உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 17.99 கோடி; பிரேசிலில் 86,833 பேருக்கு பாதிப்பு
டெல்லி: உலக நாடுகளின் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 17.99 கோடியாக உள்ளது. பிரேசில் நாட்டில் ஒருநாளில் 86,833 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா 2-வது அலை ஓய்ந்த நிலையில் சில நாடுகளில் 3-வது அலை தாக்குதல் தொடங்கி இருக்கிறது. அதேபோல் புதியதாக டெல்டா பிளஸ் என்ற கொரோனா வைரஸ் தாக்குதலும் அதிகரிக்க தொடங்கி உள்ளது.
தற்போதைய நிலையில் உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 17,99,09,683. உலகம் முழுவதும் கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 38,97,349. உலக நாடுகளில் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 16,46,66,496.

பிரேசிலில் மீண்டும் பாதிப்பு அதிகரிப்பு
பிரேசிலில் மீண்டும் பாதிப்பு அதிகரித்துள்ளது. பிரேசிலில் ஒரே நாளில் 86,833 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் ஒரே நாளில் 2,080 பேர் கொரோனாவால் இங்கு மரணம் அடைந்துள்ளனர்.

இந்தியாவில் ஒருநாள் பாதிப்பு
இந்தியாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 54,393 ஆக உள்ளது. இந்தியாவில் நேற்று மட்டும் 1,129 பேர் மரணம் அடைந்துள்ளனர். அதேநேரத்தில் 68,529 பேர் நேற்று கொரோனா சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பினர்.

கேரளாவில் அதிகம்
இந்தியாவில் கேரளாவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகமாக உள்ளது. கேரளாவில் நேற்று 12,617 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இங்கு 141 பேர் கொரோனாவால் நேற்று மரணம் அடைந்தனர். மொத்தம் 11,730 பேர் கொரோனா சிகிச்சைக்குப் பின் டிஸ்சார்ஜ் ஆகினர்.

தமிழக பாதிப்பு நிலவரம்
தமிழகத்தில் நேற்று 6,895 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருந்தது. தமிழகத்தில் 194 பேர் கொரோனாவால் நேற்று மட்டும் உயிரிழந்தனர். 11,144 பேர் கொரோனா சிகிச்சைக்குப் பின்னர் வீடு திரும்பினர்.

மகாராஷ்டிராவில் மரணங்கள் அதிகம்
நாட்டில் மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா மரணங்கள் எண்ணிக்கை இன்னமும் குறையாமல் உள்ளது. மகாராஷ்டிராவில் ஒருநாள் பாதிப்பு 8470 ஆகவும் ஒருநாள் மரணங்கள் எண்ணிக்கை 482 ஆகவும் இருந்தது. தமிழகத்தில் 9043 பேர் கொரோனா சிகிச்சைக்குப் பின்னர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்
-
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
இந்தியா கையில் 5ம் தலைமுறை Su-57 போர் விமானம்.. ரஷ்ய அதிபர் புதினின் பெரிய ஆஃபர்.. மோடி ஏற்பாரா? -
இனி இந்தியாவை தொட முடியாது.. ரஷ்யா அனுப்பிய புதிய எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்.. செம -
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
ஜப்பானில் பாகிஸ்தான் கட்டிய மசூதி.. இடிக்க அதிரடியாக உத்தரவிட்ட அதிகாரிகள்.. என்ன காரணம்? -
ஒரு சுறா கோபப்பட்டால் உங்களுக்கு இன்டர்நெட் கிடைக்காது.. ஹாட்ஸ்பாட் சென்னை தான் தெரியுமா -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது












Click it and Unblock the Notifications