Year Ender 2023: தெற்கில் பவர்! வடக்கே மோசம்.. காங்கிரஸ் கட்சியை பதம் பார்த்த 2023: எப்படி இருந்தது?
டெல்லி: 2023ஆம் ஆண்டு இதோ இன்னும் சில நாட்களில் நிறைவடைகிறது. இந்த ஆண்டில், இந்திய அளவில் பல்வேறு முக்கிய அரசியல் நிகழ்வுகள் நடந்தேறின. இன்னும் சில மாதங்களில் லோக்சபா தேர்தல் நடைபெற உள்ள நிலையில், காங்கிரஸ் கட்சிக்கு இந்த வருடம் எப்படிப் போனது? பார்க்கலாம்.
ராகுல் யாத்திரை: மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக, நாட்டையே புரட்டிப் போடும் ஒரு அலையை உருவாக்கும் திட்டத்தோடு, ராகுல் காந்தி, "பாரத் ஜோடோ யாத்திரை"யை நடத்தினார். குமரி முனையில் தொடங்கி, காஷ்மீர் வரை, மாநிலங்களை குறுக்கும் நெடுக்குமாகக் கடந்தார் ராகுல் காந்தி. 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் 7ஆம் தேதி தொடங்கி 2023ஆம் ஆண்டு ஜனவரி 30 வரை 150 நாட்களில் சுமார் 4 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்தை நடையாக நடந்து கடந்தார். அவரது பாதயாத்திரையின்போது பல்வேறு கட்சியினரும், பிரபலங்களும் அவரோடு ஆங்காங்கே இணைந்து நடந்தனர். இப்படியாக, காங்கிரஸ் கட்சிக்கு இந்த ஆண்டே ராகுல் யாத்திரையின் பிரமாண்டத்தோடுதான் தொடங்கியது.

தேர்தல் நிலை: 2023 பிப்ரவரியில் நடைபெற்ற 3 மாநில தேர்தலில் காங்கிரஸ் கட்சி சோபிக்கவில்லை. ராகுல் யாத்திரைக்குப் பிறகு நடைபெற்ற தேர்தல் என்பதால், இதில் தாக்கம் நிலவும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தேர்தல் முடிவு என்னவோ, காங்கிரஸ் கட்சியினருக்கு சோகம் தான். திரிபுராவில் ஆட்சியைத் தக்கவைத்தது பாஜக. மேகாலாயா, நாகாலாந்து ஆகிய மாநிலங்களிலும் பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.
ராகுல் எம்.பி பதவி: ராகுல் காந்தியின் பேச்சு தொடர்பாக அவதூறு வழக்கு தொடரப்பட்டு, 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. குஜராத் உயர்நீதிமன்றமும் தண்டனையை உறுதி செய்தது. இதையடுத்து, எம்.பி. பதவியில் இருந்து அவர் தகுதி இழப்பு செய்யப்பட்டார். குஜராத் உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட மேல் முறையீட்டு வழக்கில், ராகுல் காந்தியின் தண்டனையை உச்ச நீதிமன்றம் நிறுத்திவைத்தது. இதையடுத்து 4 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் எம்.பி பதவியைப் பெற்றார் ராகுல் காந்தி.
தெற்கில் ஆட்சி: கடந்த மே மாதம் கர்நாடகாவில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், வென்று, ஆட்சியைப் பிடித்தது காங்கிரஸ். அங்கு முன்னர் பாஜக ஆட்சி இருந்து வந்த நிலையில், பாஜகவை அரியணையில் இருந்து அகற்றி ஆட்சியைக் கைப்பற்றியது காங்கிரஸ். தெற்கில் தமது ஆளுகையை நிறுவியது காங்கிரஸ் கட்சி. கர்நாடகா தேர்தல் வெற்றி, காங்கிரஸ் கட்சியினருக்கு பெரிய நம்பிக்கையை அளித்தது.
இந்தியா கூட்டணி: அடுத்த ஆண்டு நடைபெறும் லோக்சபா தேர்தலில், பாஜகவை ஆட்சியில் இருந்து அகற்றுவதற்கான வேலைகளில் தீவிரமாக ஈடுபடத் தொடங்கியது காங்கிரஸ் கட்சி. பல்வேறு கட்சிகளுடனான கருத்து முரண்களைக் கடந்து, ஒரே அணியாக கைகோர்க்கும் முயற்சிகளை முன்னெடுத்தது. ஜூன் மாதம் நாடு தழுவிய அளவில் எதிர்க்கட்சிகளின் கூட்டம் பீகார் மாநிலம் பாட்னாவில் நடத்தப்பட்டது. இதில் 16 கட்சிகள் பங்கேற்றன.
அடுத்த கூட்டம் கர்நாடகா மாநிலம் பெங்களூரில் நடந்தது. அப்போது, எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு "இந்தியா கூட்டணி" (I.N.D.I.A) என பெயர் வைக்கப்பட்டது. மூன்றாவது கூட்டம் மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் நடைபெற்றது. நான்காவது கூட்டம் டெல்லியில் நடைபெறுகிறது. தேர்தல் நெருங்கும் சூழலில், இந்தக் கூட்டணியை வெற்றியை நோக்கி அழைத்துச் செல்வதில் பெரும் பொறுப்பு, நாடு முழுவதும் விரவிப் பரவியுள்ள தேசியக் கட்சியான காங்கிரஸுக்கு உள்ளது.
மீண்டும் கை கொடுத்த தெற்கு: அண்மையில் நடந்து முடிந்த மத்திய பிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா, சத்தீஸ்கர், மிசோரம் என 5 மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், தெலுங்கானாவில் மட்டுமே ஆட்சியைப் பிடித்தது காங்கிரஸ். அங்கு ஆட்சியில் இருந்த பிஆர்எஸ் கட்சியின் கேசிஆரை அகற்றி, முதலமைச்சராக ஆட்சியில் அமர்ந்தார் காங்கிரஸ் கட்சியின் ரேவந்த் ரெட்டி.
அதே சமயம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் மாநிலங்களில் பாஜக ஆட்சியைக் கைப்பற்றியது. குறிப்பாக, ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி இதற்கு முன்னர் ஆட்சியில் இருந்து வந்த சூழலில், அதனை பறிகொடுத்தது. பெரும்பாலான கருத்துக்கணிப்புகளுக்கு மாறாக, சத்தீஸ்கரில் அதிக இடங்களில் வெற்றி பெற்று காங்கிரஸ் கட்சிக்கு அதிர்ச்சி கொடுத்தது பாஜக.
ஏற்ற இறக்கம்: 2023ஆம் ஆண்டில், வடக்கில் 2 மாநிலங்களில் ஆட்சியைப் பறிகொடுத்தாலும், தெற்கில் 2 மாநிலங்களில் ஆட்சியைப் பிடித்துள்ளது காங்கிரஸ் கட்சி. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், இந்த ஆண்டு நடைபெற்ற நிகழ்வுகள் காங்கிரஸ் கட்சிக்கு மிகப்பெரிய படிப்பினைகள். வரும் ஆண்டில், அக்கட்சி அடைய வேண்டிய இலக்கை, இந்த ஆண்டு செய்த முயற்சிகளே தீர்மானிக்கக்கூடும்.
-
காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலில் சாதி பெயர் இருந்தது தட்டச்சு பிழை - சிங்காநல்லூர் ஸ்ரீநிதி விளக்கம்! -
Melur Candidate: மேலூர் வேட்பாளர் தேர்வில் இழுபறி ஏன்? இவர்தான் காரணமா? 2 நாள்தானே இருக்கு! -
“நான் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவன்..” திருமாவளவன் அறிவித்த வேட்பாளர் பேச்சால் குழப்பம்! -
மேலூரில் மீண்டும் இறங்கும் மாணிக்கம் தாகூர் மாமனார்? சீட்டை பெற போராடும் கதர்கள்.. என்ன நடக்கிறது? -
“தனது பெயர்ப் பலகையை காப்பாற்றிக் கொள்ள டெல்லிக்கு ‘காவடி’ தூக்குகிறார் எடப்பாடி” - ஸ்டாலின் தாக்கு! -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள்












Click it and Unblock the Notifications