Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

40 நொடிகளில் 8 முறை.. தெரு நாய்களுக்கு உணவு வைத்த பெண் மீது சரமாரி தாக்குதல்! ஷாக் சம்பவம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: கடந்த வாரம் தான் தெருநாய்கள் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பை அளித்திருந்தது. இதற்கிடையே தெரு நாய்க்கு உணவளிக்கும் விவகாரத்தில் இளம்பெண் ஒருவர் தாக்கப்பட்டுள்ளார். ஆசாமி ஒருவர் வெறும் 40 நொடிகளில் அப்பெண்ணை 8 முறை அறைந்துள்ளார். இந்தச் சம்பவத்தின் வீடியோ வெளியாகி பகீர் கிளப்பியுள்ளது.

தெருநாய் பிரச்சினை தொடர்பாக உச்ச நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டிருந்தது. அதில் தெருநாய்களைப் பிடித்து கருத்தடை செய்து மீண்டும் அவற்றைச் சாலையிலேயே விட நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், தெருநாய்களுக்குக் குறிப்பிட்ட உணவளிக்கும் இடங்களில் மட்டுமே உணவு தர வேண்டும் என்றும் பொது இடங்களில் உணவு தரக்கூடாது என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

Woman Brutally Slapped 8 Times in 40 Seconds by Resident for Feeding Stray Dogs at Designated Spot

40 நொடிகளில் சரமாரி தாக்குதல்

இதற்கிடையே தேசிய தலைநகர் பகுதியிலுள்ள ஒரு அடுக்குமாடிக் குடியிருப்புக்கு அருகில் நாய்களுக்கு உணவளித்த பெண்ணை, ஒருவர் சரமாரியாகத் தாக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி பகீர் கிளப்பியுள்ளது. அந்த நபர் சுமார் 40 வினாடிகளுக்குள் எட்டு முறை அறைந்துள்ளார். இச்சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காசியாபாத்தைச் சேர்ந்த யஷிகா சுக்லா என்ற பெண், வெள்ளிக்கிழமை இரவு நாய்களுக்கு உணவளித்துக் கொண்டிருந்தபோது இந்தச் சம்பவம் நடந்துள்ளது. விஜய்நகரில் உள்ள பிரம்மபுத்திரா என்கிளேவ் சொசைட்டியைச் சேர்ந்த கமல் கண்ணா என்பவர் தன்னைத் தொடர்ந்து அறைந்ததாக யஷிகா சுக்லா குற்றம்சாட்டினார்.

பொது இடம் இல்லை

மேலும், உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு இணங்கத் தான் நாய்களுக்கு உணவளிக்கப் பிரத்தியேகமாக இருக்கும் இடத்தில் மட்டுமே உணவளித்ததாகவும் ஆனாலும் அவர் தேவையில்லாமல் பிரச்சினை செய்ததாகவும் அப்பெண் கூறுகிறார். அருகே இருந்த ஒருவர் இந்தத் தாக்குதலை வீடியோவாக எடுத்துள்ளார். அந்த வீடியோ இப்போது சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

பகீர் வீடியோ

அதில் யாஷிகா, "வீடியோ எடுங்க... அவர் என்னை அடிக்கிறார்" என்று கத்துகிறார். இருப்பினும், தொடர்ந்து தாக்கும் அந்த நபர், "ஆம், இதை வீடியாவாக எடுத்துக் கொள்" என்று திமிராகச் சொல்வதும் கேட்கிறது. வீடியோவில் ஆசாமி 38 நொடிகளில் எட்டு முறை அறைவது பதிவாகியுள்ளது. ஒரு கட்டத்தில் அந்தப் பெண்தான் முதலில் தன்னைத் தாக்கியதாகவும் கமல் கண்ணா கூறுகிறார்.

இந்தச் சம்பவம் குறித்த வீடியோ இணையத்தில் பரவி பகீர் கிளப்பியுள்ளது. இது தொடர்பாகப் பெண் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், கமல் கண்ணாவை கைது செய்துள்ளனர்.

உச்ச நீதிமன்றத் தீர்ப்பு

உச்ச நீதிமன்றம் கடந்த வெள்ளிக்கிழமை தனது முந்தைய உத்தரவை மாற்றியமைத்தது. அதாவது முன்பு அனைத்து நாய்களையும் எட்டு வாரங்களுக்குள் பிடித்து, காப்பகங்களில் அடைக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டிருந்தது. ஆனால், இது தொடர்பாக மேல்முறையீடு செய்யப்பட்ட நிலையில், அதில் கடந்த வெள்ளிக்கிழமை நீதிமன்றம் உத்தரவை மாற்றி அமைத்தது.

அதில் ரேபீஸ் இருப்பதாகச் சந்தேகிக்கப்பட்டாலோ அல்லது ஆக்ரோஷமான நாய்களை மட்டுமே தெருவில் விடக்கூடாது என தெரிவிக்கப்பட்டது. மற்ற நாய்களைத் தடுப்பூசி போட்டு கருத்தடை செய்து மீண்டும் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.. மேலும், தெருநாய்களுக்கு பொது இடங்களில் உணவளிக்கத் தடை விதித்த நீதிமன்றம், இதற்கான பிரத்தியேக இடங்களில் மட்டுமே உணவளிக்க வேண்டும் என்றும் இந்த இடங்களை உள்ளாட்சி அமைப்புகள் ஏற்படுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

தவறு

டெல்லி தாக்குதல் சம்பவத்தில் அப்பெண் பிரத்தியேகமாக உணவளிக்க இருக்கும் இடத்திலேயே சாப்பாடு வைத்ததாகக் கூறுகிறார். அப்படி வைத்திருந்தால் அதில் தவறு இல்லை. ஒருவேளை அப்பெண் பொது இடத்தில் சாப்பாடு வைத்திருந்தாலும் கூட அதைப் போலீசில் புகாரளிக்க வேண்டுமே தவிர இதுபோல தாக்குதல் நடத்தியிருக்கக்கூடாது என நெட்டிசன்கள் பதிவிட்டு வருகிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+