சசிகாந்த் செந்தில் “மேஜிக்”.. கர்நாடகாபோல் ராஜஸ்தானில் காங்கிரஸுக்கு “கை” கொடுக்குமா ராஜதந்திரம்?
டெல்லி: கர்நாடகா தேர்தலில் காங்கிரஸ் வெற்றிக்கு பெரும் பங்காற்றிய ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி சசிகாந்த் செந்தில், ராஜஸ்தான் தேர்தல் முடிவுகள் தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டு உள்ளார்.
கடந்த அக்டோபர் மாதம் ராஜஸ்தான், தெலுங்கானா, மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் தேதியை இந்திய தலைமை தேர்தல் ஆணையம்அறிவித்தது. அதன்படி கடந்த நவம்பர் 25 ஆம் தேதி ராஜஸ்தான் மாநிலத்தில் வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. டிசம்பர் 3 ஆம் தேதியான இன்று வாக்குகள் எண்ணப்பட்டு முன்னிலை நிலவரங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. காங்கிரஸ் கட்சி இந்த தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சியை தக்க வைக்க பல்வேறு முக்கிய முடிவுகளை எடுத்தது.

குறிப்பாக தேர்தல் அறிவிப்பதற்கு முன்பாகவே காங்கிரஸ் கட்சியும் தேர்தல் பொறுப்பாளர்களை நியமித்தது. ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தேர்தல் பார்வையாளராக மதுசுதன் மிஸ்திரியை நியமித்தது அந்த கட்சி. அவருடன் தமிழ்நாட்டை சேர்ந்த ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி சசிகாந்த் செந்திலை தேர்தல் பார்வையாளராக அறிவித்தது. இவர்தான் கர்நாடக மாநில தேர்தலில் அக்கட்சியின் சமூக வலைதள தேர்தல் பிரச்சாரங்களில் பல்வேறு வியூகங்களை வகுத்து, வதந்திகளை முறியடித்தார்.
கடந்த 2019 ஆம் ஆண்டு மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்தச் சட்டம், என்.ஆர்.சி, என்.பி.ஆருக்கு எதிர்ப்பு தெரிவித்து தான் வகித்த ஐஏஎஸ் பதவியை விட்டே விலகினார் சசிகாந்த் செந்தில். தொடர்ந்து மக்கள் நடத்திய போராட்டங்களில் பங்கெடுத்த அவர், காங்கிரஸ் கட்சியில் இணைந்து தொலைக்காட்சி விவாத நிகழ்வுகளில் பங்கேற்று வந்தார். கர்நாடகா தேர்தல் களத்தில்தான் இவரது முழு திறமையை உலகம் கண்டுகொண்டது.
கர்நாடக மாநில சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வார் ரூம் தலைவராக நியமிக்கப்பட்டார் சசிகாந்த் செந்தில். கர்நாடக தேர்தலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய #CryPMPayCM, #PayCM போன்ற ஹேஷ்டேக்குகளை உருவாக்கி பாஜக அரசின் 40 சதவீத கமிஷனை அம்பலப்படுத்தியது இவர் தலைமையிலான அணிதான். இந்த நிலையில், காங்கிரஸின் மூத்த தேர்தல் பொறுப்பாளர் மிஸ்திரிக்கு துணையாக, ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தேர்தல் பார்வையாளராக சசிகாந்த் செந்தில் பல்வேறு நகர்வுகளை மேற்கொண்டார்.
தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில் எக்ஸ் சமூக வலைதளத்தில் அது குறித்து பதிவிட்ட சசிகாந்த் செந்தில், "பணம், வெறுப்பு பிரச்சாரம் மூலம் வாக்குகளை வாங்க முடியும் என்ற புணைவு ராஜஸ்தானில் தகர்க்கப்பட்டு இருக்கிறது. வரலாறு ராஜஸ்தானில் படைக்கப்படும். இன்ப அதிர்ச்சிக்கு காத்திருங்கள். 2024 ஆம் ஆண்டுக்கான ஆட்டத்தில் பாஜக மேம்படுத்திக்கொள்ளட்டும். இந்திய மக்களுக்கே நீங்கள் வலிமையான எதிரியாக எதிராக உள்ளீர்கள்." என்று குறிப்பிட்டு இருந்தார். தற்போது தபால் வாக்குகள் முடிவில் பாஜக முன்னிலையில் இருந்து வருகிறது. அடுத்தடுத்த சுற்று வாக்கு எண்ணிக்கையில் சசிகாந்த் சொன்னதுபோல் நிலைமாறு மாறுமா அல்லது பாஜக ஆட்சியை பிடிக்குமா என்று பார்ப்போம்.
-
“திமுக கூட்டணியில்தான் தொடர்கிறோம்.. தவெக அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு”.. CPI வீரபாண்டியன் உறுதி! -
தவெக - காங்கிரஸ் கூட்டணிக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.. முத்தரசன் சொன்ன வார்த்தை! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல..பெட்டியை கட்டும் செல்வப் பெருந்தகை! பதவிக்கு போட்டி போடும் பெரும் தலைகள் -
மேகதாதுவால் வெடித்தது அடுத்த போர்! கதி கலங்கி நிற்கும் காங்கிரஸ்.. டெல்லி வரை போன மேட்டர்! -
திமுக ஆப்சென்ட்.. இந்தியா கூட்டணி கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பது உறுதி! காங். சொன்ன மேட்டர் -
சொந்த தொகுதியில் டெபாசிட் வாங்க முடியல! எங்களை விமர்சிப்பதா? ஒரே காமெடி! சீமானுக்கு காங்கிரஸ் பதிலடி -
திமுக சொல்வது பொய்.. தலைமையிடம் சொல்லிவிட்டு தான் தவெகவுடன் சேர்ந்தோம் - உடைத்து பேசிய ப சிதம்பரம் -
டிகே சிவக்குமாருக்கு அடுத்த ஷாக்.. ராமலிங்க ரெட்டியை தொடர்ந்து இன்னொரு அமைச்சர் ராஜினாமா? கர்நாடகாவில் குழப்பம் -
வாட்ஸ்அப்பில் வந்த முத்தலாக்'.. குவைத்தில் இருந்து ராஜஸ்தான் பெண்ணுக்கு ஷாக் கொடுத்த கணவர் -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி!











Click it and Unblock the Notifications