உலகம் முழுவதும் கொரோனாவிற்கு 10.43 கோடி பேர் பாதிப்பு -7.62 கோடி பேர் மீண்டனர்

உலகம் முழுவதும் கொரோனாவிற்கு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10,43,73,039 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவிற்கு ஒரே நாளில் 4,40,211 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Subscribe to Oneindia Tamil

டெல்லி: உலகம் முழுவதும் கொரோனாவிற்கு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10,43,73,039 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவிற்கு ஒரே நாளில் 4,40,211 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவில் இருந்து 7,62,30,585 பேர் குணமடைந்துள்ளனர்.

சீனாவில் கடந்த 2019ஆம் ஆண்டு இறுதியில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் கடந்த ஓராண்டுக்கும் மேலாக ஆட்டி படைத்து வருகிறது. ஐரோப்பிய நாடுகள், ஆசிய நாடுகள், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருகிறது.

World covid 19 update: 10.43 crore people affected by the corona - 7.62 recovered

உலகம் முழுவதும் இன்று ஒரே நாளில் 14,433 பேர் கொரோனாவிற்கு மரணமடைந்தனர். கடந்த ஓராண்டில் கொரோனாவிற்கு மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 22,61,980 பேராக உயர்ந்துள்ளது.

கொரோனா அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவிற்கு 1,11,707 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் அமெரிக்காவில் கொரோனாவிற்கு பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2,70,24,351 பேராக உயர்ந்துள்ளது. அமெரிக்காவில் ஒரே நாளில் 3,608 பேர் மரணமடைந்துள்ளனர். கொரோனாவிற்கு மரணமடைந்தவர்கள் எண்ணிக்கை 457,832 பேராக அதிகரித்துள்ளது.

பிரேசில் நாட்டில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. பிரேசிலில் ஒரே நாளில் 56,240 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. பிரேசிலில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 9,28,6,256 பேராக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் கொரோனாவிற்கு 1,240 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் கொரோனா பாதிப்பிற்கு ஆளாகி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 226,383 பேராக உயர்ந்துள்ளது. பிரேசிலில் 8,160,929 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+