மீண்டும் தீவிரமடையும் கொரோனா வைரஸ்.... இந்த முறை தப்புமா ஐரோப்பிய நாடுகள்?
டெல்லி: கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 4,52,192 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், வைரஸ் பரவல் மோசமாக உள்ள டாப் 10 நாடுகளில் 6 நாடுகள் ஐரோப்பாவைச் சேர்ந்தவையாக உள்ளன.
உலகெங்கும் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 4,52,192 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாகப் பிரேசில் நாட்டில் 74,285 பேருக்கும் அமெரிக்காவில் 68,658 பேருக்கும் பிரான்ஸ் நாட்டில் 25,279 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் இதுவரை உலகெங்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,16,213,135 ஆக உயர்ந்துள்ளது. அமெரிக்க, இந்தியா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளில் அதிக பேருக்கு கொரோனா தொற்று உறதி செய்யப்பட்டுள்ளது. உலகெங்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களில் மூன்றில் ஒருவர் இந்த நாடுகளைச் சேர்ந்தவர்கள்.
அதேபோல சிகிச்சை பலனிற்றி கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 10,133 பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவில் 2,052 பேரும் பிரேசில் நாட்டில் 1,786 பேரும் மெக்சிகோ நாட்டில் 857 பேரும் உயிரிழந்துள்ளனர். உயிரிழப்புகளும் உலகெங்கும் தற்போது 2,17,42,924 பேர் கொரோனா காரணமாகச் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் வைரஸ் பரவல் மிகவும் மோசமாக உள்ளது. உலகெங்கும் வைரஸ் பாதிப்பு மோசமாக உள்ள டாப் 10 நாடுகளில் 6 நாடுகள் ஐரோப்பாவைச் சேர்ந்தவையாக உள்ளன. அதேபோல உயிரிழப்புகளும் ஐரோப்பிய நாடுகளிலேயே அதிகமாக உள்ளன.
பிரிட்டன் நாட்டில் கண்டறியப்பட்ட வைரஸ் பரவல் பல்வேறு தற்போது பல்வேறு ஐரோப்பிய நாடுகளிலும் வேகமாகப் பரவுவதால் அந்நாட்டு மக்களிடையே இது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பிரிட்டன் உள்ளிட்ட பல்வேறு ஐரோப்பிய நாடுகளும் தடுப்பூசி செலுத்தும் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளன.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications