டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

10 வயது மகனுடன் ஆபாச நடனம் ஆடிய தாய்.. இன்ஸ்டா போஸ்ட்டால் அதிர வைத்த பெண்.. இப்படியும் ஒரு கொடுமை

Google Oneindia Tamil News

டெல்லி: 10 வயது மகனுடன் ஆபாசமாக நடனமாடி அந்த வீடியோவை சமூகவலைதளங்களில் பதிவேற்றம் செய்த பெண் மீது நடவடிக்கை எடுக்குமாறு டெல்லி மகளிர் ஆணையம் போலீஸாருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

சமூகவலைதளங்கள் எனச் சொல்லப்படும் பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம், யூடியூப் உள்ளிட்டவைகளில் தங்கள் திறமையை வெளிப்படுத்தும் செயல்களில் பலர் இறங்கியுள்ளனர்.

கொரோனாவில் இறந்தவர்களுக்கு இழப்பீடு.. ரெடியாகும் வழிகாட்டு நெறிமுறை..4 வாரம் அவகாசம் கேட்ட மத்திய அரசு கொரோனாவில் இறந்தவர்களுக்கு இழப்பீடு.. ரெடியாகும் வழிகாட்டு நெறிமுறை..4 வாரம் அவகாசம் கேட்ட மத்திய அரசு

இதன் மூலம் விரைவில் பிரபலமடைவதுடன் நிறைய பணம் சம்பாதிக்கவும் செய்கிறார்கள். இதற்காக கவர்ச்சி, சர்ச்சை, விதிமீறல் உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுகிறார்கள்.

பெண் சமூகவலைதளங்கள்

பெண் சமூகவலைதளங்கள்

அந்த வகையில் டெல்லியைச் சேர்ந்த ஒரு பெண் சமூகவலைதளங்களில் பதிவு செய்திருக்கும் வீடியோ அனைவரையும் முகம் சுளிக்க வைத்துள்ளது. 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இந்த பெண்ணின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின்தொடர்கிறார்கள்.

10 வயது சிறுவன்

10 வயது சிறுவன்

இவர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஒரு வீடியோவை பதிவிட்டிருந்தார். அதில் 10 வயது சிறுவனுடன் ஆபாசமான முறையில் நடனமாடி அதை வீடியோவாக பதிவு செய்து இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார். மேலும் அந்த பெண் நடனமாடிய சிறுவன் அவரது மகன் என கூறப்படுகிறது.

வீடியோ பதிவேற்றம்

வீடியோ பதிவேற்றம்

இந்த வீடியோ பதிவேற்றம் செய்யப்பட்ட சில நிமிடங்களிலேயே லட்சக்கணக்கானோரால் பார்க்கப்பட்டு வைரலாகி வருகிறது. தாய், மகன் என்ற வித்தியாசமின்றி இந்த பெண்ணின் நடனத்தை பார்ப்போர் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

நோட்டீஸ்

நோட்டீஸ்

பணம் சம்பாதிக்க எந்த நிலைக்கும் செல்ல தயாராகியுள்ள இது போன்ற பெண்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இதையடுத்து அந்த வீடியோவை அந்த பெண் நீக்கிவிட்டார். இந்த வீடியோ டெல்லி மகளிர் ஆணைய அதிகாரிகளுக்கு சென்றுவிட்டதால் அவர் மீது நடவடிக்கை எடுக்க டெல்லி போலீஸுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

English summary
Woman post vulgar video with her 10 years old son. Women's commission issues notice to Delhi police.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X