சமையல் கியாஸ் சிலிண்டர் விலை குறைகிறதா? நாளை வெளியாகுது முக்கிய அறிவிப்பு.. பொதுமக்கள் எதிர்பார்ப்பு
டெல்லி: சமையல் எரிவாயு விலை மாதம் தோறும் மாற்றியமைக்கப்படுகிறது. அந்த வகையில் நாளை (டிசம்பர் 1) காலை சிலிண்டர் விலை குறித்து எண்ணெய் நிறுவனங்கள் அறிவிப்பு வெளியிட உள்ளன. இதனால், சிலிண்டர் விலை குறையுமா? என்ற எதிர்பார்ப்பு பொதுமக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
இந்தியாவில் சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் மற்றும் கியாஸ் சிலிண்டர் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. பெட்ரோல், டீசல் விலை தினமும், சிலிண்டர் விலை மாதம் தோறும் மாற்றியமைக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் ஒவ்வொரு மாதமும் முதல் நாளில் கச்சா எண்ணைய் நிலவரத்தை எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டு வருகின்றன.

கடந்த இரு மாதங்களாக வணிக பயன்பாட்டுக்கான 19 கிலோ கியாஸ் சிலிண்டர் விலை அதிகரித்து வந்தது. அதற்கு முன்பாக கடந்த மார்ச் மாதம் முதல் ஜூன் மாதம் வரை குறைந்து வந்த நிலையில், அதன் பிறகு விலை உயர்ந்தது. அதாவது, கடந்த ஆகஸ்டு மாதம் 7 ரூபாய் 50 காசும், செப்டம்பர் மாதம் ரூ.38, அக்டோபர் மாதம் ரூ.48 , நவம்பர் மாதத்தில் ரூ.60 என தொடச்சியாக விலை உயர்ந்தது.
இதனால், வர்த்தகர்கள் அதிர்ச்சி அடைதனர். தற்போதைய நிலவரப்படி, வணிக பயன்பாடு சிலிண்டர் விலை சென்னையில் 1,964 ரூபாய் 50 காசுக்கு விற்பனை செய்யப்பட்டது. வீட்டு உபயோக சிலிண்டர் விலை கடந்த சில மாதங்களாக எந்த மாற்றமும் இன்றி உள்ளது. தற்போதைய நிலவரப்படி, எல்பிஜி (வீட்டு உபயோகத்துக்கான) சிலிண்டர் விலையை பொறுத்தவரை ரூ.818.50 ஆக உள்ளது.
கடந்த மார்ச் மாதம் மத்திய அரசு ரூ.100 குறைத்து அறிவித்தது. அதன்பிறகு விலையில் பெரிய அளவில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. சர்வதேச சந்தையிலும் விலை குறைந்தாலும் அதன் பயனை நுகர்வோர்களுக்கு கடத்தவில்லை. இந்த நிலையில்தான் தற்போது சமையல் எரிவாயு சிலிண்டர் விலை குறையுமா? என்ற எதிர்பார்ப்பு பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ளது. நாளை (டிசம்பர் 1) காலை அறிவிப்பு வெளியாக உள்ளது. காலை 6 முதல் 7 மணிக்குள் அறிவிப்பு வெளியாகக் கூடும்.
-
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு!












Click it and Unblock the Notifications