மகளிர் இடஒதுக்கீடு.. உண்மையான நோக்கத்துடன் அமல்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது - மோடி!
டெல்லி: மகளிர் இடஒதுக்கீட்டை, அதன் உண்மையான நோக்கத்துடன் அமல்படுத்தப்பட வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியிருக்கிறார்.
மக்களவை மற்றும் மாநிலங்களவை கட்சி குழு தலைவர்களுக்கு இது குறித்து மோடி கடிதம் எழுதியிருக்கிறார். அக்கடிதத்தில், 2029ல் மகளிர் இடஒதுக்கீட்டை அமல்படுத்துவது காலத்தின் கட்டாயம் என்று கூறியிருக்கிறார்.

பிரதமர் நரேந்திர மோடி, மகளிர் இடஒதுக்கீடு சட்டத்தை உடனடியாகவும் முழுமையாகவும் செயல்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டதாகக் கூறியுள்ளார். 2029ஆம் ஆண்டு நடைபெறும் மக்களவைத் தேர்தல் மற்றும் சட்டமன்றத் தேர்தல்கள் பெண்களுக்கு இடஒதுக்கீட்டுடன் நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் திட்டவட்டமாக வலியுறுத்தியுள்ளார்.
நாடாளுமன்றத்தின் மூன்று நாள் சிறப்பு அமர்வுக்கு முன்னதாக, மோடி மக்களவை மற்றும் மாநிலங்களவையின் சபாநாயகர்களுக்குக் கடிதம் ஒன்றை எழுதினார். 'நாரி சக்தி வந்தன் அதினியம்' என்று அழைக்கப்படும் இந்த மகளிர் இடஒதுக்கீடு சட்டத் திருத்தங்களை நிறைவேற்ற அனைவரும் ஒரே மனதுடன் ஒன்றிணைய வேண்டும் என்று அதில் வலியுறுத்தினார்.
ஏப்ரல் 11 அன்று எழுதிய தனது கடிதத்தில், “விரிவான ஆலோசனைகளுக்குப் பிறகு, நாரி சக்தி வந்தன் அதினியம் சட்டத்தை நாடு முழுவதும் அதன் உண்மையான உணர்வுடன் செயல்படுத்துவதற்கான நேரம் வந்துவிட்டது” என்று பிரதமர் மோடி குறிப்பிட்டிருந்தார். 2029ஆம் ஆண்டில் நடைபெறும் மக்களவைத் மற்றும் சட்டமன்றத் தேர்தல்கள், பெண்களுக்கு இடஒதுக்கீட்டுடன் நடத்தப்படுவது மிக அவசியம் என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
பட்ஜெட் கூட்டத்தொடர் நீட்டிக்கப்பட்டு, ஏப்ரல் 16 முதல் 18 வரை மூன்று நாட்களுக்கு நாடாளுமன்றத்தின் சிறப்பு அமர்வு நடத்தப்படுகிறது. மகளிர் இடஒதுக்கீடு சட்டம் அமலுக்கு வந்தால், மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை 816 ஆக உயர்ந்து, அவற்றில் 273 இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்படும்.
மக்களவை மற்றும் மாநில சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீட்டை வழங்கும் இந்தச் சட்டம், 2023ஆம் ஆண்டில் அரசியலமைப்பில் திருத்தம் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications