வாட் வரியை குறைக்காமல்.. பெட்ரோல், டீசல் விலை குறித்து எதிர்க்கட்சிகளை சாடிய மத்திய அமைச்சர் ஹர்தீப்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பெட்ரோல், டீசல் விலையை குறைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகவும் இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் எனவும் கடந்த சில தினங்களாக செய்திகள் பரவி வரும் நிலையில், இது குறித்து மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி பதில் அளித்துள்ளார்.

இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்துக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப பெட்ரோல், டீசல் விலையை தினம் தோறும் எண்ணெய் நிறுவனங்கள் மாற்றி அமைத்து வந்தன. அந்த வகையில் பெட்ரோல், டீசல் விலையில் தினமும் மாற்றம் இருக்கும்.

குறிப்பாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரிக்கும் போது அதன் தாக்கத்தை அப்படியே வாகன ஓட்டிகள் மீது போடுவதாகவும் ஆனால் விலை குறையும் போது அந்த சலுகையை காட்டுவது இல்லை என்பதும் பொதுமக்களின் குற்றச்சாட்டாக இருந்தது. குறிப்பாக கடந்த ஆண்டு துவக்கத்தில் பெட்ரோல், டீசல் விலை தாறுமாறாக உயர்ந்தது.

இதனால் பண வீக்கமும் அதிகரித்தது. தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை அதிகரித்ததால், மக்கள் இடையே இது கடுமையான விமர்சனங்களை சந்தித்தது. இதையடுத்து பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டது. அதாவது பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு கடந்த ஆண்டு மே மாதம் அதிரடியாக குறைத்து அறிவிப்பு வெளியிட்டது.

பெட்ரோல் மீதான கலால் வரியை 8 ரூபாயும், டீசல் மீதான கலால் வரியை 6 ரூபாயும் மத்திய அரசு குறைத்துள்ளது. இதன் மூலம் டீசல் விலை லிட்டருக்கு ரூ.7 குறைக்கப்பட்டது. இதனால் பெட்ரோல் ரூ.9.50, டீசல் ரூ.7 விலை குறைந்தது. அதன்பிறகு ஒரு வருடத்திற்கு மேலாகியும் பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை. சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 102 ரூபாய் 63 காசுகளுக்கும், டீசல் ஒரு லிட்டர் 94 ரூபாய் 24 காசுகளுக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Will the price of petrol and diesel be reduced? Union Petroleum Minister Hardeep Singh Puri replied

இந்த நிலையில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ள நிலையில், பெட்ரோல், டீசல் விலையை குறைக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு வாகன ஓட்டிகள் மத்தியில் எழுந்துள்ளது. குறிப்பாக 2022-23ம் நிதியாண்டின் 4வது காலாண்டில் எண்ணெய் நிறுவனங்கள் அதிக லாபம் ஈட்டியதால் பெட்ரோல், டீசல் விலை விரைவில் குறைக்கப்படும் என எதிர்பார்ப்பு எழுந்தது.

இந்த நிலையில், இன்று டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரியிடம் இது குறித்து செய்தியாளர்கள் கேள்வியை முன்வைத்தனர். இதற்கு பதிலளித்த ஹர்தீப் சிங் பூரி, பெட்ரோல், டீசல் விலையை குறைக்கும் விவகாரத்தை கையாளும் பொறுப்பு எண்ணெய் நிறுவனங்களை சார்ந்தது.

Will the price of petrol and diesel be reduced? Union Petroleum Minister Hardeep Singh Puri replied

இந்த விவகாரம் தொடர்பாக நான் எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிட முடியாது. எண்ணெய் நிறுவனங்கள் தங்களுக்கு ஏற்பட்ட சில இழப்புகளை ஈடுகட்டியுள்ளது. எண்ணெய் நிறுவனங்கள் சிறந்த கர்ப்பரேட் சிட்டிசன்கள். போகப்போக அடுத்து என்ன செய்ய முடியும் என்று பார்ப்போம்" என்று கூறினார்.

மேலும் பாஜக ஆளாத மாநிலங்களில் பெட்ரோல்,டீசல் விலை அதிகம் உள்ளதாக விமர்சித்த ஹர்தீப் சிங் பூரி, வாட் வரியை குறைக்காமல் பாஜக ஆளும் மாநிலங்களை விட அதிக விலைக்கு பெட்ரோல், டீசல் விலையை விற்பனை செய்யும் மாநில அரசுகள் தான் அதன் விலை குறித்தும் அதிகம் பேசுகின்றன" என்று சாடினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+