பணிந்தது பாகிஸ்தான்.. அபிநந்தன் நாளை விடுவிக்கப்படுகிறார்- பிரதமர் இம்ரான் கான் அறிவிப்பு
Recommended Video

இஸ்லாமாபாத்: இந்திய விமானப் படை விங் கமாண்டர் அபிநந்தன் நாளை விடுவிக்கப்படுகிறார் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார். அபிநந்தன் வாகா எல்லையில் இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைப்படுவதாகவும் இம்ரான் அறிவித்துள்ளார்.
பாகிஸ்தான் வசம் சிக்கியுள்ள தமிழக விமானப் படை விங் கமாண்டர் அபிநந்தனை விரைவில் மீட்குமாறு அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனர்.
அவரை ஒப்படைக்குமாறு இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதரிடம் இந்தியா மீண்டும் மீண்டும் கோரிக்கை விடுத்து வந்தது. பல்வேறு சர்வதேச நாடுகளும் களம் இறங்கியிருந்தன.
[Read more: அபிநந்தன் விடுதலை என இம்ரான் கான் அறிவித்ததும்.. நாடாளுமன்றத்தில் நடந்தது இதுதான்- வீடியோ]

நம்பிக்கை
ஜெனீவா விதிகளை மீறி அபிநந்தன் விவகாரத்தில் பாகிஸ்தான் நடந்து கொண்டுள்ளதாக இந்தியா குற்றம் சாட்டியது. இந்த நிலையில் இந்தியா- பாகிஸ்தான் இடையே நிலவும் பதற்றம் தணியும் என்றும் இரு நாடுகளுக்கிடையே ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு விரைவில் தீர்வு ஏற்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் ஹோனோயில் உள்ள மாநாட்டில் நம்பிக்கை தெரிவித்திருந்தார்.

தெரியவில்லை
மேலும் அபிநந்தனை விடுவிக்குமாறு அமெரிக்கா, பிரான்ஸ், ஜப்பான், சவுதி அரேபியா ஆகிய நாடுகள் அழுத்தம் கொடுத்து வந்தன. இது குறித்து அமெரிக்க தூதரிடம் பாகிஸ்தான் கூறுகையில், விரைவில் அபிநந்தனை விடுவிப்போம் என்றனர். இந்த நிலையில்தான் தற்போது விடுதலை அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பாதுகாப்பு
முன்னதாக பாகிஸ்தானின் டான் பத்திரிகையில் அபிநந்தன் விவகாரம் குறித்து குறிப்பிடப்பட்டிருந்தது. அதில் அபிநந்தன் ஆரோக்கியமாகவும் பாதுகாப்பாகவும் உள்ளார். அவர் விவகாரம் குறித்து ஓரிரு நாட்களில் முடிவு எடுக்கப்படும்.

பதற்றம் தணியட்டும்
ஜெனிவா ஒப்பந்தபடி அபிநந்தனை போர் கைதியாக கருதலாமா வேண்டாமா என்பது குறித்து முடிவெடுக்கப்படும் என பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளதாக அந்த பத்திரிகையில் குறிப்பிட்டிருந்தது. அது போல் பதற்றம் தணிந்தவுடன் அபிநந்தனை திருப்பி அனுப்புவதாக பாகிஸ்தான் வெளியுறவு துறை அமைச்சர் ஷான் மெமூத் குரேஷி உறுதியளித்திருந்தார்.

அறிவிப்பு
பிரதமர் மோடியுடன் தொலைபேசியில் கூட பேச்சுவார்த்தை நடத்த பாகிஸ்தானழ் பிரதமர் இம்ரான் கான் தயார் நிலையில் இருந்தார். இந்த நிலையில் அபிநந்தனை நாளை விடுவிக்கப்படுவதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் நல்லெண்ண நடவடிக்கையின் பேரில், எந்தவித நிபந்தனையுமின்றி அபிநந்தனை நாளை விடுவிக்க தயாராக உள்ளோம். நாங்கள் சமாதானத்தை விரும்புகிறோம். இரு நாடுகளுக்கும் இடையே அமைதி நிலவ வேண்டும் என இம்ரான் கான் அறிவித்துள்ளார். உலக நாடுகள் அழுத்தத்தின் காரணமாக பாகிஸ்தான் பணிந்து அபிநந்தனை விடுவிக்க முன்வந்துள்ளது பாகிஸ்தான்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications