ஹரியானா: பாஜகவுக்கு குத்து கன்பார்ம்- ராகுலுடன் மல்யுத்த வீரர்கள் வினேஷ் போகத், புனியா சந்திப்பு!
டெல்லி: ஹரியானா சட்டசபை தேர்தலில் புதிய திருப்பமாக மல்யுத்த வீரர்களான வினேஷ் போகத் மற்றும் பஜ்ரங் புனியா இருவரும் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்களாக களமிறங்க உள்ளனர். இதனை உறுதிப்படுத்தும் வகையில் மல்யுத்த வீரர்களான வினேஷ் போகத் மற்றும் பஜ்ரங் புனியா இருவரும் லோக்சபா எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் காந்தியை சந்தித்து ஆலோசனை நடத்தியிருப்பது ஹரியானாவில் பரபரப்பையும் பெரும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
ஹரியானா மாநிலத்தில் 90 சட்டசபை தொகுதிகளுக்கு அக்டோபர் 5-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. அனைத்து வாக்குகளும் அக்டோபர் 8-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

ஹரியானா தேர்தல் தொடர்பான கருத்து கணிப்புகளில் காங்கிரஸ் அமோக வெற்றியைப் பெற்று மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆளும் பாஜகவுக்கு சொற்பமான இடங்கள்தான் கிடைக்கும் என்கின்றன கருத்து கணிப்புகள்.
ஆனால் காங்கிரஸ் கட்சியோ பாஜகவுக்கு அந்த சொற்ப இடங்கள் கூட கிடைத்துவிடக் கூடாது என்பதில் தீவிரமாக உள்ளது. இதனால் ஆம் ஆத்மி, சமாஜ்வாதி கட்சி, ஜேஜேபி கட்சி ஆகியவற்றுடன் தீவிரமான கூட்டணிப் பேச்சுவார்த்தையை நடத்துகிறது காங்கிரஸ். அதாவது ஹரியானாவில் இருக்கிற அத்தனை எதிர்க்கட்சிகளையும் ஒன்று சேர்த்து களமாடுவது என்கிற முனைப்பில் உள்ளார் லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி.
இதன் அடுத்த கட்டமாக பாஜகவுக்கு எதிராக டெல்லி வீதிகளில் உக்கிரமாகப் போராடிய மல்யுத்த வீரர்களையும் ஹரியானா தேர்தல் களத்தில் காங்கிரஸ் களமிறக்க்வது உறுதியாகி உள்ளது. பாரீஸ் ஒலிம்பிக் போட்டிகளில் பதக்க வாய்ப்பை திட்டமிட்ட சதியால் பறிகொடுத்த வினேஷ் போகத், பஜ்ரங் புனியா இருவரும் ராகுல் காந்தியை இன்று சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
ராகுல் காந்தியுடனான பஜ்ரங் புனியா, வினேஷ் போகத் சந்திப்பைத் தொடர்ந்துதான் இருவரும் ஹரியானா தேர்தல் களத்திலும் களமாடப் போவது உறுதியாகி இருக்கிறது. இது ஹரியானாவில் ஆளும் பாஜகவுக்கு பெரும் அதிர்ச்சியாகவும் பார்க்கப்படுகிறது.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications