பாகிஸ்தான் சொன்னது.. அதனால்தான் செய்தோம்... காஷ்மீர் விவகாரம் குறித்து சீனா அறிக்கை!
பாகிஸ்தான் கோரிக்கையை அடுத்து நாங்கள் காஷ்மீர் பிரச்சனையை ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் எழுப்பினோம் என்று சீனா தெரிவித்துள்ளது.
டெல்லி: பாகிஸ்தான் கோரிக்கையை அடுத்து நாங்கள் காஷ்மீர் பிரச்சனையை ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் எழுப்பினோம் என்று சீனா தெரிவித்துள்ளது.
ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவை மத்திய அரசு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நீக்கியது. காஷ்மீர் பிரச்சனையை ஐநாவின் பாதுகாப்பு கவுன்சிலில் எழுப்புவதற்கு சீனா மூலம் பாகிஸ்தான் தொடர்ந்து முயன்று கொண்டு வருகிறது.
நேற்று முதல்நாள் ஐநாவின் பாதுகாப்பு கவுன்சிலில் சீனா காஷ்மீர் பிரச்சனையை எழுப்பியது. பாகிஸ்தானின் அழுத்தத்தின் பெயரில் சீனா இதை செய்தது. காஷ்மீர் குறித்து ஐநாவின் பாதுகாப்பு கவுன்சிலில் உள்ள உறுப்பு நாடுகள் தனிப்பட்ட விவாதம் நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தது.

தோல்வியில் முடிந்தது
ஆனால் ஐநாவின் பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பு நாடுகளான பிரான்ஸ், ரஷ்யா, அமெரிக்கா, பிரிட்டன் ஆகிய நாடுகள் இதை ஏற்கவில்லை. இது இரண்டு நாட்டு பிரச்சனை, அவர்கள்தான் இதை பேசி தீர்க்க வேண்டும் என்று ஐநாவின் பாதுகாப்பு கவுன்சில் கூறிவிட்டது.

என்ன தவறு
இது தொடர்பாக இந்திய வெளியுறவுத்துறையின் செய்தி தொடர்பாளர் ரவீஷ் குமார் அளித்த பேட்டியில், சீனா மூலம் காஷ்மீர் பிரச்சனையை ஐநாவின் பாதுகாப்பு கவுன்சிலில் எழுப்ப நினைப்பது பாகிஸ்தானின் தவறு ஆகும். இது போன்ற செயல்களை செய்யாமல், சீனாவும் தவிர்க்க வேண்டும் என்று சீனாவிற்கு எதிராக கடுமையாக பேசினார்.

சீனா பதில்
இந்தியாவின் இந்த கருத்துக்கு சீனா தற்போது பதில் அளித்துள்ளது. அதில், காஷ்மீர் விவகாரத்தில் சீனாவின் நிலைப்பாடு நிலையானது. தெளிவானது. வரலாற்று ரீதியாக தீர்க்கப்படாமல் இருக்கும் பிரச்சனையாகும் இது. இதை முறையாக பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க வேண்டும்.

என்ன தீர்வு
ஐநாவின் விதிப்படி முறையாக பாதுகாப்பு கவுன்சிலில் தீர்மானம் மூலமும், இரண்டு நாட்டு பேச்சுவார்த்தை மூலமும் இதை தீர்க்க விடும். பாகிஸ்தான் கோரிக்கையை அடுத்து நாங்கள் காஷ்மீர் பிரச்சனையை ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் எழுப்பினோம். ஜனவரி 15ம் தேதி ஐநா கவுன்சிலில் இதை எழுப்பினோம்.

காஷ்மீர் எப்படி
காஷ்மீர் பிரச்சனை குறித்து ஐநா பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினர்கள் கவனம் செலுத்தினார்கள். காஷ்மீரின் தற்போதைய நிலை குறித்து அவர்கள் விசாரித்தனர். அதேபோல் சர்வதேச விதிகள், ஐநா விதிகள், பேச்சுவார்த்தை மூலம் இதற்கு தீர்வு காண அவர்கள் அழைப்பு விடுத்தனர், என்று சீனா கூறியுள்ளது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications