அந்த 4 ரா உளவாளிகள்.. மோடிக்கு தெரியாமல் நடந்த அதிரடி.. ராஜபக்சேவுக்காக செய்த ஆபரேஷன்!
இலங்கையின் பிரதமராக ராஜபக்சே பதவி ஏற்பதற்கு பின் இந்திய உளவு அமைப்பான ராவின் வேலை இருக்கிறது என்று சர்ச்சை எழுந்துள்ளது.
டெல்லி: இலங்கையின் பிரதமராக ராஜபக்சே பதவி ஏற்பதற்கு பின் இந்திய உளவு அமைப்பான ராவின் வேலை இருக்கிறது என்று சர்ச்சை எழுந்துள்ளது.
இலங்கையின் அதிபர் மைத்ரிபால சிறிசேனா, மகிந்த ராஜபக்சேவை பிரதமராக அறிவித்துள்ளார். ரணில் விக்ரம சிங்கே அங்கு பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் இந்த அதிரடி மாற்றத்துக்கு நிறைய காரணம் சொல்லப்பட்டது. இந்திய உளவு அமைப்பின் ரா இதற்கு பின் நிறைய வேலைகளை பார்த்து இருப்பதாக தகவல்கள் வருகிறது.

கொலை முயற்சியா
இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனாவை இந்தியா கொலை செய்ய முயற்சி செய்வதாக இலங்கை அரசு கடந்த வாரம் குற்றச்சாட்டு வைத்தது. இந்தியாவின் உளவு அமைப்பான ரா அமைப்பு, அதிபர் மைத்ரிபால சிறிசேனாவை கொல்ல திட்டமிட்டது என்று குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. இது உலக நாடுகள் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மோடிக்கு தெரியாமல்
ஆனால் மோடிக்கு இது தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்றும் விளக்கம் அளிக்கப்பட்டது. இந்த நிலையில் இலங்கையில் பிரதமர் பொறுப்பில் ராஜபக்சே பதவி ஏற்பதற்கு பின்பும் ரா அமைப்புதான் இருக்கிறது என்று குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. இந்திய பிரதமர் மோடிக்கு தெரியாமல் ரா நடத்திய அதிரடி வேலைதான் இந்த பதவி மாற்றம் என்று கூறப்படுகிறது.

ரா மூலம் நடக்கும் வேலை
ஏற்கனவே இலங்கையில் அதிபரின் அமைச்சரவையில் 4 ரா உளவாளிகள் இருக்கிறார்கள் என்று குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. இந்த 4 ரா உளவாளிகள் செய்த அதிரடி வேலைதான் இது என்று கூட பேசிக்கொள்கிறார்கள். ஆனால் இது மோடிக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்றும் தகவல்கள் வருகிறது.

யார் இயக்குவது
பிரதமர் மோடிக்கு தெரியாமல் அண்டை நாட்டில் இப்படி ஒரு பெரிய அரசியல் மாற்றம் நடப்பது ஏன் என்று கேள்வி எழுந்துள்ளது. மேலும் ராவை வைத்து இப்படிப்பட்ட பணிகளை செய்வது யார், இவர்களுக்கு பின் இருப்பது யார் என்று கேள்வி எழுந்துள்ளது. இரண்டு நாடுகளின் உறவில் இது பெரிய குழப்பத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications