இந்தியா கூட்டணி வென்றால்.. ராகுலை பிரதமராக ஏற்றுக்கொள்வாரா? சூசகமாக கெஜ்ரிவால் கொடுத்த பதில் இதுதான்
டெல்லி: லோக்சபா தேர்தலில் இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால் யார் பிரதமராக இருப்பார் என்ற கேள்விக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பதில் அளித்துள்ளார்.
லோக்சபா தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. 5 கட்ட தேர்தல்கள் இதுவரை நடந்து முடிந்துள்ளது. அதாவது, 430 லோக்சபா தொகுதிகளில் தேர்தல் இதுவரை நடைபெற்றுள்ளது. நாளை மறுநாள் 6 ஆம் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. 7 மாநிலங்களில் உள்ள 57 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது.

இன்னும் 2 கட்ட தேர்தல் மட்டுமே பாக்கியுள்ளதால் அனல் பறக்கும் பிரசாரத்தில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டுள்ளன. மத்தியில் ஆளும் பாஜகவை வீழ்த்தி ஆட்சியை பிடிக்க இந்தியா கூட்டணி கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. அதே வேளையில், ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள பாஜக வியூகம் வருகிறது.
தேர்தல் நடைபெற உள்ள மாநிலங்களில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, காங்கிரஸ் தலைவர் கார்கே, வயநாடு தொகுதி எம்பி ராகுல் காந்தி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீனை உச்ச நீதிமன்றம் அளித்துள்ளது.
இடைக்கால ஜாமீனில் உள்ள கெஜ்ரிவால் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். தனது தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்து பேசி வருகிறார். இந்த நிலையில், டெல்லியில் செய்தி நிறுவனத்திற்கு கெஜ்ரிவால் பேட்டி அளித்தார். அப்போது பல்வேறு கேள்விகளுக்கு கெஜ்ரிவால் காரசாரமாக பதிலளித்தார்.
அதேவேளையில், பிரதமர் வேட்பாளர் தொடர்பான கேள்விக்கு நேரடியாக பதிலளிக்காமல் மழுப்பலாக பதிலளித்துவிட்டார். கெஜ்ரிவால் தனது பேட்டியின் போது கூறியதாவது:- இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால் இந்தியாவின் அடுத்த பிரதமராக வேண்டும் என்ற நோக்கம் எனக்கு இல்லை. நாட்டை சர்வாதிகாரத்தில் இருந்து காப்பாற்றுவதே எனது இலக்கு.
பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் எதிர்க்கட்சி தலைவர்கள் அனைவரும் சிறைக்கு செல்வார்கள். நடைபெற இருக்கும் தேர்தல் ஜனநாயகத்தை காப்பாற்ற நடைபெற இருக்கும் தேர்தல். அவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஜனநாயகத்தை அழித்து விடுவார்கள். ஆம் ஆத்மி சிறிய கட்சிதான். வெறும் 22 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடுகிறது" என்றார்.
கெஜ்ரிவாலின் இந்த பதில் பிரதமர் ஆகும் வாய்ப்பு மிக குறைவாக இருப்பதை சூசகமாக கூறுவதையே காட்டுகிறது என்று அரசியல் நோக்கர்கள் கூறுகிறார்கள். இந்தியா கூட்டணியில் ராகுல் காந்தியே பிரதமர் வேட்பாளர் என பரவலாக பார்க்கப்படுகிறது. முன்னதாக கடந்த வாரம் பேட்டி அளித்த கெஜ்ரிவால், "இந்தியா கூட்டணி வென்றால் நான் பிரதமர் வேட்பாளர் கிடையாது.
இந்தியா கூட்டணியில் உள்ள தலைவர்கள் ஒருங்கிணைந்து இது குறித்து தேர்தல் முடிவுகளுக்கு பிறகு முடிவு செய்வார்கள்" என்று கூறியிருந்தார். இதன் மூலம் பிரதமர் ரேசில் தான் இல்லை என்பதை கெஜ்ரிவால் அழுத்தமாக சொல்லி வருவதையே காட்டுவதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகிறார்கள்.
-
இறுதியான பாஜக வேட்பாளர்கள் பட்டியல்.. பியூஷ் கோயல் ஆலோசனையில் நடந்தது என்ன? அண்ணாமலைக்கு வாய்ப்பு? -
கோவை வடக்கு தொகுதியில் பாஜக கதை குளோஸ்.. சத்தமே இல்லாமல் வேலை பார்க்கும் வேலுமணி ஆதரவாளர் -
விஜயோடு சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைப்போம்! தமிழகத்தில் மத்திய அமைச்சரை வைத்து பல்ஸ் பார்க்கிறதா பாஜக? -
முடியவே முடியாது.. டெல்லியை எதிர்த்து நிற்கும் அண்ணாமலை! பாஜக பட்டியல் தாமதம்! இது தான் காரணம்! -
யாரு? எங்க? பாஜகவில் பரபர பஞ்சாயத்து! அதிமுகவால் கடுப்பான டெல்லி! மொடக்குறிச்சியில் அண்ணாமலை போட்டி? -
இது தமிழ்நாடு ப்ரோ.. பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி! கை கொடுக்காத ஷாவின் ’அறுபடை வீடு’ பாலிடிக்ஸ் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
BJP Candidate List: தமிழக பாஜக வேட்பாளர்கள் யார்? இன்று வெளியீடு! அண்ணாமலை பெயர் இருக்காதா? -
"தமிழகத்தில் முஸ்லீம்களுக்கு தான் ஓபிசி இட ஒதுக்கீடு கிடைக்கிறது.." பாஜக எம்பி குற்றச்சாட்டு -
Vijay: விஜய் கனவுலகில் இருக்காரு.. தமிழ்நாடு பற்றி ஒன்னுமே தெரியலை.. பியூஷ் கோயல் அட்டாக்! -
ஆண்டுக்கு 2 சிலிண்டர் இலவசம்.. கேரளாவில் கிறிஸ்துமஸ் - ஓணத்தை கையிலெடுத்த பாஜக.. தேர்தல் வாக்குறுதி -
Election Exclusive: அந்த பக்கம் சசிகலா..இந்த பக்கம் ராமதாஸ்! எடப்பாடிக்கு எல்லா பக்கமும் சிக்கல் தான்! 2026 ரொம்ப கஷ்டம்












Click it and Unblock the Notifications