இதெல்லாம் எதுக்காம்? யானை மேல் உட்கார்ந்து யோகா செய்யப் போய் பரிதாபமாக பொத்தென விழுந்த பாபா ராம்தேவ்
டெல்லி: யோகா மாஸ்டர் பாபா ராம்தேவ் யானை மீது அமர்ந்து யோகா செய்ய முயன்றபோது கீழே விழுந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
பதஞ்சலி நிறுவனம் என்ற பெயரில் பல்வேறு பொருட்களை தயார் செய்து விற்பனை செய்து வருபவர் யோகா மாஸ்டர் பாபா ராம்தேவ். இவரது நிறுவனம் கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்துவிட்டதாக அறிவித்து பெரும் சர்ச்சையில் சிக்கியது.

யானை மீது யோகா
இதேபோல் பல சர்ச்சைகளில் சிக்கியவர் பாபா ராம்தேவ். இந்த நிலையில் தமது யோகா சாகசங்களில் ஒன்றாக யானை மீது யோகாசனம் செய்ய முடிவெடுத்தார் ராம்தேவ்.

அலங்கரித்த யானை
இதற்காக அலங்கரிக்கப்பட்ட யானை மீது ஏறி ஹாயாக அமர்ந்தார். வழக்கம் போல கால்களை மடித்து யோகாசனம் செய்ய முயன்றார் ராம்தேவ். அதுவரை அமைதியாக பொறுமையாக நின்று கொண்டிருந்தது யானை.

யானை மீதிருந்து விழுந்த ராம்தேவ்
பின்னர் திடீரென லேசாக யானை நகர்ந்தது. இதனால் யானை மீது அமர்ந்திருந்த பாபா ராம்தேவ் அப்படியே உட்கார்ந்த நிலையிலேயே பொத்தென கீழே விழுந்தார். அவர் கீழே விழுந்ததை பார்த்தவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
|
வைரலாகும் வீடியோ
கீழே விழுந்த உடனே ராம்தேவ் எதுவும் நடக்காதவர் போல எழுந்து நின்றார். இருந்தபோதும் அவருக்கு முதுகு தண்டில் பலத்த அடிபட்டு உள்ளதாக கூறப்படுகிறது. ராம்தேவ், யானை மீது அமர்ந்திருந்த நிலையில் கீழே பொத்தென விழும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக ஷேர் செய்யப்பட்டும் வருகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications