சூரியனின் அதீத வெப்பத்தால்.. ஆதித்யா எல் 1 இல் உள்ள 7 கருவிகள் நெருப்பில் உருகிவிடுமா?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஆதித்யா எல் 1 இல் செல்லும் கருவிகள் எல்லாம் சூரியனின் வெப்பத்தால் உருகிவிடுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

பூமியில் இருந்து சூரியன் பல கோடி கிலோமீட்டருக்கு அப்பால் உள்ளது. இந்நிலையில் தான் ஆதித்யா எல்-1 விண்கலம் மூலம் சூரியனை ஆய்வு செய்ய இஸ்ரோ முடிவு செய்தது. இதற்காக ஆதித்யா எல்-1 விண்கலம் சூரியன் ஆய்வுக்காக இன்று விண்ணில் பாய்ந்தது.

Wont the instruments in Aditya L1 not melt because of the sun?

இன்று காலை 11.50 மணிக்கு ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து பிஎஸ்எல்வி-சி57 ராக்கெட் ஆதித்யா எல்-1 விண்கலம் விண்ணில் பாய்ந்தது. அடுத்த ஒரு மணிநேரத்துக்குள் பிஎஸ்எல்வி - 57 ராக்கெட்டில் இருந்து ஆதித்யா எல்-1 விண்கலம் தனியாக பிரிக்கப்பட்டு பூமியின் சுற்றுவட்டபாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது.

இனி ஆதித்யா எல் -1 விண்கலத்தின் பூமி சுற்றுவட்டபாதைய மெல்ல மெல்ல உயர்த்தப்படும். 4 மாத பயணத்துக்கு பிறகு 125 நாட்கள் கடந்து பூமிக்கும் சூரியனுக்கும் இடையே இருக்கும் லாக்ரேஞ்ச் பாயிண்ட் 1 எனும் இடத்தில் ஆதித்யா எல்-1 விண்கலம் நிலைநிறுத்தப்படும். அதன்பிறகு அதில் இருக்கும் 7 கருவிகள் சூரியனை ஆய்வு செய்து முக்கிய விஷயங்களை இஸ்ரோவுடன் பகிர்ந்து கொள்ள இருக்கிறது.

ஆதித்யா எல்-1 விண்கலத்தின் நோக்கம் என்பது சூரியன் குறித்து அதிகமாக புரிந்து கொள்வதை நோக்கமாக கொண்டது. சூரியனின் மேற்புறம், வெளிப்புற அடுக்குகளை ஆய்வு செய்ய உள்ளது. குறிப்பா சூரிய புயல் குறித்த தகவல்களை திரட்ட உள்ளது. சூரிய புயல் என்பது சூரியனில் இருந்து வெளிவரும் மின்காந்த தன்மை கொண்ட துகள்களை குறிக்கும். இது பூமிக்குள் நுழைந்தால் செயற்கைகோள்கள் முடங்கலாம். இதனால் இந்த ஆய்வு மிக முக்கியத்துவமானது.

அதாவது ஆதித்யா எல் -1 விண்கலத்தில் மொத்தம் 7 பே லோடுகள்(கருவிகள்) உள்ளன. அதில் சூரிய புற ஊதா இமேஜிங் தொலைநோக்கி, கொரோனா இமேஜிங் ஸ்பெக்டரோஸ்கோபி, சோலார் குறைந்த ஆற்றல் எக்ஸ்ரே ஸ்பெக்ட்ரோமீட்டர், உயர் ஆற்றல் எல் 1 ஆர்பிட்டிங் எக்ஸ்ரே ஸ்பெக்ட்ரோமீட்டர், ஆதித்யா சூரிய காற்று துகள் பரிசோதனை, பிளாஸ்மா அனலைசர், உள்ளிட்ட கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த கருவிகள் தான் சூரியவெப்பத்தில் உருகிவிடுமோ என பலரும் கேள்வி எழுப்பி உள்ளனர்.

இவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு பணிகளை செய்யும். நிலவிலும் இது போல் ஒவ்வொரு பணிகளுக்கும் ஒவ்வொரு கருவிகள் பொருத்தப்பட்டிருந்தன. நிலவு குளிர்ந்த பகுதி என்பதால் அதில் உள்ள கருவிகள் ஒவ்வொன்றும் அதன் பணிகளை செய்து பூமிக்கு தகவல்களை அனுப்பி வருகிறது. அப்படியிருக்கும் போது சூரியன் மிகவும் வெப்பமான பகுதி, இந்த பகுதிக்கு செல்லும் ஆதித்யாவில் உள்ள கருவிகள் ஆய்வு செய்யும் போது வெப்பத்தால் உருகுமா என்ற கேள்வி பலரின் மண்டைக்குள் உதித்துள்ளது. இதுதொடர்பாக பலரும் இணையதளத்தில் தேடும் நிலையில் அதற்கான விடையை நாங்கள் கூறுகிறோம்.

இதற்கு விடை என்னவென்றால் ஆதித்யா எல்-1 விண்கலம் என்பது பூமிக்கும், சூரியனுக்கும் இடையே லாக்ரேஞ்ச் பாயிண்ட் 1 என்பதில் நிநைிறுத்தப்பட உள்ளது. இந்த இடம் பூமியில் இருந்து 15 லட்சம் கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. அதாவது பூமிக்கும்-சூரியனுக்கும் இடையேயான தொலைவின் அடிப்படையில் பார்த்தால் இது வெறும் ஒரு சதவீதம் தான். இன்னும் புரியும் படி கூற வேண்டும் என்றால் ஆதித்யா எல்-1 விண்கலம் நிலைநிறுத்தப்படும் லாக்ரேஞ்ச் 1 பாயிண்ட் பகுதியில் இருந்து சூரியன் என்பது பல கோடி கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

இதனால் ஆதித்யா எல்-1 விண்கலத்துக்கு எந்த பாதிப்பும் வராது. அதாவது சூரியனின் மேற்பரப்பில் வெப்பநிலையானது சுமார் 5,500 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என கூறப்படுகிறது. இந்த பகுதியை சுற்றியுள்ள பகுதிக்கு பெயர் கரோனா ஆகும். இது சூரிய கிரகணம் நடக்கும் போது இந்த கரோனா பகுதியை வெறும் கண்களால் பார்க்கலாம். இங்கு செல்வது மிகவும் ஆபத்தானது.

ஆனால் நமது நாட்டின் ஆதித்யா எல்-1 விண்கலம் அங்கு செல்லவில்லை. மாறாக லாக்ரேஞ்ச் பாயிண்ட் 1 பகுதியில் இருந்தபடியே சூரியனை ஆய்வு செய்ய உள்ளது. இங்கு சூரியனின் வெப்பம் என்பது நமது பூமியில் இருப்பதை விட சில நூறு டிகிரி செல்சியஸ் தான் அதிகமாக இருக்கும். அந்த வெப்பத்தை கணக்கீட்டு இஸ்ரோ விஞ்ஞானிகள் ஆதித்யா எல்-1 விண்கலத்தை வடிவமைத்துள்ளனர். இதனால் சூரியனால் ஆதித்யா எல்-1 விண்கலத்துக்கு எந்த பாதிப்பும் வராது.

மேலும் இன்னொரு உதாரணத்தையும் நாம் கூறலாம். அதாவது Temperature, Heat என்பதை நாம் நமது இஷ்டத்துக்கு வெப்பம், வெப்பநிலை என்கிறோம். ஆனால் அறிவியல் ரீதியாக பார்த்தால் இந்த 2க்கும் வித்தியாசம் என்பது அதிகம் உள்ளது. அறிவியல் எப்போதும் Temperature, Heat ஆகியவற்றை பிரித்தே பார்க்கிறது. அதாவது temperature என்பதை வெப்பநிலை எனவும், Heat என்பதை வெப்பம் என கூறுவது பொருத்தமாக இருக்கும். மேலும் இரண்டுக்கும் உள்ள வித்தியாசத்தை நாம் உதாரணம் மூலம் நன்றாக புரிந்து கொள்ளலாம்.

அதாவது ஒரு மைக்ரோவேவ் ஓவனில் டீ வைக்கிறோம் என வைத்து கொள்வோம். இதில் மைக்ரோவேவ் ஓவனில் இருந்து வரும் Temperature மூலம் டீ தயாராகிறது. இதில் டீயை சூடாக்க பயன்படுத்தப்பட்ட ஆற்றல் தான் Temperature அதாவது வெப்பம் என்கிறோம். மாறாக மைக்ரோவேவ் ஓவனில் இருந்து டீயை வெளியே எடுக்கிறோம். அப்போது டீ இருக்கும் பாத்திரத்தின் சூட்டை நம் கை உணரும். இதைத்தான் நாம் Heat அதாவது வெப்பம் என்கிறோம்.

அதாவது நம் கை வெப்பத்தை உணர ஒரு டீ இருந்த பொருள் ஒன்று தேவையானதாக உள்ளது. ஆனால் விண்வெளியை பொறுத்தமட்டில் அது ஒரு வெற்றிடமாகும். வெப்பத்தை கடத்த ஒரு பொருளும் அங்கு இல்லை. இதனால் தான் கடந்த 2021ம் ஆண்டு டிசம்பர் மாதம் நாசாவின் பார்க்கர் விண்கலம் சூரியனின் கரோனா பகுதிக்கு சென்றது. அங்கு பல லட்சம் டிகிரியில் வெப்பம் இருந்தது. இருப்பினும் விண்கலம் உருகவே இல்லை. ஏனென்றால் விண்வெளியில் ஆயிரக்கணக்கான டிகிரியில் வெப்பநிலை இருந்தாலும் வெப்பத்தை உணர முடியாது. இதற்கு விண்வெளி வெற்றிடமாக இருப்பது தான் காரணம். இந்த கான்செப்ட் மற்றும் சூரியனுக்கும் ஆதித்யா எல்-1 விண்கலத்துக்கும் இடையேயான தூரம் உள்ளிட்டவற்றின் அடிப்படையில் பார்த்தால் ஆதித்யா எல்-1 விண்கலத்துக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+