ச்சீ! "அந்தரங்க உறுப்பை காட்டி!" டெல்லி மெட்ரோவில் பாலியல் தொல்லை! வெலவெலத்து போன பெண்! ஷாக் சம்பவம்
டெல்லி: டெல்லியை சேர்ந்த பெண் ஒருவர், மெட்ரோ ஸ்டேஷனிலேயே தான் எதிர்கொண்ட கொடூர பாலியல் தொல்லை சம்பவத்தை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.
நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. குறிப்பாக பொது இடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லை சம்பவங்களும் நடந்தே வருகிறது.
பேருந்து, மெட்ரோ போன்ற பொது இடங்களில் கூட பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் தொல்லை சம்பவங்கள் குறித்த செய்திகள் தொடர்ந்து அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

டெல்லி மெட்ரோ
அப்படியொரு சம்பவம் தான் இப்போது டெல்லி மெட்ரோவில் நடந்துள்ளது. தனக்கு ஏற்பட்ட பாலியல் தொல்லை குறித்த தகவலை அப்பெண் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதில் என்ன கொடுமை என்றால், பொது இடத்தில் நடந்த இந்தச் சம்பவம் குறித்து அவர் இரு வேறு இடங்களில் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். இருந்த போதிலும், இருவரும் அப்பெண்ணுக்கு உதவவில்லை என்பது துரதிருஷ்டவசமானதே!

முகவரி
இந்தச் சம்பவம் குறித்து அப்பெண் தனது ட்விட்டரில், "நான் பொதுவாக ட்வீட் செய்ய மாட்டேன். ஆனால் டெல்லி மெட்ரோவில் இன்று நான் சந்தித்த அதிர்ச்சிகரமான சம்பவம் குறித்து அனைவருக்கும் தெரிய வேண்டும். இன்று மஞ்சள் லைனில் பயணம் செய்யும் போது, ஜோர் பாக் நிலையத்தில் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானேன். அந்த நபர் என்னிடம் ஒரு முகவரியைக் கேட்டார். நானும் அவருக்கு உதவினேன். ஸ்டேஷனில் டாக்ஸி புக் செய்ய பிளாட்பாரத்தில் உட்கார்ந்து கொண்டு இருந்தேன்.

பாலியல் தொல்லை
அந்த நபர் மீண்டும் ஸ்டேஷனில் என்னிடம் வந்தார். முகவரி என்னிடம் உறுதி செய்ய வந்ததாகத் தெரிவித்தார். அவர் என்னிடம் காட்டிய பைலை வாங்கி பார்த்தேன். அப்போது அவர் திடீரென தனது ஆணுறுப்பை என் முகத்தில் திணிக்க முயல்வதை நான் கவனித்தேன். இதையே அவர் மூன்று முறை செய்ய முயன்றார். இதைக் கவனித்த உடன் நான் பயந்து போனேன். அங்கிருந்த காவலர் ஒருவர் அணுகினேன். ஆனால் அவர் எனக்கு உதவ மறுத்துவிட்டார்.

சிசிடிவி
இது தொடர்பாக மேலே அலுவலகத்தில் புகார் அளிக்கச் சொன்னார். நான் அங்கும் சென்று புகார் அளித்தேன். நான் பாலியல் தொல்லை அளித்த நபரை அடையாளம் காட்ட சிசிடிவி அறைக்கு அழைத்துச் செல்லச் சொன்னேன். நான் அந்த நபரை அடையாளமும் காட்டினேன். அங்கு நடந்த ஒட்டுமொத்த சம்பவமும் சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது. இருப்பினும், அந்த நபர் வேறு ஒரு மெட்ரோ ரயிலில் ஏறிச் செல்வதும் அதில் பதிவாகி இருந்தது.

குறை கூறினர்
இதில் எதாவது நடவடிக்கை எடுக்கும்படி அவர்களிடம் கேட்டேன். தவறு செய்தவனைப் பிடிப்பதற்குப் பதிலாக, அவர்கள் என்னையே குறை கூற தொடங்கினர். அந்த இடத்திலேயே சத்தம் போட்டு இருக்க வேண்டும் என்றும் இதில் எதுவும் செய்ய முடியாது என்பது போலக் கூறினர்" என்று பதிவிட்டுள்ளார். இவரது ட்வீட் இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக டெல்லி, மெட்ரோ நிர்வாகத்தின் அலட்சியப் போக்கைப் பலரும் சாடி வருகின்றனர்.

ரயில் கார்ப்பரேஷன்
இதையடுத்து இந்தச் சம்பவம் குறித்து டெல்லி மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் கூறுகையில், "சம்பவத்தின் சரியான நேரத்தைத் தெரிவிக்கவும். இதுபோன்ற சந்தர்ப்பங்களில், பயணிகள் உடனடியாக அருகிலுள்ள மெட்ரோ ஊழியர்களிடம் விஷயத்தைத் தெரிவிக்கவும்" என்று தெரிவித்துள்ளது. இருப்பினும், தலைநகரிலேயே மெட்ரோ ஸ்டேஷனில் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகவே உள்ளதாகப் பலரும் சாடி வருகின்றனர்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications