ஆதரவாக வந்த வாக்குகளே அதிகம்.. ஆனாலும் தொகுதி மறுசீரமைப்பு மசோதா தோல்வி அடைந்தது ஏன்!
டெல்லி : மகளிர் இட ஒதுக்கீடு மற்றும் தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக மத்திய அரசு கொண்டு வந்த மிக முக்கியமான 131-வது அரசியலமைப்பு சட்டத்திருத்த மசோதா, இன்று மக்களவையில் போதிய ஆதரவு இல்லாததால் தோல்வியடைந்தது. மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை கிடைக்காததே இதற்குக் காரணமாக அமைந்தது. இந்த மசோதாவில் ஆதரவாக எவ்வளவு வாக்குகள்.. எதிராக எவ்வளவு வாக்குகள் வந்தது என்பது தொடர்பாக நாம் பார்க்கலாம்.
மத்திய அரசு லோக்சபாவில் பெண்கள் இட ஒதுக்கீடு மசோதாவை கொண்டு வந்துள்ளது. இட ஒதுக்கீடு மசோதாவுடன் தொகுதி மறுசீரமைப்பு மசோதாவையும் மத்திய அரசு நாடாளுமன்றத்தில் முன்மொழிந்தது. நேற்று இந்த மசோதா தாக்கலான நிலையில், இது தொடர்பாக சுமார் 12 மணி நேரம் வரை விவாதம் நடைபெற்றது.

தோல்வி
முதல் நாளான நேற்று பிரதமர் நரேந்திர மோடி இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் உரையாற்றினார். அதன் பிறகு பல்வேறு எம்பிக்களும் இது தொடர்பாக லோக்சபாவில் பேசினர். இரண்டாம் நாளான இன்று அமித் ஷா, ராகுல் காந்தி உள்ளிட்டோரும் இந்த மசோதாக்கள் குறித்து உரையாற்றினர். அதைத் தொடர்ந்து வாக்கெடுப்பு நடந்த நிலையில், அது தோல்வியில் முடிந்தது. மத்திய அரசால் பெரும்பான்மைக்குத் தேவையான வாக்குகள் பெற முடியவில்லை.
எவ்வளவு வாக்குகள்
- லோக்சபா மொத்த எம்பிக்கள் 543
- இன்று அவைக்கு வருகை தந்தவர்கள் 489
- ஆதரவாக விழுந்த வாக்குகள் (Ayes) 298
- எதிராக விழுந்த வாக்குகள் (Noes) 230
- வாக்கெடுப்பைப் புறக்கணித்தவர்கள் 0
- தேவைப்பட்ட வாக்குகள் 326
முதலில் ஆதரவாக 278 வாக்குகளும் எதிராக 211 வாக்குகளும் பதிவானதாக சொல்லப்பட்டது. இருப்பினும், இறுதியில் அது 290 மற்றும் 230 என மாற்றப்பட்டது.
கணக்கு என்ன!
அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரும் மசோதா என்பதால், அவையில் அன்றைய தினம் பங்கேற்று வாக்களித்தவர்களில் மூன்றில் இரண்டு பங்கு, அதாவது 66.6% உறுப்பினர்களின் ஆதரவு கட்டாயம் தேவை. இன்றைய வாக்கெடுப்பில் 489 உறுப்பினர்கள் பங்கேற்றனர். அதன்படி, மசோதா வெற்றி பெற 326 வாக்குகள் தேவைப்பட்டது. அரசுக்கு ஆதரவாக 290 வாக்குகள் கிடைத்தன. இது எதிராகப் பதிவான 230 வாக்குகளை விடக் குறைவு என்றாலும் கூட 3ல் இரு பங்கு என்ற மேஜிக் நம்பரை எட்ட போதுமான வாக்குகளைப் பெறத் தவறிவிட்டது. அதாவது தேவையான எண்ணிக்கையை விட சுமார் 46 வாக்குகள் குறைவாக இருந்ததால் மசோதா தோல்வி அடைந்தது.
புதிதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தாமல் 2011 கணக்கெடுப்பை வைத்துத் தொகுதி மறுசீரமைப்பு செய்வதையும், பெண்களுக்கான இட ஒதுக்கீட்டை அதோடு இணைப்பதையும் எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த்தன. அதாவது பெண்கள் இட ஒதுக்கீடு மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் அனைவரும் ஆதரவு கொடுத்தனர். அதேநேரம் அதைத் தொகுதி மறுசீரமைப்பு மசோதாவுடன் எதிர்க்க மட்டும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
எதிர்க்கட்சிகள் ஆதரவு இல்லை
இதன் காரணமாகவே 211 உறுப்பினர்கள் மசோதாவுக்கு எதிராக வாக்களித்தனர். இதன் காரணமாக 2029ம் ஆண்டிற்குள் மகளிர் இட ஒதுக்கீட்டை அமல்படுத்தும் அரசின் திட்டத்திற்கு முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது. பெண்கள் நலன் என்ற பெயரில் கொண்டு வரப்பட்டாலும், தொகுதி மறுசீரமைப்பு மூலம் மாநிலங்களின் அரசியல் அதிகாரத்தை மாற்றும் முயற்சியாகவே இதனை எதிர்க்கட்சிகள் விமர்சித்தன. 326 என்ற இலக்கை எட்ட முடியாமல் போனது, நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் நம்பிக்கையைப் பெறுவதில் அரசுக்கு ஏற்பட்ட பின்னடைவாகவே கருதப்படுகிறது.
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications