ஸ்டாலின் செய்வது தவறு.. சாக்குப்போக்கு சொல்லி மகளிர் இடஒதுக்கீட்டை எதிர்க்கிறாங்க.. கிரண் ரிஜூஜூ ‘அட்டாக்'
டெல்லி: மகளிருக்கான இடஒதுக்கீடு மசோதா தொடர்பாக தமிழக முதல்வர் ஸ்டாலின், டெல்லியில் உள்ள சிலரால் தவறாக வழிநடத்தப்படுகிறார். இதனால் அவர் அரசியல் செய்கிறார். ஏதாவது சாக்குபோக்கை சொல்லி மகளிர் இடஒதுக்கீட்டை எதிர்க்க நினைக்கிறார்கள் என்று மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜூஜூ விமர்சனம் செய்தார்.
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு லோக்சபா தொகுதிகளை மறுவரையறை செய்து அதன் எண்ணிக்கையை உயர்த்த திட்டமிட்டுள்ளது. அதேபோல் நாடாளுமன்றம், சட்டசபை தேர்தல்களில் பெண்களுக்கான இடஒதுக்கீட்டை 33 சதவீதம் வரை கொண்டு வர முயற்சி மேற்கொண்டுள்ளது.

இந்நிலையில் தான் இன்று முதல் வரும் 18 ம் தேதி வரை நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் கூட்டப்பட்டுள்ளது. இங்கு மகளிருக்கான 33 சதவீத இடஒதுக்கீடு மற்றும் தொகுதி மறுவரையறை செய்வது தொடர்பான மசோதாக்கள் தாக்கல் செய்யப்படடு அதன்மீது விவாதம் நடத்தப்பட உள்ளது.
இந்த கூட்டத்தொடரின் முக்கிய நோக்கமே 2 தான். ஒன்று நாடாளுமன்றம், சட்டசபையில் மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் மசோதா நிறைவேற்றப்பட்டது. இப்படி ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட மகளிர் இடஒதுக்கீடு சட்டத்தை மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு காத்திருக்காமல் 2029 நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் அமல்படுத்தும் வகையில் சட்ட திருத்தம் கொண்டு வுரப்பட மசோதா தாக்கலாகி உள்ளது.
இரண்டாவது விஷயம் என்னவென்றால் தொகுதி மறுவரையறை மசோதா 2026. மக்கள் தொகை அதிகரிப்பைக் கணக்கில் கொண்டு, தற்போதுள்ள 543 லோக்சபா தொகுதிகளின் எண்ணிக்கை 850 ஆக உயர்த்த வேண்டும் என்பதற்கான மசோதாவாகும். இந்த 2 மசோதாக்களும் இந்திய அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் இந்த நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.
இதில் தொகுதி மறுவரையறை மசோதா 2026க்கு முதல்வர் ஸ்டாலின் உள்பட பல எதிர்க்கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தொகுதி மறுவரையறையில் தமிழ்நாடு உள்பட பிற தென்மாநிலங்களில் பிரதிநிதித்துவம் குறைக்கப்படும் என்று கூறியுள்ளார். இப்படியான சூழலில் தான் இன்று காலை 11 மணிக்கு நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற உள்ளது.
இந்நிலையில் தான், முதல்வர் ஸ்டாலினுக்கு மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜூஜூ கண்டனம் தெரிவித்துள்ளார். இதுபற்றி கிரண் ரிஜூஜூ கூறியதாவது: மகளிர் இடஒதுக்கீடு மசோதா விஷயத்தில் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின், டெல்லியில் உள்ள சிலரால் தவறாக வழிநடத்தப்படுகிறது. இதனால் அவர் அந்த விஷயத்தில் அரசியல் செய்கிறார். யாரும் பெண்களுக்கான இடஒதுக்கீட்டுக்கு யாரும் எதிராக இல்லை. ஆனால் அவர்கள் அதனை முறியடிக்க தோவது சாக்குப்போக்கை முன்வைக்க கூடும். இது செய்யக்கூடாத ஒன்றாகும்.
ஏதேனும் சாக்கப்போக்கை காட்டி பெண்களுக்ககான இடஒதுக்கீட்டை முறியடிக்க முயன்றால் அ்து துரதிர்ஷ்டவசமானது. எனவே தமிழ்நாடு அல்லது வேறு எந்த மாநிலமும் இதுபற்றி கவலைப்பட தேவையில்லை. அவர்கள் மக்களை தவறாக வழிநடத்தவோ, குழப்பவோ கூடாது. இந்தியாவின் ஒவ்வொரு மாநிலமும், ஒவ்வொரு யூனியன் பிரதேசமும் இதுபற்றி கவலை கொள்ள தேவையில்லை'' என்றார்.












Click it and Unblock the Notifications