உலகம் முழுவதும் கொரோனாவின் பிடியில் இருந்து 31 கோடி பேர் மீண்டனர் - 57 லட்சம் பேர் மரணம்

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து ஒரே நாளில் 2,360,877 பேர் குணமடைந்தனர். இதன் மூலம்கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 31,01,52,192 பேராக உயர்வு.

Subscribe to Oneindia Tamil

டெல்லி: உலகம் முழுவதும் ஒரே நாளில் 28,69,540 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து ஒரே நாளில் 2,360,877 பேர் குணமடைந்துள்ளனர். ஒரே நாளில் 11,077 பேர் கொரோனாவால் மரணமடைந்தனர்.

கடந்த 2019ஆம் ஆண்டு இறுதியில் இருந்தே உலக மக்கள் கொரோனாவின் பிடியில் சிக்கியுள்ளனர். 40 கோடி பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 57 லட்சம் பேரின் உயிரை கொரோனா வைரஸ் குடித்துள்ளது. உலகம் முழுக்க பல கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

கொரோனாவின் புது புது வேரியண்ட்கள் உற்பத்தியாகிக் கொண்டே இருக்கின்றன. உருமாற்றம் அடைந்த கொரோனாவிற்கு புதுப்புது பெயர்கள் வைக்கப்படுகின்றன. டெல்டா, டெல்டா பிளஸ் பரவல் தீவிரமடைந்த நிலையில் தற்போது ஓமிக்ரான் பரவல் வேகம் அதிகரித்துள்ளது.

Worldwide, 31 crore people have been rescued from the grip of the corona - 57 lakh deaths

உலகம் முழுவதும் ஒரே நாளில் 28,69,540 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதன் மூலம் மொத்தம் 39,12,40,859 பேருக்கு கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா பாதிப்பில் இருந்து ஒரே நாளில் 2,360,877 பேர் மீண்டுள்ளனர். கொரோனா பாதிப்பில் இருந்து மொத்தம் 31,01,52,192 பேர் குணமடைந்துள்ளனர். உலகம் முழுவதும் ஒரே நாளில் 11,077 பேர் கொரோனாவால் மரணமடைந்துள்ளனர். உலகம் முழுவதும் மொத்தம் 57,42,902 பேர் கொரோனா தொற்றினால் மரணமடைந்துள்ளனர்.

அமெரிக்காவில் கொரோனாவால் ஒரே நாளில் 2,59,339 பேர் பாதிப்பு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 7,74,74,730 பேராக உயர்வு. ஒரே நாளில் கொரோனாவால் 2,464 உயிரிழப்பு, அமெரிக்காவில் மொத்தம் 9,24,375 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில் ஒரே நாளில் 1,25,941 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் ஒரே நாளில் 1,056 பேர் உயிரிழப்பு, உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5,01,143 பேராக உயர்வு.

பிரேசில் நாட்டில் கொரோனாவால் ஒரே நாளில் 2,19,298 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரே நாளில் 1,068 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். பிரான்ஸ் நாட்டில் ஒரே நாளில் 2,41,049 பேர் பாதிப்பு, 355 பேர் ஒரே நாளில் உயிரிழந்தனர். ரஷ்யா நாட்டில் 1,68,201 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 682 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

ஓமிக்ரான் மட்டுமே கடைசி கொரோனா இல்லை என்றும் கொரோனாவில் இருந்து தப்பிக்க தடுப்பூசி மட்டுமே ஒரே ஆயுதம் என்றும் உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+