ஆம் ஆத்மியை அழிக்க முடியாது.. பாஜகவுக்கு எதிராக நாடு முழுக்க பிரச்சாரம் செய்வேன்- கெஜ்ரிவால் சூளுரை
டெல்லி: ஆம் ஆத்மியை அழிக்க நினைத்தால் அது முடியாது என்று குறிப்பிட்ட கெஜ்ரிவால், நாடு முழுக்க பாஜகவுக்கு எதிராகப் பிரச்சாரம் செய்ய உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் ஆம் ஆத்மி அரசு கொண்டு வந்த புதிய மதுபான கொள்கையில் முறைகேடு நடந்ததாகப் புகார்கள் எழுந்தன. இது தொடர்பாக டெல்லி துணைநிலை ஆளுநரிடம் பாஜகவினர் புகார் அளித்த நிலையில், அவர் விசாரணைக்கு உத்தரவிட்டார்.

இந்த வழக்கில் அமலாக்க துறை ஆம் ஆத்மியின் முக்கிய தலைவர்கள் பலரைக் கைது செய்தது. குறிப்பாக டெல்லி துணை முதல்வராக இருந்த மணிஷ் சிசோடியா இந்த வழக்கில் பல மாதங்களாகச் சிறையில் உள்ளார். இந்த வழக்கில் டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலும் மார்ச் மாதம் கைதானார்.
இந்தச் சூழலில் லோக்சபா தேர்தலில் பிரச்சாரம் செய்ய ஜாமீன் கோரி கெஜ்ரிவால் சுப்ரீம் கோர்ட்டில் மனுத் தாக்கல் செய்தார். கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்க அமலாக்க துறை கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இருப்பினும், உச்ச நீதிமன்றம் கெஜ்ரிவாலுக்கு நேற்று இடைக்கால ஜாமீன் வழங்கியது. வரும் ஜூன் 1ஆம் தேதி வரை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. நேற்று மாலை திகார் சிறையில் இருந்து வெளியே வந்த கெஜ்ரிவால் தனது தொண்டர்களிடையே உரையாற்றினார்.
தொடர்ந்து இன்று அவர் கன்னாட் பிளேஸில் உள்ள ஹனுமான் கோயிலுக்குச் சென்றார். அங்கு அவர் தனது மனைவி சுனிதாவுடன் சாமி தரிசனம் செய்தார்.. தொடர்ந்து அவரது கட்சி அலுவலகத்திற்குச் சென்ற கெஜ்ரிவால் அங்குத் திரண்டிருந்த தொண்டர்கள் மத்தியில் உரையாற்றினார். தனக்கு ஆதரவாக இருந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்த கெஜ்ரிவால், ஆம் ஆத்மியை யாராலும் அழிக்க முடியாது என்றார்.
அந்தக் கூட்டத்தில் பேசிய அவர், "எங்களை சிறைக்கு அனுப்பிவிட்டு, நீங்கள் வெற்றி பெற முடியாது.. ஊழலுக்கு எதிரான போராட்டத்தை நாங்கள் தொடங்கி உள்ளோம்.. பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசின் ஊழல்களை அம்பலப்படுத்துவோம்.. பாஜக ஆளும் மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் நடந்த ஊழலை யாராலும் மறைக்க முடியாது.
எல்லா கட்சிகளையும் அழித்துவிட பாஜக நினைக்கிறது.. ஆம் ஆத்மி கட்சியை அழிக்க முடியாது என்பதற்கு இங்குத் திரண்டுள்ள தொண்டர்களே சாட்சி.. ஜனநாயகத்தை அழிக்க பாஜக நினைக்கிறது.. 140 கோடி மக்களை ஏமாற்ற பாஜகவால் முடியாது.. பாஜகவுக்கு எதிராக நாடு முழுக்க பிரச்சாரம் செய்ய உள்ளேன்" என்று அவர் பேசினார்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications