தென்னிந்தியாவை இதற்கு முன்னர் பாகிஸ்தான் தாக்கியிருக்கிறதா? இப்போது எச்சரிக்கையாக இருக்கனுமா?
டெல்லி: இந்தியா பாகிஸ்தான் இடையே போர் சூழல் உருவாகியிருக்கிறது. இந்நிலையில் பாகிஸ்தான் தென்னிந்தியாவை தாக்குமா? என்கிற கேள்வி எழுந்திருக்கிறது. இதற்கான வாய்ப்புகள் என்ன? எப்படி தாக்கும்? என்பது பற்றி இந்த செய்தி விவரிக்கிறது.
பூகோள ரீதியில் தென்னிந்தியா என்பது பாகிஸ்தானுக்கு கொஞ்சம் தூரம். எனவே நேரடி தாக்குதல் அச்சுறுத்தல் குறைவுதான். இருப்பினும் வேறு வழிகளில் தாக்கப்பட வாய்ப்பு இருக்கிறது.

போர் வந்தால் எல்லை பகுதிகளும், தலைநகர் பகுதிகளும்தான் அதிக பாதிப்புக்கு உள்ளாகும். அந்த வகையில் ஜம்மு காஷ்மீர், பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் அச்சுறுத்தல் இருக்கிறது. நேற்று ஜம்மு காஷ்மீரின் பல இடங்களில் பாகிஸ்தான் குண்டு வீச முயன்றது. இந்திய வான் பாதுகாப்பு அம்சம் அதை முறியடித்துள்ளது. இது வழக்கமான ஒன்றுதான். ஜம்மு காஷ்மீர் பாகிஸ்தானிலிருந்து சில நூறு கி.மீ தொலைவில்தான் இருக்கிறது. எனவே பாகிஸ்தானுக்கு வான்வழி தாக்குதல் நடத்துவது எளிதாக இருக்கிறது.
ஆனால், தென்னிந்திய பகுதிகள் 1,500 கி.மீ தொலைவில் இருக்கின்றன. இந்த தூரத்தில் உள்ள இலக்கை துல்லியமாக தாக்கும் ஏவுகணைகள் சொற்பமான அளவில்தான் பாகிஸ்தானிடம் இருக்கின்றன. இதனால் ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, கேரளா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் தாக்கப்பட வாய்ப்பு குறைவு. மட்டுமல்லாது இந்த மாநிலங்களில் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு பாகிஸ்தானுக்கு பெரிய ராணுவ இலக்கு கிடையாது. எனவே தென் மாநிலங்களை தாக்குவது அவர்களுக்கு தேவையில்லாத வேலை.
மீறி தாக்கினாலும், வரும் ஏவுகணையை இடைமறித்து தாக்கும் தொழில்நுட்பம் தென் மாநிலங்களில் இருக்கிறது. எனவே தேவையற்ற அச்சம் வேண்டாம்.
ஆனால் தீவிரவாதிகள் மூலம் நாசகர வேலையை செய்ய பாகிஸ்தான் துணியும். ரயில்/பேருந்து/விமான நிலையங்களில், மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் தீவிரவாத தாக்குதல் நடத்த முயற்சிக்கலாம். ஆனால் இதற்கான தடுப்பு நடவடிக்கைகளை இந்தியா திறம்பட மேற்கொண்டிருக்கிறது. அதாவது, விமான நிலையங்களுக்கு வரும் பயணிகளுக்கு இரட்டிப்பு பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்திருக்கிறது. மட்டுமல்லாது விமான நிலையங்களுக்குள் பயணிகளுடன் வரும் உறவினர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது.
மேலும் ஏர் மார்ஷல் எனும் பாதுகாப்பு அம்சத்தை ஆக்டிவேட் செய்திருக்கிறது. பயணிகள் விமான நிலையத்தில், பயணிகளுடன் பயணிகளாக அதிகாரிகள் பயணிப்பார்கள். விமான பயணத்தில் பயணிகள் யாரேனும் சந்தேகப்படும்படி இருந்தால் அவர்களை அடையாளம் கண்டு அவர்களிடம் உரிய விசாரிணையை இந்த அதிகாரிகள் மேற்கொள்வார்கள். விமான கடத்தல் போன்றவை முறியடிக்கப்படும்.
அதேபோல ரயில் மற்றும் பேருந்து முனையங்களில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டு இருக்கிறது. உளவுத்துறை முழு வேகத்தில் களமிறக்கப்பட்டு இருக்கிறது. எனவே பயங்கரவாத தாக்குதலுக்கான வாய்ப்புகள் இல்லை என்றே சொல்லலாம்.
பாகிஸ்தானுக்கு இருக்கும் மூன்றாவது வாய்ப்பு அரபிக்கடல் வழியை பயன்படுத்தி பயங்கரவாதிகளை ஊடுருவ செய்வது. ஆனால் இதற்கான வாய்ப்புகள் ஜீரோ என்றுதான் சொல்ல வேண்டும். ஏனெனில் இந்திய கடற்படை முழு விழிப்புடன் இருக்கிறது. இதை தாண்டி உள்ளே வருவது என்பது சாத்தியமே இல்லை. அப்படி நடந்தாலும் கடலோர காவல்படையினரிடம் சிக்கிக்கொள்வார்கள். எனவே இதற்கான சான்ஸும் இல்லை.
ஆகவே எப்படி பார்த்தாலும் தென் மாநிலங்கள் மீது தாக்குதல் நடத்த வாய்ப்பில்லை.இதற்கு முன்னரும் தாக்குதல் நடத்தியதில்லை என்று சர்வதேச அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.












Click it and Unblock the Notifications