பிஎம் கிசான்: விவசாயிகளுக்கு மோடி இன்று சர்ப்ரைஸ்? பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா ரூ.2000
டெல்லி: பிஎம் கிஸான் திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு 19வது தவணையாக சுமார் 10 கோடி விவசாயிகளுக்கு ரூ.23,000 கோடியை பிரதமர் மோடி இன்று விடுவிக்க உள்ளார்.. 18வது தவணைத் தொகை விவசாயிகளின் கணக்கில் வரவு வைக்கப்பட்டு சுமார் 4 மாதங்கள் ஆகியுள்ள நிலையில், 19வது தவணைக்காக விவசாயிகள் இன்று ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.
இந்தியாவின் முதுகெலும்பாக கருதப்படும் விவசாயிகளின் பொருளாதார வளர்ச்சிக்காகவும், குறைந்த நிலத்தில் விவசாயம் செய்யும் விவசாயிகளை ஊக்குவிக்கவும் நாட்டின் பெரும்பாலான மாநிலங்களில் உள்ள விவசாயிகளுக்காக கொண்டுவரப்பட்ட திட்டம்தான், பிஎம் கிசான் எனப்படும் "பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா" திட்டம்.

விவசாயிகளுக்கு பலன்கள்
விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காப்பதற்காகவே மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட இந்த திட்டத்தை பிரதம மந்திரி கௌரவ நிதி உதவித்திட்டம் என்பார்கள். இந்த திட்டத்தின்கீழ், நாட்டிலுள்ள விவசாயிகளுக்கு பண உதவியை மத்திய அரசு வழங்கி வருகிறது..
ஒரு தவணைக்கு 2000 ரூபாய் வீதம், ஒரு வருடத்துக்கு மொத்தம் ரூ.6000 பயனாளிகளின் வங்கி கணக்கில் நேரடியாகவே டெபாசிட் செய்யப்படுகிறது. இந்த பணத்தில், விவசாயிகள் தங்கள் மானிய விலையில் விவசாயத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி கொள்ளலாம்.. இதுவரை 18 தவணைகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், 19-வது தவணையாக ரூ.2 ஆயிரம் இன்று வழங்கப்படும் என அறிவிப்பு வெளியாகியிருந்தது.
இன்று தவணை தொகை விடுவிப்பு
அதன்படி, பீகார் மாநிலம் பாகல்பூரில் இன்று நடைபெறும் நிகழ்ச்சியில், ரூ.22 ஆயிரம் கோடியை பிரதமர் மோடி விடுவிப்பார் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து மத்திய வேளாண் துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் சொல்லும்போது, "பிரதமரின் கிசான் நிதியுதவி திட்டம் தொடங்கி 6 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இது நாடு முழுவதும் உள்ள விவசாயிகளின் நிதிநிலையை தொடர்ந்து பலப்படுத்தும். இந்த திட்டம் தொடங்கியது முதல் இதுவரை ரூ.3.46 லட்சம் கோடி விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது" என்றார்.
E-KYC செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது
பிரதமர் கிசான் யோஜனாவிற்கு E-KYC செய்வது கட்டாயமாகிவிட்டது.. இந்த உதவித்தொகையை வழக்கமாக பெறும் விவசாயிகள் தங்களது வங்கிக் கணக்கில் இ-கே.ஒய்.சி-யை செய்து முடித்திருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது..
செல்போனில் PM கிசான் யோஜனா செயலியின் உதவியுடன் E-KYC மேற்கொள்ளலாம். இந்த செயலியின் உதவியுடன், விவசாயிகள் OTP அல்லது கைரேகை இல்லாமல் முக அங்கீகார அம்சத்தின் மூலம் வீட்டில் இருந்தபடியே e KYC-ஐ எளிதாகச் செய்து முடிக்கலாம். தவணை விடுவிக்கப்பட்ட பிறகும், பல விவசாயிகள் தங்கள் கணக்கில் பணம் வரவில்லை என்று புகார் கூறுவதுண்டு... E-KYC நிறைவு செய்யாத விவசாயிகளின் கணக்குகளில் பணம் வராது என்பதால், e-KYC முடித்திருப்பது நல்லது.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர்












Click it and Unblock the Notifications