டெல்லியில் ஷாகீன்பாக் 2.0 ஆரம்பம்.. ஜாப்ராபாத் பகுதியில் சிஏஏவுக்கு எதிராக மாஸாக குவிந்த பெண்கள்!
டெல்லி: டெல்லியில் ஷாகீன்பாக் பகுதியில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் ஜாப்ராபாத் பகுதியில் சிஏஏவுக்கு எதிராக பெண்கள் குவிந்தததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளிலிருந்து இந்தியாவுக்கு அகதிகளாக வந்த குறிப்பிட்ட 5 மதத்தினருக்கு இந்திய குடியுரிமை வழங்க வகை செய்யும் மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்தது.
இந்த மசோதா குடியுரிமை திருத்தச் சட்டமாக கடந்த ஆண்டு இரு அவைகளிலும் நிறைவேறியது.

தீர்மானம்
இதை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. வடஇந்தியாவில் இந்த போராட்டம் தீவிரமடைந்துள்ளது. உத்தரப்பிரதேசம், டெல்லி உள்ளிட்ட இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது. மேற்கு வங்கம், புதுவை, கேரளம் ஆகிய இடங்களில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என அந்தந்த மாநில முதல்வர்கள் தீர்மானம் கொண்டு வந்தனர்.

வெயில்
இந்த நிலையில் டெல்லியில் ஷாகீன்பாக், ஜாமியா மிலியா பல்கலைக்கழகத்தில் போராட்டம் தீவிரமடைந்தது. ஷாகீன்பாக்கில் கடந்த 2 மாதங்களாக பெண்களும், குழந்தைகளும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடும் வெயில், மழையை பொருட்படுத்தாமல் இந்த போராட்டம் நடைபெறுகிறது. இந்த போராட்டக் களத்தில் மர்ம நபர் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியும் போராட்டம் கைவிடப்படவில்லை.
|
இஸ்லாமிய அமைப்பு
இந்த நிலையில் தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரில் சிஏஏவை நிறைவேற்ற மாட்டோம் என தீர்மானம் நிறைவேற்றக் கோரி வண்ணாரப்பேட்டை மற்றும் தமிழகத்தின் பல இடங்களில் போராட்டம் நடத்தப்பட்டது. இதை கலைக்க போலீஸார் தடியடி நடத்தியவுடன் போராட்டம் மேலும் தீவிரமடைந்தது. தமிழக சட்டசபை நோக்கி இஸ்லாமிய அமைப்பினர் பேரணி சென்றனர்.
|
பாதுகாப்பு ஏற்பாடுகள்
இந்த நிலையில் டெல்லியில் மேலும் ஒரு இடத்தில் சிஏஏவுக்கு எதிராக போராட்டம் தொடங்கியது. ஜாப்ராபாத் மெட்ரோ ரயில் பகுதியில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை கண்டித்து பெண்கள் போராட்டத்தை தொடங்கியுள்ளது. இதையடுத்து அந்த பகுதியில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். ஷாகீன்பாக்கில் ஏற்கெனவே போராட்டம் நடத்தப்பட்டு வரும் நிலையில் ஜாப்ராபாத், ஷாகீன்பாத் 2.0வாகி வருகிறது. மெட்ரோ பகுதியிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டன.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications