திடீர் வேகமெடுக்கும் கொரோனா... தடுப்பூசிகளிலும் பக்கவிளைவு.. விழிபிதுங்கும் ஐரோப்பிய நாடுகள்!
டெல்லி: களவில் கொரோனா பாதிப்பு 12.1 கோடியைக் கடந்துள்ள நிலையில், ரத்து உறைதல் பிரச்சினை காரணமாகப் பல ஐரோப்பிய நாடுகள் ஆக்ஸ்போர்ட் தடுப்பூசியைத் தடை செய்துள்ளன.
உலகளவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களாகவே பிரேசில் நாட்டில் கொரோனா பரவல் தீவிரமாக உள்ளது. பிரேசில் நாட்டிற்குப் பிறகு அமெரிக்காவில் கொரோனா பரவல் தீவிரமாக உள்ளது.
கொரோனா பரவலைத் தடுக்க உலக நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகின்றன. இருப்பினும், மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தினால் ஏற்படும் பொருளாதார பாதிப்புகள் மோசமாக இருக்கும் என்பதால் அது குறித்து எந்த நாடுகளும் சிந்திப்பதில்லை.

Array
பிரேசில் நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 84,124 பேருக்குப் புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல பிரேசில் நாட்டில் 50,753 பேருக்குப் புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த இரண்டு நாடுகளில் முறையே 2,798 பேரும் 1,127 பேரும் கொரோனா காரணமாக ஒரே நாளில் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவில் இதுவரை 3,01,90,361 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல 5,49,246 பேர் உயிரிழந்துள்ளனர். பிரேசில் நாட்டில் 1,16,09,601 பேருக்கு இதுவரை கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல 2,82,400 பேர் உயிரிழந்துள்ளனர்.

பிரான்ஸ், இந்தியா
இந்த இரு நாடுகளுக்குப் பின்னர் பிரான்ஸ் நாட்டில் கொரோன பரவல் தீவிரமாக உள்ளது. அங்குக் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக சுமார் 30 ஆயிரம் பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதற்கு அடுத்தபடியாக இந்தியாவில் சுமார் 29 ஆயிரம் பேருக்குப் புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் 197 பேர் நேற்று ஒரே நாளில் உயிரிழந்துள்ளனர்.

உலகளவில் கொரோனா பாதிப்பு
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் உலகெங்கும் 4,36,377 பேருக்குப் புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் மூலம உலகளவிலான கொரோனா பாதிப்பு 12,12,15,268 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல நேற்று ஒரே நாளில் சிகிச்சை பலனிற்றி 9,538 பேர் உயிரிழந்துள்ளனர். ஒட்டுமொத்தமாக இதுவரை 26,81,621 பேர் உயிரிழந்துள்ளனர்

தடுப்பூசியில் சிக்கல்
கொரோன பரவல் ஐரோப்பிய நாடுகளில் தீவிரமடைந்துள்ளன. இதன் காரணமாக அங்கு தடுப்பூசி செலுத்தும் பணிகளை வேகமெடுத்துள்ளன. இருப்பினும், ஆக்ஸ்போர்ட் ஆராய்ச்சியாளர்களின் தடுப்பூசியை எடுத்துக் கொண்டவர்களில் சிலருக்கு ரத்த உறைதல் பிரச்சினை ஏற்பட்டுள்ளதால், அந்தத் தடுப்பூசியைப் பயன்படுத்த ஜெர்மனி, பிரான்ஸ், நெதர்லாந்து உள்ளிட்ட பல ஐரோப்பிய நாடுகள் தடை விதித்துள்ளன. இதனால் தடுப்பூசி செலுத்தும் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications