த அமித் ஷா, விஜய் உடன் கூட்டணி, தமிழகத்தில் கூட்டணி ஆட்சி குறித்து பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார்.

அதாவது, "தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய் இணைவாரா என்ற கேள்விக்கு, தேர்தலுக்கு இன்னும் போதுமான நேரம் இருப்பதால், இன்னும் சில காலத்தில் அனைத்தும் தெளிவாகி விடும். அதிமுகவில் பிரிந்து சென்றவர்களை ஒன்றிணைக்க தான் எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை. அக்கட்சி விவகாரங்களை அவர்களே முடிவு செய்து கொள்ள வேண்டும்" என்று கூறியுள்ளார்.
அதேபோல, தமிழக சட்டசபை தேர்தலை நீங்கள் எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறீர்கள்? என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு, " திமுக அரசின் தோல்விகளையும் பிரதமர் மோடியின் சாதனைகளையும் மக்களிடம் எடுத்து சொல்வோம். இந்த இரண்டும் இந்த தேர்தல் முக்கிய பங்கு வகிக்கும். நாடு முழுவதும் நாங்கள் 20க்கும் மேற்பட்ட மாநிலங்கள் ஆட்சி அமைத்து உள்ளோம். அனைத்தும் தேர்தல்களை கடந்து வென்று உருவானவைதான். தமிழ்நாட்டில் அதேபோல தேர்தலுக்கு செல்வோம். தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி நிச்சயமாக அரசு அமைக்கும்" என்று கூறியுள்ளார்.
இதனை தொடர்ந்து, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கீழடி நகரத்தை அழிக்க மத்திய அரசு முதலிரவு என்ற குற்றம் சுமத்துகிறார். தொல்லியல் நிபுணர் ராமகிருஷ்ணனின் அறிக்கையையும் நிராகரிக்கப்பட்டதை கண்டித்து இருக்கிறாரே? கச்சத்தீவு திரும்ப பெற வேண்டும் என்பதை தமிழகத்தின் கோரிக்கையாக இருக்கிறதே? முருக பக்தர்கள் மாநாட்டில் பெரியாரை அண்ணாவை விமர்சித்து இருக்கிறார்களே? சமுத்திர சிக்ஷா திட்டத்தின் கீழ் தமிழகத்திற்கு ஒதுக்க வேண்டிய நிதி ஒதுக்கப்படவில்லையே இது தொடர்பாக தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடுத்துள்ளதே? என்று அடுக்கடுக்கான கேள்விகள் முன்வைக்கப்பட்டன.
இதற்கு முறையே அவர் அளித்த பதில், "பாருங்கள் தொன்மையான நாகரீகம் நாட்டில் எங்கு கண்டுபிடிக்கப்பட்டாலும் அது இந்தியா முழுவதும் திறமையான விஷயம் அது தமிழ்நாட்டில் இருந்தாலும் கூட இந்தியா முழுவதும் நம் அனைவருக்கும் பெருமைதான் ஆனால் உலகம் இதை ஏற்றுக்கொள்வது சர்வதேச தரமான ஆதாரங்களில் அடிப்படையில் தான் எனவே தமிழ்நாடு அரசு ஒத்துழைக்கும் என்று நம்புகிறேன் எல்லோரும் பெருமைப்படுகிறார்கள் யாருக்கும் அதில் பிரச்சனை இல்லை
கச்சத்தீவு விஷயத்தில் சர்வதேச நடைமுறைகளில் அடிப்படையில் என்னென்ன செய்ய முடியும் என்பதை செய்வதுதான் எங்கள் நோக்கம். முருக பக்தர்கள் மாநாடு பாஜக நிகழ்ச்சி அல்ல. இந்து முன்னணி நிகழ்ச்சி.
கல்வி நிதியை பொறுத்தவரை, எனது புரிதலின்படி தமிழ்நாடு அரசு ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்துள்ளது ஆனால் அதை நடைபெறவில்லை இது கல்வி அமைச்சகத்துக்கு உட்பட்ட விவகாரம் மத்திய கல்வி துறை அமைச்சர் தன்மேந்திர பிரதான் தான் இதை கவனித்து வருகிறார்" என்று கூறியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications