வெடிக்க போகுது உலக போர்.. இன்னும் 10 நாள் தான் டைம் இருக்கு.. பிரபல இந்திய ஜோதிடரின் பகீர் கணிப்பு
டெல்லி: சர்வதேச பதற்றங்கள் அதிகரித்து வரும் சூழலில், மிக விரைவில் உலகப் போர் தொடங்க உள்ளதாக இந்தியாவைச் சேர்ந்த பிரபல ஜோதிடர் ஒருவர் பகீர் கணிப்பை வெளியிட்டுள்ளார். தற்போதுள்ள கிரக அமைப்புகள் உலகப் போர் உருவாகும் சூழல் இருப்பதையே காட்டுவதாகத் தெரிவித்துள்ள அவர், சில நாட்களில் மிக மோசமான நிகழ்வு நடக்கவும் வாய்ப்பு இருப்பதாகக் கணித்துள்ளார்.
வரும் காலம் குறித்துத் தெரிந்து கொள்ள எப்போதும் அனைவருக்கும் ஆசை இருக்கவே செய்யும். இதன் காரணமாகவே ஜோசியம் மீது பலருக்கும் ஆர்வம் இருக்கும். குறிப்பாக நமது நாட்டில் ஜோசியத்திற்கு மவுசு ரொம்ப அதிகம் தான்.

பகீர் கணிப்பு: இதற்கிடையே இந்தியாவைச் சேர்ந்த பிரபல ஜோதிடர் ஒருவர் இன்னும் சில நாட்களில் மூன்றாம் உலகப் போர் தொடங்க உள்ளதாக பகீர் கணிப்பை வெளியிட்டு உள்ளது. அவரது இந்த கணிப்பு சமூக வலைத்தளங்களில் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. இது தொடர்பான விவரங்களைப் பிரபல ஆங்கிலப் பத்திரிக்கை வெளியிட்டுள்ளது.
உலகப் போர்: உலகில் நடக்கும் அனைத்து நிகழ்வுகளையும் தன்னால் முன்கூட்டியே கணிக்க முடியும் என்கிறார் இந்த பிரபல ஜோதிடர் குஷால் குமார்.. இஸ்ரேல் ஹமாஸ் மோதல், ரஷ்யா மற்றும் நேட்டோ நாடுகளிடையேயான மோதல், வடக்கு மற்றும் தென் கொரியா பிரச்சினை, சீனா மற்றும் தைவான் பதற்றம் எனப் பல சர்வதேச நிகழ்வுகளை இவர் துல்லியமாகக் கணித்து இருக்கிறார். இதற்கிடையே சில நாட்களில் உலகப் போர் உருவாக வாய்ப்பு இருப்பதாக அவர் கணித்துள்ளார். குறிப்பாக ஜூன் 29ம் தேதி அழிவு நாளாக இருக்கலாம் என்றும் அவர் கணித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், "நான் இந்து கலாச்சாரத்தை அடிப்படையாகக் கொண்ட வேத ஜோதிடத்தை வைத்துக் கணிப்புகளை வெளியிட்டு வருகிறேன். கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களின் அமைப்பை வைத்து இதைக் கணிக்கிறோம். இப்போது இருக்கும் கிரகணங்களை வைத்துப் பார்க்கும் போது சில நாட்களில் உலகப் போர் தொடங்கலாம்.. இன்று முதல் ஜூன் 29ஆம் தேதிகளுள் உலகப் போர் தொடங்கும் அபாயம் இருக்கிறது.
கிரகணங்களின் அமைப்பை வைத்துப் பார்க்கும் போது, அனைத்து நிகழ்வுகளும் உலகப் போர் நிகழும் என்றே காட்டுகிறது. அதேநேரம் இது மிஸ்ஸாகவும் கூட வாய்ப்பு இருக்கிறது" என்றும் அவர் தெரிவித்தார்.
அதிகரிக்கும் பதற்றம்: தனது கணிப்பு ஏன் நடக்கும் என்பதை விளக்க அவர் தற்போது நடக்கும் பல நிகழ்வுகளை எடுத்துக் காட்டாகக் குறிப்பிட்டார். இஸ்ரேல் மற்றும் லெபனான் மோதல், வட கொரிய தென் கொரியா மோதல்களை எல்லாம் தான் துல்லியமாகக் கணித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
மேலும், கியூபா விவகாரம், ரஷ்யா மோதல், சீனா தைவான் பதற்றம் ஆகியவற்றையும் துல்லியமாகக் கணித்ததாகத் தெரிவித்த அவர், இந்த சர்வதேச நிகழ்வுகளே உலகப் போர் தொடங்குவதைக் காட்டுவதாகவும் குறிப்பிட்டார். இதுபோன்ற பதற்றங்கள் வரும் காலங்களில் மேலும் அதிகரிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
நோஸ்ட்ராடாமஸ் கணிப்பு: இது ஒரு பக்கம் இருக்க நோஸ்ட்ராடாமஸ் என்ற ஒரு பிரெஞ்சு ஜோதிடருடன் கணிப்பும் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. 1500களில் பிரான்ஸில் வாழ்ந்த இந்த ஜோதிடர் வரும் காலம் குறித்து பல்வேறு கணிப்புகளை விட்டுச் சென்றிருந்தார். இந்த 2024ஆம் ஆண்டில் உலகில் கடுமையான வானிலை நிகழ்வுகள் ஏற்படும் எனக் கணித்துள்ளார். மேலும், சர்வதேச அளவில் மோதல்கள் அதிகரிக்கும் என்றும் புதிய போப் கிடைப்பார் என்றும் கணித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications